Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

ஸெர்யோஷா புத்தக விமர்சனம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

book-reviewகள்ளம் கபடமற்ற குழந்தையின் நிலையிலிருந்து கேள்விகளாலும் சந்தேகங்களாலும் அறிவை விசாலமாக்கிக் கொள்ளத் தொடங்கி இருக்கும் ஒரு சிறுவனின் கதை. புதிய தந்தைக்கும் ஸெர்யோஷா என்கிற சிறுவனுக்கும் முகிழ்கின்ற சிறு நேசத்தின் வாசம் இக்கதை எங்கும் வீசி நிற்கிறது.ஸெர்யோஷாவின் வாழ்வில் சிறிய மகிழ்ச்சிகளும் உண்டு.

வாட்டும் கேள்விகளும் உண்டு.  வாசிப்பவரை சில நேரம் குழந்தையாக்கி மகிழவைக்கிறார் வேரா பனோவா. சில நேரம் ஏக்கத்தில் திண்டாடவைக்கிறார். நீங்கள் மீண்டுமொருமுறை குழந்தையாக வாழ்ந்து பார்க்க நேரிடலாம்.

அறிமுகக்காட்சியிலேயே “பெரியவர்கள் சூனியக்காரியைப் பற்றி கதைகள் படித்துவிட்டு அதே மூச்சில் “ ஸெர்யோஷா , சூனியக்காரிகள் உண்மையில்  இருப்பதில்லை “ என்று சொன்னால் பொதுவாக இந்த புத்தகங்களை நம்புவது எப்படியாம்? “ என்று உள்ளுக்குள் பெரிய சிந்தனையாளனாகத்தான் நமக்கு அறிமுகமாகிறான்.

 

ஸெர்யோஷா நேர்மையான கீழ்படிதலுள்ள எளிமையான சிறுவன். பெற்றோராக இருந்தால் இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றவராக இருக்க விருப்பமுண்டாக்க போதுமான குணங்கள் அவனுக்கு இருக்கிறது. நண்பர்கள் குழுவுடன் ஆனந்தமாக பொழுதைக் கழித்தபடி இருந்தவனைப் பார்த்து , தாய் “ நம் வீட்டில் ஒரு அப்பா இருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது ‘ என்று சொல்லும்போது அவனுக்கு அப்படி தோன்றவில்லையெனினும் அம்மாவுக்கு அப்படி தோன்றுகிறது என்றால் நாம் அதை ஆமோதிப்பது நல்லது என்ற தெளிவு இருக்கிறது.

 

அவனால் சரியாக எண்ணங்களை வெளிப்படுத்தத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் குழந்தையின் மன அலைகளை நாம் அறிவது எவ்வாறு? பொதுவாகவே பலரும் மரத்தை நறுக்கி நறுக்கி போன்சாய் செய்வது போல குழந்தைகளை சொல்பேச்சு கேட்க வைப்பதில் கவனமாயிருந்துவிடுவதுண்டு. தன் வளர்ச்சியாக அவர்களின் சிந்தனை போகும் பாதையைப் பற்றி பெரியவர்கள் அறிவதுமில்லை முயல்வதுமில்லை.

 

அப்பா இல்லாவிட்டால் மோசம் தானே என்று கேட்டுவிட்டபின் தான் அப்பா இருப்பது மோசமா இல்லாதிருப்பது மோசமா என அவன் சீர்தூக்கிப்பார்க்கிறான். போரில் இறந்துபோன அப்பாவின் புகைப்படத்தினை மட்டும் பார்த்து அவனால் அன்பு கொள்ளமுடியவில்லை.

எப்படியும் நமக்கு நன்மை செய்பவராய் இருப்பார் என்ற நம்பிக்கையில் புது அப்பாவின் வரவை எதிர்கொள்கிறான்.

 

குழந்தைகள் நேரடியாகக் கேட்டு தெளிவுபடுத்திகொள்வார்கள். ஒளிவு மறைவில்லை. ’நீ என்னை இடுப்புவாரால் அடிப்பாயா’ என்று புது அப்பாவிடம் நேரடியாகக் கேட்டு தெளிந்து அமைதியுறுகிறான். அது போல தங்களிடம் சொல்வது போல் பெரியவர்கள் செயல்படுகிறார்களா என்று கவனிப்பதில் சமர்த்தர்கள். ஞாயிறு புதியசைக்கிள் வாங்கித்தருவதாக ஒப்புக்கொண்ட பின் அதை நிறைவேத்தி தருகின்ற புது அப்பாவான கொரஸ்தல்யோ நேர்மையானவன் . ஸெர்ன்யோன்ஸாவின் உணர்வுகளை மதிப்பவன் என்ற ரீதியில் அவன் மனதில் இடம்பிடிக்கிறான்.

 

பெரியவர்கள் தேவையற்ற வார்த்தைகளை கொட்டி இறைப்பதாக உணர்கிறான் ஸெர்யோஷா . தேநீரைக் கொட்டியதற்காக வருத்தப்படும்  அவனை தேவையற்ற வார்த்தைகளால் அத்தை அர்ச்சிப்பது போன்றோ ,அம்மா அவன் எல்லாவற்றிற்கும் தயவு செய்து என்று இணைத்து பேசவேண்டும் என்பதற்காக படும் அவஸ்தைகளோ அற்ற கொரஸ்தல்யோ வித்தியாசமானவனாகத் தெரிகிறான்.

 

மிட்டாய் இருப்பதாக ஏமாற்றி தாளை தருகின்ற பெத்யா மாமாவை முட்டாள் என்று விமர்சித்தது சரியானது என்றும் அவன் ஆட்களை புரிந்துகொள்ளக்கூடிய அறிவாளி என்றும் கொரஸ்தல்யோ சொல்கிறபோது நன்றியுடையவனாகிப் போகிறான். ’சண்டைக்குப் போவாய் அப்போது காயங்களை கண்டு அழுது நிற்பாயோ பையனே’ என்கிற போது நெஞ்சு நிமிர்த்தி வீரனாகிறான். கொரஸ்தல்யோவின் வார்த்தைகள் ஒவ்வொன்றாலும் அவன் உருக்கொண்டுவந்தான்.

 

கொள்ளுப்பாட்டியின் இறுதிச்சடங்கில் “ வழியனுப்ப வந்தாயா உனக்கு  என்ன அவள் மேல் பிரியமா ?”என்று கேட்கும் தோஸ்யா அத்தைக்கு .. ”பிரியமில்லை” என்று தானே சொல்வான். இனி அவள் இல்லாத வீட்டில் அவன் விருந்துண்ணப் போனால் மிரட்டவோ குற்றம் கண்டுபிடிக்கவோ யாரும் இருக்கமாட்டார்கள் என்பதில் அவன் எளிய உள்ளம் அமைதியுறுகிறது. எல்லாரும் இறப்பார்கள் என்றாலும் நீ இறக்கமாட்டாய் என்று சொல்கிற தந்தையை அவன் நம்புகிறான்.

 

கொரஸ்தல்யோவின் பண்ணைக்கு செல்லும்போது அவன் ஏன் தினமும் அவசரமாக பண்ணைக்கு ப் போகிறான் . அவன்வராவிட்டால் வேலையாட்களுக்கு இன்னின்னது செய்யவேண்டுமென்று எப்படித்தெரியும் என்று உணர்கிறான். பண்ணையாளின் மேல் கோவம் காட்டினாலும் வேலையை விட்டு நீக்காத அவன் செய்கையைக் கண்டு சர்வ வல்லமை மட்டுமல்ல இவன் நல்லவனும் கூட என்று பெருமிதம் கொள்கிறான்.

 

விண்மீன்களைப் பற்றியும் கிரகங்களைப் பற்றியும் அறிந்துகொண்ட நாட்களில் அவன் சிந்தனை நீள்கிறது.

 

“செவ்வாய்கிரகம் பெரியதாக இருந்து அதில் மனிதர்கள் வசிக்கலாம் என்றால் ம் ஒரு வேளை என்னையே போன்ற பையன் இதே போன்ற சறுக்கு வண்டியுடன் அங்கே இப்போது நின்று கொண்டிருக்கலாம், ஒருவேளை அவன் பெயரும் ஸெர்யோசாவாக இருக்கலாம்’ என்று வியந்து போகும் அச்சிறுவன் இது போன்ற சிந்தனைகளை பகிர்ந்தால் ஏனையோர் கேலி செய்வதுண்டு. ஆனால் கொரஸ்தெல்யோவ் அவனை மதிப்பான். “அதெற்கென்ன நடக்கக்கூடியதுதான்’ என்பான்

 

மற்றொரு குழந்தையை தாய் பெற்றெடுக்க இருக்கையில் தந்தையிடம் தனக்கு பையன் வேண்டுமென்பது விருப்பமென்றும் பக்கத்துவீட்டு பெண்ணைப்போல தான் அக்குழந்தையை பாதுக்காக்க கடமையானவனாகிப் போவானோ என்றெல்லாம் அவன் சிந்திக்கத்தொடங்குகிறான். எல்லா ஏற்பாடுகளையும் செய்கிற தாயும் தந்தையும் இன்னமும் மருத்துவமனையிலிருந்து குழந்தையை கொண்டுவரத்தாமதப்படுத்துவது தான் ஏனென்று அவனுக்கு புரியவில்லையாம்.

 

”குழந்தைகள் எங்கிருந்து கொண்டு வரப்படுகின்றன என்பது தெரிந்ததுதான். அவை ஆஸ்பத்திரியில் விலைக்கு வாங்கப்படுகின்றன. ஒருத்தி ஒரே சமயத்தில் இரண்டு குழந்தைகளை விலைக்கு வாங்கினாள். எதனாலோ அவள் முழுவதும் ஒரே மாதிரியான குழந்தைகளை வாங்கினாள். ஒரு குழந்தையின் கழுத்தில் மச்சம் இருக்கிரதாம். இன்னொன்றுக்கு மச்சம் கிடையாதாம். இந்த மச்சத்தைக் கொண்டுதான் அவள் குழந்தைகளை அடையாளம் கண்டு கொள்கிறாளாம். ஒரே மாதிரிக் குழந்தைகள் அவளுக்கு எதற்ஓ தெரியவில்லை. வெவ்வேறு விதமான குழந்தைகளை வாங்கி இருக்கலாமே “

 

நண்பன் வாஸ்யாவின் மாமாவைப்போல அனைவரும் பச்சைக்குத்திக்கொள்கையில் தானும் பெரியவன் என்று நிரூபிக்க பச்சைக்குத்திக்கொண்டதில் இருந்து அவனுக்கு உடல்நலமின்றி போகின்றது.   படுக்கையும் வீடே கதியாகவும் இருந்த சிறுவனுக்கு சிறைச்சாலையிலிருந்து வருகின்ற வேற்றாள் சுவாரசியத்தையும் கேள்விகளையும் கொண்டுவருகின்றான். அவனிடம் பாஷா அத்தை காட்டுகின்ற வேற்றுமைகள் அவனுக்கு மனிதரிடத்தில் நல்லவன் கெட்டவன் இன்னும் இன்னும் பல வேறுபாடுகள் இருப்பதை குழப்பத்தோடு அறிகிறான். அலமாரித்தட்டில் இருக்கும் இரண்டு வகை சோப்பில் , ரோஜா நிற சோப்புக்கு பதில் பழுப்பு நிற சோப்பால் கைகழுவிக்கொள்ளும் வேற்றாளைப் பார்த்து இப்படி யோசிக்கிறான்.

 

“ ரோஜா சோப்பினால் கைகழுவிக்கொள்ள வேண்டுமென்று அவனுக்குத் தெரியாதோ அல்லது மேஜை விரிப்பையும் இன்றைய சூப்பையும் போலவே அவனுக்கு ரோஜா சோப்பும் ஆகாதோ தெரியாது. “

 

சிறைக்கு சென்றவன் கெட்டவன் என்றாகிறது. ஆனால் அவனுக்கு இரக்கம் காட்டுவது எதற்கு என்று குழம்புகிறான். திருடினால் பிடிப்பார்கள் என்று தெரிந்து ஏன் திருடினான். பள்ளியில் புத்தகம் திருடும் சிறுவனுக்கு சிறை கிடையாதென்றால் ஏன் ? அவன் கேள்விக்கு எரிச்சலுறும் அம்மாவிடம் கொரெஸ்தெல்யோவ் பின்பு விளக்குகிறான்.

 

”அவன் என்ன வேண்டுகிறான்  தெரியுமா ? அவனுக்கு ஆமாம் அல்லது இல்லை என்ற பதில் தான் வேண்டும் இடைப்பட்ட பதில் அவனுக்குப் புரிவதில்லை.” குழந்தையின் அனைத்துக் கேள்விக்கும் பதில் தரவேண்டாம் என்று நினைக்கின்ற அம்மாவிற்கு தெரியாமல் தந்தை அவனுக்கு பதிலளிக்கத்தான் செய்கிறார்.

 

கதை சொல்லக் கேட்ட மாத்திரம் பெரியவர்களுக்கு வந்துவிடுகின்ற வேலையைப்பற்றியும் அவனுக்கு மிக வருத்தமுண்டு. எப்படியோ கதை சொல்ல வராத கொரெஸ்தெல்வைக்கூட ஒத்தாசை செய்து அவன் கதை சொல்லப்பழக்கிவிட்டிருந்தானாம். இத்தனை ஒட்டிப்பழகி அவன் உணர்வாகிப்போன தந்தையையும் தாயையும் அவன் பிரிந்திருக்கவேண்டிய கட்டம் வந்தால் அவனால் தாங்கமுடியுமா. கொரெஸ்தெல்யோவின் வேலைகாரணமாக வெளியூர் செல்லவேண்டி வரும்போது இவன் உடல்நிலையைக் காரணம் காட்டி சிறிது நாட்கள் அதே ஊரில் அவன் தங்கியிருக்கும் படி சொல்கிறார்கள்.

 

அன்றிலிருந்து அவன் சிந்திப்பதெல்லாம் தான் நோயாய் இருப்பதால் அவர்களுக்கு அவன் சுமையாகிவிடுவான் என்ற எண்ணம் தான். அன்புக்குரியது எதுவும் சுமையாக இருக்காது என்று சிந்திக்கத்தொடங்கிவிட்டவன் . தந்தையின் விளக்கமெல்லாம் கேட்டபின்னும் தான் தொல்லைக்குள்ளானாலும் அவர்களோடு வாழவே ஆசைப்படுவதை சொல்லத் தெரியவில்லை. அழுவதில்லை என்ற வாக்கிற்கு கட்டுப்பட்டு அவன் அவர்கள் கிளம்பும் நேரம்வரை உள்ளுக்குள் குமைகின்ற பகுதிகள் நெகிழ்ச்சி தருபவை. துயரத்தில் கூனிக்குறுகி அவன் நடக்கையில் “ தயாரகு கிளம்பு ’என்கிற தந்தையின் குரலைக் கேட்டதும் நம்பமுடியாத மகிழ்ச்சியில் அவன் கொரெஸ்த்ல்யோவ் நம்மை நேசிக்கிறான் என்று அவன் பெருமிதம் கொள்கிறான்.

 

கதை முழுதும் சிறுவனின் மனவோட்டங்களாலும் தந்தைக்கும் மகனுக்குமான உறவின் அழகுணர்ச்சியிலும் முடிவான மகிழ்ச்சியிலும் வாசிப்பவருக்கு இனிமையானதொரு அனுபவத்தைத் தருகிறார் வேரா பனோவா. இவர் ஸ்டாலின் பரிசைப் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆவார். குழந்தையைப் பற்றிய கதையாக இருந்தாலும் இதனை பெற்றவர்களுக்காகத்தன்  வெரா பனொவா எழுதி இருக்கிறார். வாசிப்பவர்கள் இனி குழந்தையை அணுகும்போது அவர்கள் எண்ணவோட்டம் என்னவாக இருக்குமென்று யோசிக்கத்தொடங்குவார்கள். மேம்போக்காக யோசித்தால் மிகச்சாதரணமான விசயத்தைக் கையாண்டது போலத்தெரிந்தாலும் உள்பொதிந்திருக்கும் விசயம் மிக மேன்மையானது. குழந்தைகள் உலகம் நம்மிலிருந்து வேறுபட்டது. நாம் அதைத் தாண்டி வந்ததை மறந்து அவர்களை தவறாக கையாள்வதை

தவிர்க்க உணர்த்துகிறார் வேரா பனோவா.

 

புத்தகம் : ஸெர்யோஷா என்றொரு சிறுவன்

எழுதியவர்: வேரா பனோவா

மொழிபெயர்ப்பு: ஜெபி

வெளியீடு ஜெபி அண்ட் கோ.

 

- கயல் லக்ஷ்மி

 

 

 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (4)
புத்தக விமர்சனம்
4 வியாழக்கிழமை, 08 செப்டம்பர் 2011 16:16
பழனிவேல்
சிறுவர்களுக்கான புத்தகத்தைப் பற்றிய கருத்துகளை அற்புதமாக தந்துள்ளீர்கள்..! வாழ்த்துக்கள்..

இதைப்போன்ற நூல்கள் இணையவழியே வாங்க.. நூல்உலகம் வாங்க..!
நல்லதொரு புத்தகம் பற்றிய அறிமுகம்
3 ஞாயிற்றுக்கிழமை, 22 ஆகஸ்ட் 2010 02:53
சென்ஷி
நன்றிகள்
karuvelanizhal
2 சனிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2010 11:36
rajaram
fantastic!
manggai.blogspot.com
1 சனிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2010 03:09
மங்கை
நெகிழ்ச்சியான கதை... எடுத்து சொன்னவிதமும் நல்லா இருக்கு... கதையை படித்தால் சிறுவனின் உலகத்திலேயே வாழ்ந்து பார்த்த அனுபவம் கிடைக்குமென்று தோன்றுகிறது...கதையை படித்தால்

வாசகர் கருத்துக்கள், category: "கட்டுரை"

மாசில்லா பிள்ளைகள் உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 8 (அனலில் இட்ட புழுக்களாய் துடித்தோம்)
தமிழினம் உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 7 (தோல்வி அல்ல தொய்வு)
சாட்டயடி உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 6 (பொட்டல் வெளியில் பொட்டிழந்தோர்)
Sad இறுதி நாட்களும் எனது பயணமும்
பண்பின் பயனாக, விடுதலையை வளர்க்க வேண்டும் உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 6 (பொட்டல் வெளியில் பொட்டிழந்தோர்)
uavum unarvum உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 5 (பிணவாடையில் கரைந்துபோன காற்று)
pinam thinnigal உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-4 (யாருக்கும் யாரும் துணையில்லை)
KADAVUL ENGEY? உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-4 (யாருக்கும் யாரும் துணையில்லை)
அக்கினிக் குஞ்சுகள்! உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் – 2
unarvukali erake vitha naram உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-1

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 39 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை