Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

எடை குறைய எளிய வழிகள் - II

மின்னஞ்சல் அச்சிடுக PDF

இதற்கு முந்தைய கட்டுரையில் நெகடிவ் கலோரி உணவுகளை அதிகம் உட்கொள்வதின் மூலம் எடை குறைய வழி உண்டு என்று பார்த்தோம். இன்னும் சில எளிய வழிகளை இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

vegetableதண்ணீர் வைத்தியம்:

தண்ணீர் அதிகம் குடிப்பதன் மூலமும் எடையினைக் குறைக்க இயலும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கீழ்க்கண்ட முறையில் நீர் அருந்துவதின் மூலம் எப்படி எடையை இழக்கலாம் என நோக்குவோம்.

தண்ணீர் அதிகம் அருந்துவதன் மூலம் எடை குறைய கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றுங்கள்.

1. காலை எழுந்து பல் துலக்கியவுடன் பொறுக்கும் சூட்டில் ( டீ/காபி எந்தச் சூட்டில் அருந்துகிறீர்களோ அந்த அளவு சூடு) ஒரு தம்ளர் நீர் அருந்தவும்.
2. காலை உணவுக்கு முன் குறைந்தது அரை லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும்.
3. காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடையில் மீண்டும் (குறைந்தது) ஒரு லிட்டர் தண்ணீரும், மதிய உணவிற்கும் மாலை சிற்றுண்டிக்கும் இடையே குறைந்தது அரை லிட்டர் தண்ணீரும் உட்கொள்ளுதல் வேண்டும்.
4. மறுபடியும் இரவு உணவுக்குமுன் ஒரு லிட்டரும் இரவு உணவிற்குப் பின் அரை லிட்டரும் நீரருந்த வேண்டும்.

முடிந்த வரை சற்றுச் சூடான நீரையே அருந்துங்கள். அது சீரண சக்தியை அதிகரிக்கச் செய்வதோடு, கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. இந்தத் தண்ணீர் மருத்துவத்தின் மூலம் எடை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தலாம்.

உணவில் செய்யவேண்டிய சின்னச்சின்ன மாற்றங்கள்:

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள். முடிந்தால், காபி/டீ குடிப்பதற்குப் பதில் ஒரு தம்ளர் சூடான வெந்நீரில் ஒரு தேக்கரண்டி(spoon) தேன் கலந்து அரை மூடி எலுமிச்சை பிழிந்து குடித்தால், உடலில் உள்ள கொழுப்பை இப்பானம் கரைக்கிறது.

அதெல்லாம் முடியாது. எனக்குக் காபி /டீ குடித்தே ஆகவேண்டும் என்கிறவரா நீங்கள்? அப்படியானால், கருப்புக்காபியோ(Black Coffee), கருப்புத் தேனீரோ(Black Tea) அருந்துங்கள். அதற்கும் ஒத்துக்கொள்ள மாட்டீர்களா? சரி, சர்க்கரையைத் தவிருங்கள். மிகக் கடினமாகத் தோன்றுகிறதா? அழகான, 'சிக்'கென்ற உடம்புடன், உங்களுக்கு மிக விருப்பமான உடையை அணிந்து, சுறுசுறுப்பாக இருப்பதாகக் கற்பனை செய்யுங்கள். தன்னால், இந்த ஆலோசனைகளைப் பின்பற்றத் தொடங்கிவிடுவீர்கள்.

அடுத்து, ஒரே தானியத்தை நாள் முழுவதும் சாப்பிடாமல் (அரிசி அல்லது கோதுமை மட்டும் என்றில்லாமல்) விதவிதமான தானியங்களைப் பயன் படுத்துங்கள். காலையில் கோதுமை ரொட்டி, மதியம் அரிசிச் சோறு, இரவு பழங்கள் அல்லது ஓட்ஸ் கஞ்சி அருந்துங்கள்.

கூடியவரை, எல்லா வேளைகளிலும் பச்சைக்காய்கறிகள்/பழங்களை உட்கொள்ளுங்கள்(வாழைப்பழம், கிழங்குவகைகளைத் தவிர்த்துவிடுங்கள்).

பொரித்த உணவுவகைகளையும், இனிப்பு வகைகளையும் சாப்பிடவேண்டும் என்ற ஆவல் எழும்பொழுது, உங்கள் உடம்பைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிற்றுண்டி(Tiffin) அல்லது சிறு தீனி (Snacks) தின்னும் ஆவல் எழும்பொழுது, அரிசிப்பொரி, நறுக்கிய பழங்கள்/பச்சைக்காய்கறிகளின் கலவை(salad), உலர் பழங்கள் மற்றும் கொட்டைகள் (dry fruits & nuts)- உலர் திராட்சை, பாதாம், முந்திரி, நிலக்கடலை போன்றவற்றைச் சாப்பிடவும்.



இனிப்பு சாப்பிடும் வேட்கையிருப்பின், சர்க்கரையால் செய்த இனிப்புக்களைத் தவிர்த்து வெல்லத்தால் செய்த இனிப்புகளைச் சிறிதளவு சாப்பிடவும்.

காலையில் அரசனைப் போலவும், இரவில் பிச்சைக்காரனைப் போலவும் சாப்பிடவேண்டும் என்னும் முதியோர் வாக்கைப் பின்பற்றுங்கள். காலை உணவில் பழங்களையும், மதிய உணவில் பச்சைக்காய்கறிகளையும் (காரட், வெள்ளரி, முட்டைக்கோசு, முள்ளங்கி, வெங்காயம், தக்காளி) அதிக அளவில் உட்கொள்ளவும். இரவு ஏதேனும் ஒரு பழமும் பாலும் மட்டும் சாப்பிடலாம் அல்லது ஓட்ஸ் கஞ்சி, கேழ்வரகு ரொட்டி (1 அல்லது 2) எடுத்துக் கொள்ளுங்கள்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும், மென்று தின்னக் கூடிய உணவுகளையும் நிறையச் சாப்பிடலாம். மேலும், காற்று ஏற்றப்பட்ட (aerated) குளிர்பானங்களைத் தவிர்த்து எலுமிச்சைச் சாறு, பழரசங்கள் (அதிக சர்க்கரை இல்லாமல்) இளநீர் போன்றவற்றைப் பருகவும்.

எக்காரணம் கொண்டும் பட்டினி கிடக்கவேண்டாம். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு சாப்பிடுவதற்குப் பதிலாக, சிறு சிறு அளவினதாக ஐந்து, ஆறு முறை (உங்கள் பணி அதற்கு இடம் தருமானால்) சாப்பிடலாம்.

இரவு உணவைப் படுக்கைக்குச் செல்லுவதற்குக் குறைந்தது இரண்டு மணி நேரம் முன்னதாக (அதாவது எட்டு - எட்டரை மணியளவில்) முடித்துக்கொள்ளுதல் நலம்.

தொலைக்காட்சி முன் அமர்ந்துகொண்டு/அல்லது கணிணியில் பணி புரிந்து கொண்டு (வேறு எங்கோ கவனமாக) சாப்பிடுவதைத் தவிர்க்கவும் ஏனெனில் இத்தகைய சந்தர்ப்பங்களில் நாம் நம்மையும் அறியாமல் அதிகம் சாப்பிட்டுவிடுவோம்.

உணவை சிறு சிறு அளவுகளாகப் பரிமாறிக்கொண்டு, நிதானமாக மென்று, சுவைத்துச் சாப்பிடவும். அவசர அவசரமாகச் சாப்பிடும்பொழுது, நாம் உணவருந்திவிட்ட செய்தி உடனே மூளைக்குத் தெரிவிக்கப் படுவதில்லை. அதனால், பசி அடங்காதது போலத் தோன்றுகிறது. இதன் காரணத்தால் நாம் உட்கொள்ளும் உணவின் அளவு அதிகரித்து விடுகிறது. உணவின் அளவு அதிகரிப்பதால், உடலில் தங்கும் கொழுப்பின் அளவு அதிகரித்து விடும் (சென்ற கட்டுரையில் கண்டது நினைவிருக்கிறதா?)

இல்லத்தரசிகளின் கவனத்திற்கு:

வீணாகிறதே என்ற கவலையில் மிச்சமாகும் உணவுவகைகளை எல்லாம் சாப்பிட்டுவிடும் பழக்கம் பொதுவாக நிறையப் பெண்களிடம் உண்டு. உங்கள் எண்ணம் நல்லதுதான். ஆனால், மிச்சமான உணவுகள் நாய்க்கோ, பிச்சைக்காரர்களுக்கோ குப்பைத்தொட்டிக்கோ போகுமானால் பணம் மட்டும்தான் வீண். உங்கள் வயிற்றுக்குப் போனாலோ (தேவையற்ற உணவுகளைப் போடும் குப்பைத்தொட்டியல்ல உங்கள் வயிறு) உங்கள் உடல் நலமும் கெடுகிறது. எனவே கண்டிப்பாக அந்தப் பழக்கத்தை விட்டுவிடுங்கள். அளவாகச் சமைத்து, தேவையானதை மட்டும் சாப்பிடுங்கள். ஆரோக்கியம் உங்களுடையது.

இன்னும் பல குறிப்புகளை அடுத்த கட்டுரையில் காணும்வரை, இதுவரை கொடுத்தவற்றைப் பின்பற்றி வாருங்கள். வித்தியாசத்தைக் காணுங்கள்!!!

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( சனிக்கிழமை, 08 ஆகஸ்ட் 2009 17:53 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (33)
new law
33 வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2011 10:00
durga
very nice idea.... i'll try to follow this ....
reduce the weight
32 திங்கட்கிழமை, 16 மே 2011 22:03
aruna
very good idea. Thank you very much.
உடற்பயிற்சி -உணவுப்பழக்கம்
31 வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011 20:03
கிறேசியன் யேம்ஸ் அல்ஸ்ரன்
றிறைந்த கருத்துக்களுக்கு நன்றி. தேவையானதை பிரதிஎடுத்து வைத்துக் கொள்வதற்கு கீழே அடையாளம் செய்து உதவுவீர்களா
நன்றி
அலஇஸ்ரனஇ
எடை குறைய
30 வெள்ளிக்கிழமை, 11 பெப்ரவரி 2011 00:29
நா.சிவனேசன்
அளவுக்கு மிஞ்ஜினால் அமிர்தமும் நஞ்சு.மேலே சொன்ன வழிகளைப் பின் பற்றினால் உடல் எடையைக்குறைக்கலாம்.
nice one...
29 செவ்வாய்க்கிழமை, 08 பெப்ரவரி 2011 23:49
அபர்னா
Its really good one. thank you..
எடை குறைய எளீய வழிகள்
28 சனிக்கிழமை, 05 பெப்ரவரி 2011 23:48
பத்மனாபன்
Good. By following even the few suggestions, one can reduce the body weight considerably.
Pl. keep doing contructive iideas like this
good
27 வெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2010 18:41
vicky
it's very super
good
26 ஞாயிற்றுக்கிழமை, 15 ஆகஸ்ட் 2010 22:47
iswarya
it is good explanation
unavae marundhu
25 சனிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2010 21:16
kanmani
nanru ungal pani thodara vazhthukal.
weight loss
24 சனிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2010 17:20
CHARLES
ITS VERY USEFUL FOR US. V R TRY TO FOLLOW.
THANKS & REGARS
CHARLES & MERCY
good
23 செவ்வாய்க்கிழமை, 10 ஆகஸ்ட் 2010 20:35
bales
thankzzz! i am actually fat man!
thankz for this!
EDAI KURAIYA
22 வெள்ளிக்கிழமை, 30 ஜூலை 2010 15:18
R.UMA
UDAL EDAI KURAIYA
மிகவும் பயனுல்ல மிக எளிய குறிப்புகள்
21 செவ்வாய்க்கிழமை, 29 ஜூன் 2010 17:43
காஜா முஹைதீன்
இந்த முறையை பின்பற்றினால் யாரானாலும் காண்டிப்பக எடையை குறைக்கலாம்
மிக மிக நன்றி!!
நல்ல யோசனை
20 செவ்வாய்க்கிழமை, 08 ஜூன் 2010 03:05
சுந்தர்தாஸ்
நல்ல கருத்துக்களை நாளும்
சூப்பர்
19 வெள்ளிக்கிழமை, 21 மே 2010 21:28
அனிதா
உங்கள் கருத்துகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி
Good Idea
18 சனிக்கிழமை, 15 மே 2010 16:23
Ramanathan
I am happy to know that, without starving and sweating down with exercises, I can reduce my weight. Its great. Thanks Bala Sir, Thanks eelanation
Thank You
17 வெள்ளிக்கிழமை, 14 மே 2010 00:55
Najeema Begam
Its very useful for me. Its worked. From Chennai
Hey! It works
16 திங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2010 19:39
vasanth
I tried the methods given in your article. I could really feel that within 3 months I have reduced my weight by drinking water as per your advice. Thanks Mr.Bala,Thanks Eelanation
BAKERY.FOOD
15 திங்கட்கிழமை, 05 ஏப்ரல் 2010 01:38
MASOODALI
GOOD
நன்றி
14 செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2010 17:00
காந்திமதி
நான் உடல் எடையை குரைப்பது பொருட்டு பல வலைதளலங்களில் தேடினேன் ஆனால் இன்று உங்கள் குறிப்பை படித்து அதன் படி உடல் எடையை குறைக்க முடியும் என் நினைக்கையிலேயே மனம் இலேசானது போல் உள்ளது .

நன்றி
thanks
13 வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2010 16:44
s.suba
tahankyou very mach. it very helpfull tips
thanks
12 புதன்கிழமை, 20 ஜனவரி 2010 19:19
jeyavathany shripharan
many thanks for your valuable tips.I will try from today.
நன்றி
11 வியாழக்கிழமை, 07 ஜனவரி 2010 23:54
malik
உங்கடளுடைய ஆலோசனை நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள்
goood news
10 வெள்ளிக்கிழமை, 11 டிசம்பர் 2009 23:56
shiva
if some one follows ur food mannuel thell will have good health and good self controll in all
நன்றி
9 செவ்வாய்க்கிழமை, 08 டிசம்பர் 2009 00:49
ஜெகன்
உங்கடளுடைய ஆலோசனை நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள்
WISHES
8 புதன்கிழமை, 25 நவம்பர் 2009 20:34
SENTHIL
MANY THANKS FOR YOUR VALUABLE TIPS... SHALL TRY TO FOLLOW THE SAME....
sss
7 புதன்கிழமை, 28 அக்டோபர் 2009 22:18
suresh
good
எடை குறைய எளிய வழி
6 புதன்கிழமை, 28 அக்டோபர் 2009 00:10
ஆ.தமிழ்ச்சுடர்
யோகாசனம் 30 அல்லது 40 மணித்துளி நேர அளவிற்கு நாள்தோறும் செய்து வந்தால் உடல் பருமன் தானாகவே குறைந்து விடும். 30 முதல் 90 நாள்களில் பலன் தெரியும். சிலருக்கு சற்றே அதிக நாள்கள் ஆகலாம். பலன் நீடித்து நிற்க வாரத்தில் 5 அல்லது 6 நாள்கள் செய்ய வேண்டும். ஒரு நாள் யோகாசனம் எதுவும் செய்யாமல் ஓய்வு கொள்ளவும். தொடக்கத்தில் தகுந்த ஆசிரியர் அல்லது புத்தகத்தைத் துணையாகக் கொள்ளவும்.
ஒரு புத்தகத்தை இங்கே பரிந்துரைக்க விரும்புகிறேன்: 'Light on Yoga' by B.K.S. IYANGAR. தேவையற்ற வைணவ மதம் குறித்தெல்லாம் கூடவே அங்க இங்க சொல்லுவார்; அதை எல்லாம் ஒதுக்கிவிட்டு யோகாசனம் பற்றிய செய்திகளை மட்டும் மனதில் கொள்ளவும்.
உடலின் எடை குறைவாக இருப்பவர்கள் அதிகரிக்க விரும்பினாலும் யோகாசங்களே பயன் அளிக்கும். அதாவது யோகாசங்கள் ஒருவரை அவருடைய வயது, உயரம் இவற்றிற்கு ஏற்ற உடல் பருமனலிலும் எடையிலும் நிறுத்தும்.
thank
5 ஞாயிற்றுக்கிழமை, 18 அக்டோபர் 2009 00:53
sundarji
thank for u
hai sir
4 புதன்கிழமை, 23 செப்டம்பர் 2009 02:13
dhanam
romba super
nalla anupavam mikka aallosanai tamilil
3 சனிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2009 06:39
kanesh
nanry anna nalla anupavam mikka aallosanai tamilil meendum ippadiyaana thakavalai ethir paarkkirean
thodarnthum eluthunkal
m.kanesh from france
RE-DIETARY ADVICE FOR WEIGHT LOSS
2 வியாழக்கிழமை, 06 ஆகஸ்ட் 2009 22:23
susee.s
It is very good & useful advice for weight loss.
thanks.
Re- dietary advice for weight loss
1 சனிக்கிழமை, 01 ஆகஸ்ட் 2009 02:24
Dr Markandu. Thirukumar
It is a useful and practical advice.

வாசகர் கருத்துக்கள், category: "உடல்நலம்"

new law எடை குறைய எளிய வழிகள் - II
புளு பெரி பழங்களின் பயன்கள் பழங்களும் பயன்களும் - 6
reduce the weight எடை குறைய எளிய வழிகள் - II
நல்ல கருத்துக்கள் உற்சாகமாக விழித்தெழ....
உடற்பயிற்சி -உணவுப்பழக்கம் எடை குறைய எளிய வழிகள் - II
எடை குறைய எடை குறைய எளிய வழிகள் - II
nice one... எடை குறைய எளிய வழிகள் - II
எடை குறைய எளீய வழிகள் எடை குறைய எளிய வழிகள் - II
thank you எடை குறைய எளிய வழிகள் - I
Good advice எடை குறைய எளிய வழிகள் - III

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 43 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை