Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

எது சரியான முடிவு?

மின்னஞ்சல் அச்சிடுக PDF
which-is-rightராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான். வாணி எதையும் தீர ஆலோசித்துத்தான் செய்வது வழக்கம். இந்த மூவரும் ஒரு நிறுவனத்தில் பொறுப்பான வேலை ஒன்றுக்கான நேர்முகத்தேர்விற்குச் சென்றார்கள். கடைசிச்சுற்றில் இந்த மூவரில் ஒருவர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற நிலையில் இந்த மூவரிடமும் தனித்தனியாக ஒரே கேள்வி கேட்கப்பட்டது.
"நீங்கள் ஒரு குறிப்பிட்ட தண்டவாளத்தின் அருகில் நின்றுகொண்டு இருக்கிறீர்கள். அதில் இருந்து சிறிது தொலைவில் அந்த இருப்புப்பாதை இரண்டாகப் பிரிகின்றது. அதில் ஒன்று பயன்பாட்டில் இருப்பது, ஒன்று பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டது. நீங்கள் நின்றிருக்கும் இடத்தின் அருகில்தான் புகைவண்டியின் தடத்தை (தண்டவாளத்தை) மாற்றப்படுத்தப்படும் கருவி உள்ளது. பயன்பாட்டில் இருக்கும் தண்டவாளத்தில் ஏழெட்டு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றன. பயன்படுத்தப்படாத தண்டவாளத்தில் ஒரு குழந்தை மாத்திரம் தனியாக விளையாடிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது ஒரு புகைவண்டி வேகமாக வருகிறது என்று கொள்வோம். நீங்கள் என்ன செய்வீர்கள்? யாரைக்காப்பாற்றுவீர்கள்?" என்று கேட்டார் தேர்வாளர்.

இதே கேள்வி உங்களிடம் கேட்கப்படுகிறது என்று கொள்வோம். இதற்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்? அதை யோசித்துவிட்டு, பின் படிப்பதைத் தொடருங்கள்.

ராணி "புகைவண்டியின் போக்கை மாற்றி ஏழெட்டு குழந்தைகளைக்காப்பாற்றுவேன்", என்று சட்டென்று பதில் சொன்னாள். வேணியோ யோசித்துக்கொண்டே இருந்தாள். 'நான் மாற்றிவிடுவேன்' 'இல்லை, மாற்றினால் ஒரு அப்பாவிக்குழந்தை செத்துவிடும்.' 'இல்லை மாற்றிவிடத்தான் வேண்டும் இல்லையென்றால் பல குழந்தைகள் செத்துவிடும்' என்று மாறி மாறி யோசித்ததால் அவள் பதில் சொல்லமுடியாமல் திணறினாள்.

வாணி சில விநாடிகள் சிந்தித்துவிட்டு "நான் எதுவுமே செய்யமாட்டேன், வண்டி அதன்போக்கில் போகட்டும் என்று விட்டுவிடுவேன்" என்று பதில் சொன்னாள். இதில் எந்த பதில் சரியானது? யாருக்கு வேலை கிடைத்திருக்கும் என நினைக்கிறீர்கள்?

இப்படிப்பட்ட ஒரு சூழலில் செயலில் இறங்காமல் குழம்பி நிற்பதால் என்ன பயன்? வேணியால் நிறுவனத்தில் ஏற்படும் எந்த சிக்கலுக்கும் விடை காண முடியாது என்பதால் வேணி தேர்ந்தெடுக்கப்படவில்லை.

ஒரு குழந்தையைப் பலி கொடுப்பதன்மூலம் மற்ற பல குழந்தைகளைக் காப்பாற்றமுடியும் என்பதால், பலரும் ராணி கூறிய முடிவைத்தான் எடுத்திருப்பார்கள். பொதுவாகப்பார்க்கையில் தர்க்க ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் அதுதான் நல்ல முடிவு என அனைவருக்கும் தோன்றலாம்.ஆனால் அது சரியானதுதானா?

புகைவண்டி வராத தண்டவாளத்தில் விளையாடும் குழந்தை, ஒரு தவறும் செய்யவில்லை. கைவிடப்பட்ட தண்டவாளம் என்பதால், பாதுகாப்பானது என்று கருதியே அக்குழந்தை அங்கு விளையாடுகிறது. ஆனால் மற்ற குழந்தைகளோ அறியாமை காரணமாகவோ, அசட்டுத் தைரியத்தின் காரணமாகவோ பயன்பாட்டில் இருக்கும் தண்டவாளத்தில் விளையாடுகின்றனர். தவறு செய்த மற்றவர்களுக்காக, சரியான இடத்தில் விளையாடும் குழந்தையைப் பலிகொடுப்பது நியாயமா?

இந்த விதமான பிரச்னைகளைத்தான் நாம் நாள்தோறும் எதிர்நோக்கி வருகின்றோம். பெரும்பாலானவர்கள் செய்யும் தவறுகளால், அல்லது பெரும்பாலான அறியாமை நிறைந்தவர்களைக் காக்கவேண்டி, சரியான முடிவை எடுத்தவர்கள் பலி கொடுக்கப்படுவது அடிக்கடி நடைபெறுகிறது.

இதில் வாணி எடுத்த முடிவுதான் சரியான முடிவு. ஏனெனில், பயன்படுத்தப்படும் தண்டவாளத்தில் விளையாடும் குழந்தைகள், அத்தடத்தில் புகைவண்டி வரக்கூடும் என்று அறிந்து விழிப்புடன் இருப்பார்கள். புகைவண்டியின் சத்தம் கேட்டதும் அக்குழந்தைகள் தண்டவாளத்தில் இருந்து விலகி ஓடிவிடலாம். ஆனால் பயன்படுத்தாத தண்டவாளத்தில் விளையாடும் குழந்தை அங்கு புகைவண்டி வரும் என்றே எதிர்பார்த்திருக்காதே? திடீரென்று அத்தடத்தில் புகை வண்டி வருமானால், அக்குழந்தை சுதாரித்துக்கொள்ளக்கூட நேரமிருக்காது என்பதால் அக்குழந்தை இறந்துவிடுவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது.

அது மட்டுமல்ல, கைவிடப்பட்ட தண்டவாளத்தில் புகைவண்டியைத் திருப்புவது சரியான முடிவு என எப்படிச் சொல்லமுடியும்? எதற்காக அந்தத் தடம் கைவிடப்பட்டது என்பதை அறியாமல் புகைவண்டியை அங்கு மாற்றி அனுப்பி, வண்டியே விபத்துக்குள்ளாகிவிட்டால்? தவறு செய்த சில குழந்தைகளைக் காப்பாற்ற, ஒரு குழந்தையை மட்டுமல்ல, ஏராளமான பயணிகளை அபாயத்துக்குள்ளாக்கலாமா?

இதையெல்லாம் சில விநாடிகளிலேயே சிந்தித்து, சரியான முடிவை எடுத்த வாணிக்கே அந்நிறுவனம் வேலை கொடுத்தது.

எந்தக்கடினமான சூழலிலும், குழம்பி நிற்காமல் அதே சமயம் உணர்ச்சிகளுக்கு மட்டும் இடம் கொடுத்து அவசரப்பட்டு முடிவெடுக்காமல், ஒரு பிரச்னையைப் பல கோணங்களிலும் யோசித்து முடிவெடுப்பது அவசியம் என்று காட்டுவதற்காகக் கேட்கப்படும் ஒரு புதிர் இது.

ஒரு பிரச்னையை ஒரு கோணத்தில் மட்டும் அணுகுவது எப்பொழுதும் தவறானது. அதேபோல், வாழ்க்கை என்பது கணக்குப்பாடம் அல்ல, ஒரு கேள்விக்கு ஒரு விடைதான் என்று கூறுவதற்கு. ஒவ்வொரு சிக்கலுக்கும் பலவேறு கோணங்களும் அதை விடுவிக்கப் பலவிதமான வழிகளும் இருக்கலாம். ஒரே ஒரு விடைதான் என்று நினைக்காமல், திறந்த மனத்துடன் அச்சிக்கலை அணுகுவது சரியான முடிவுகளை எடுக்க உதவி செய்யும். பலவிதமான வழிகளையும் அவற்றின் சாதக பாதகங்களையும் அலசி ஆராய்ந்து, பின்னர் அவற்றுள் எது மிக அதிகப்பயனை அளிக்க முடியும், அல்லது மிகக் குறைந்த சேதத்தை விளைவிக்கும் என்பதைக் கண்டறிந்து அந்த முடிவை எடுக்கலாம்.

எதையும் அலசி ஆராயாமல் விரைந்து எடுக்கும் முடிவுகள், பல நேரங்களில் சரியாக இருப்பதில்லை. அதற்காக சிந்தனை செய்துகொண்டே இருந்தால் ஏற்படும் காலதாமதமும் நட்டத்தை உண்டாக்கும். வேகம், விவேகம் இரண்டும் சரியான விகிதத்தில் கலந்திருப்பதே சரியான முடிவைத்தரும். மூளையை மட்டும் பயன்படுத்தி தர்க்க ரீதியாக எடுக்கப்படும் முடிவுகளோ, இதயத்தை மட்டும் பயன்படுத்தி அதாவது உணர்ச்சிகளால் உந்தப்பட்டு எடுக்கப்படும் முடிவுகளோ ஒருதலைப்பட்சமாக இருக்க நேரிடலாம். உணர்ச்சி, அறிவாற்றல் இரண்டும் கலந்து முடிவுகள் எடுக்கப்படுவதுதான் சாலச்சிறந்தது.







இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( செவ்வாய்க்கிழமை, 16 பெப்ரவரி 2010 23:34 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (5)
எது சரியான முடிவு
5 வியாழக்கிழமை, 12 ஆகஸ்ட் 2010 16:57
எம்.ஐ. நெளஸாத்
எதையும் சிந்தித்தும் விவேகமாகவும் புத்திசாதுர்யமாகவும் முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு பாடமாகும். நல்ல கதை நல்ல அம்சம் என்றும் இவ்வாறான புதிய கருத்துள்ள அம்சங்களை தாங்கி வர இச் சஞ்சிகைக்கு என்வாழ்த்துக்கள்.
athu sariyanamudivu
4 ஞாயிற்றுக்கிழமை, 16 மே 2010 10:07
santhan
very very good thanks you soo mach
sirrappu
3 செவ்வாய்க்கிழமை, 06 ஏப்ரல் 2010 21:25
Arumugam
arivupurvamana seithi
அருமையான கட்டுரை.
2 சனிக்கிழமை, 27 மார்ச் 2010 14:53
Adsajah Sandrakumar
அருமையான கட்டுரை.
வித்தியாசமான, நல்ல கட்டுரை
1 வியாழக்கிழமை, 04 மார்ச் 2010 22:02
ப்ரபா
உங்கள் கட்டுரை மிக நன்று

வாசகர் கருத்துக்கள், category: "முகாமைத்துவம்"

எது சரியான முடிவு எது சரியான முடிவு?
athu sariyanamudivu எது சரியான முடிவு?
sirrappu எது சரியான முடிவு?
அருமையான கட்டுரை. எது சரியான முடிவு?
வித்தியாசமான, நல்ல கட்டுரை எது சரியான முடிவு?
BEST,DO MORE தசாவதாரம்
chulikannan@hotmail.com தசாவதாரம்
chulikannan@hotmail.com தசாவதாரம்

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 87 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை