Home > பிரபாகரன் அந்தாதி

பிரபாகரன் அந்தாதி

Pirabakaran-Anthathyகாவலாய் வாய்த்த கதிர்க்கையன் மாமறத்தை\r\nஆவலாற் பாட அகமுற்றேன் –தாவிலாச்\r\nசெந்தமிழே! தாள்பணிந்தேன் சின்னவனென் கற்பனையில்\r\nசிந்தாமல் முத்தமிழைச் சேர்! (1)\r\n\r\n


\r\n\r\nசேர்ந்து தமிழரைச் சிக்கெனப் பற்றியவன்\r\nநேர்த்தியினைப் பாட நிறைதமிழைச் -சேர்த்தென்னில்\r\nதைத்த முருகடியான் தாளை வணங்கிடவும்\r\nவைத்தேன் ஒருவெண்பா யாத்து! (2)\r\n\r\n\r\nயாவர்க்கும் நல்லவா! ஈழத் தலைமகனே!\r\nகாவலாய் வாய்த்த கதிர்க்கையா! –ஆவலாய்\r\nஎந்தமிழ் மக்களை ஏற்றணைந்து காத்தவனே!\r\nதந்தையே தாள்பணிந்தேன் தாழ்ந்து! (3)\r\n\r\nதாழும் எமதினத்தைத் தாங்கித் தலைநிமிர்த்தி\r\nவாழும் இனமாய் வகைசெய்தாய்! –பாழும்\r\nஅரியை விரட்டி அடித்த புலியே!\r\nஎரியை நிகர்த்தாய் எழுந்து! (4)\r\n\r\nஎழுந்த கதிர்க்கைய! ஈழத்தில் ஆடும்\r\nஉழுவக் கொடியிற்(கு) உரியோய்! –அழுந்த\r\nவிதைத்தாய் விடுதலை வேட்கையை; நாமும்\r\nஅதைத்தான் விரும்பினோம் ஆங்கு! (5)\r\n\r\nஆங்கே எமதினம் ஆளும் எனுங்கருத்தைத்\r\nதாங்கி மறப்போர் தழுவினாய்! –ஈங்குன்\r\nபுகழைப் புகலப் பொருவில் தமிழை\r\nஅகழப் புகுந்தேன் அணைந்து! (6)\r\n\r\nஅணையா விளக்கே! அருந்தலைவ! உன்னைத்\r\nதுணையாக் குறித்துத் தொழுதோம் –இணையாய்\r\nஇருந்தீழ மக்களின் இன்னல் களையும்\r\nமருந்தானாய்; சொல்வேனுன் மாண்பு! (7)\r\n\r\nமாணார்* புரிந்த மதியில் செயலையெல்லாம்\r\nகாணார்போற் கண்டிருந்தார் காசினியில் –பேணார்*\r\nதிருவிற் செயலைத் திருப்பி அடித்தே\r\nகருவிற் கலைத்தாய்க் களத்து! (8)\r\n\r\nகளத்துப் புகுந்த கதிர்க்கையா! எங்கள்\r\nஉளத்துள் ஆடும் உணர்வே! –இளைத்த\r\nதமிழர்க்(கு) அரணாந் தருவே உனையிங்(கு)\r\nஉமையாள் கொடுத்தாள் உணர்ந்து! (9)\r\n\r\nஉணர்ந்துந்தை வேலு உவந்துலகிற் கீந்த\r\nமணந்தங்கு வண்ண மலரே! –புணரிசார்\r\nவல்வெட்டி* வார்த்தெடுத்த வான்மதியே! உன்புகழைப்\r\nபல்மெட்டில் பாடேனோ பார்த்து! (10)\r\n\r\nகுறிப்பு:\r\n\r\nதாவில்லா     –  குற்றமில்லாத\r\n\r\nமுருகடியான் –  எனதாசான் சிங்கைப் பெருங்கவிஞர் பாத்தென்றல் முருகடியான்\r\n\r\nஅரி               –  சிங்கம்\r\n\r\nஉழுவக்கொடி – புலிக்கொடி; வேட்கை -பற்றுள்ளம்\r\nபொருவில்     –  உவமையில்லாத\r\n\r\nமாணார்         – பகைவர்; பேணார் –பகைவர்\r\n\r\nஉமையாள்     – பார்வதி (பிரபாகரனின் தாயார்ப்பெயர் பார்வதி)\r\n\r\n புணரிசார்       – கடல்சார்ந்த; வல்வெட்டி –வல்வெட்டித்துறை; வேலு –பிரபாகரனின் தந்தையார்.\r\n\r\n\r\n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *