Home > தேர்ந்தெடுக்கப்பட்ட செய்திகள் > அரசியல் தீர்வு தொடர்பான ஐ.தே.க.வின் புதிய நிலைப்பாடு – தினக்குரல்

அரசியல் தீர்வு தொடர்பான ஐ.தே.க.வின் புதிய நிலைப்பாடு – தினக்குரல்

கடந்த வருடம் மேமாத நடுப்பகுதியில் வன்னியில் முல்லைத்தீவு கரையோரமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை போரில் இறுதியாகத் தோற்கடித்த அரசாங்கப் படைகள் தேசிய இனப்பிரச்சினையையும் அங்கேயே குழிதோண்டிப் புதைத்துவிட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் நெருங்கிய நேச அணிகளான விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற பேரினவாத அரசியல் சக்திகள் கருத்துவெளியிட்டிருந்ததை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்.\r\n\r\n


\r\n\r\nஇது பேரினவாத சக்திகளின் கருத்தாக மாத்திரமல்ல, போரின் முடிவுக்குப் பிறகு தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் சிங்கள அரசியல் சமுதாயம் பரவலாகக் கொண்டிருக்கும் நிலைப்பாடாகவும் இருக்கிறது என்று கடந்த ஒரு வருடத்துக்கும் கூடுதலான காலகட்டத்தில் எமது ஆசிரிய தலையங்கத்தில் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம்.\r\n\r\nஇதை மீண்டும் நாம் எமது வாசகர்களுக்கு நினைவு படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றமைக்கு உடனடிக் காரணமாக அமைந்திருப்பது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பி.பி.சி.யின் சந்தேசிய சேவைக்கு கடந்த திங்கட்கிழமை தேசியப் பிரச்சினை தொடர்பில் தெரிவித்திருக்கும் கருத்துகளேயாகும்.\r\n\r\n”இலங்கையில் சமஷ்டி முறையின் அடிப்படையிலான தீர்வொன்றைக்காணவேண்டிய தேவை தற்போது இல்லை. விடுதலைப் புலிகள் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் சூழ்நிலை முற்று முழுதாக மாறிவிட்டதால் அரசியல் தீர்வொன்றுக்கான தேவையும் தற்போது இல்லை. ஐ.தே.க.தலைமையிலான அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலகட்டத்தில் ஒஸ்லோவில் விடுக்கப்பட்டிருந்த ஒரு கூட்டறிக்கையில் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான வழிவகைகளை ஆராய்வதற்கு இருதரப்பினருமே இணங்கிக்கொண்டனர்.\r\n\r\nஆனால், தற்போது ஆயுதமேந்திய தமிழ்த் தீவிரவாத இயக்கத்தவர்கள் இல்லையென்பதால் பிராந்தியங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்ய வேண்டிய தேவையும் இல்லாமற் போய்விட்டது. தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்குப் பதிலாக, வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ்மக்களின் அன்றாடத் தேவைகளைக் கவனிப்பதே தற்போதைய தருணத்தில் அவசியமானதாகும்%27 என்று ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் கூறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.\r\n\r\nதேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் இணக்கத் தீர்வு தொடர்பில் ஐ.தே.க.வின் கடந்தகால அணுகுமுறைகள் எத்தகையவையாக இருந்து வந்திருக்கின்றன என்பதை கடந்த 6 தசாப்தகால அனுபவங்கள் மூலமாக தமிழ்மக்கள் நன்கறிந்தே வைத்திருக்கிறார்கள். ஒஸ்லோவில் காணப்பட்டதாகக் கூறப்படும் இணக்கப்பாட்டின் பிரகாரம் சமஷ்டி முறையின் அடிப்படையிலான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளில் அன்று இருந்திருக்கக்கூடிய ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கமோ அல்லது எதிர்காலத்தில் வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் பதவிக்கு வரக்கூடிய ஒரு ஐ.தே.க. அரசாங்கமோ மானசீகமாக முயற்சிக்கும் என்று தமிழ் மக்கள் ஒருபோதுமே எதிர்பார்த்திருக்கவில்லை.\r\n\r\nஆனால், ஐ.தே.க.வின் தலைமையை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டதன் பின்னரான காலகட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட அணுகுமுறைகள் குறிப்பாக, நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகள் போன்றவை காரணமாக ஒப்பீட்டளவில் கூடுதலானளவுக்கு சிறுபான்மை இன மக்களை அரவணைக்கும் தன்மையுடைய ஒரு முக்கிய சிங்கள அரசியல் சக்தி என்ற தோற்றப்பாட்டை அக்கட்சியினால் பெறக்கூடியதாக இருந்தது என்பது உண்மையே.\r\n\r\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒப்பிடும் போது சிறுபான்மை இன மக்களின் அரசியல் உணர்வுச் சாய்வும் ஐ.தே.க.வை நோக்கியதாகவே பாரம்பரியமாக இருந்துவந்திருக்கிறது என்பதற்குப் புறம்பாக, விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழான ஐ.தே.க.வுக்கு எதிரான கடும் சிங்களத் தேசியவாதச் சக்திகளின் பிரசாரங்கள் காரணமாக அக்கட்சி கூடுதலான அளவுக்கு சிறுபான்மை இனமக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு விட்டுக்கொடுக்கும் போக்கைக் கொண்டது என்ற மாயையொன்று சிங்கள மக்கள் மத்தியில் தோற்றுவிக்கப்பட்டிருந்தது.\r\n\r\nஅதன் விளைவாக சிறுபான்மையின மக்களின் வாக்குகளை தென்னிலங்கையில் பெருமளவில் ஐ.தே.க.வினால் பெறக்கூடியதாக இருந்தது. ஆனால் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து பெருமளவுக்கு தனிமைப்பட்டுபோவதற்கு தங்களின் சிறுபான்மையின சார்புத் தோற்றப்பாடே பிரதான காரணமென்று ஐ.தே.க. தலைவர்கள் தற்போது சிந்திக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள் போலும்.\r\n\r\nபோர் வெற்றியின் காரணமாக ஜனாதிபதி ராஜபக்ஷவும் அவரது தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் பெறக்கூடியதாக இருந்த அமோக ஆதரவு ஐ.தே.க. வைத் தடுமாறவைத்திருக்கிறது. விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையின் கீழ் எந்தவொரு அரசியல் அணியினாலும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறமுடியாதிருந்த நிலைமையையும் மாற்றக்கூடியதாக அரசியல் வியூகங்களை வகுப்பதற்கு சிங்கள மக்களின் பேராதரவை ஜனாதிபதி ராஜபக்ஷவினால் பயன்படுத்த இயலுமாக இருந்தது.\r\n\r\nஏற்கனவே இரு ஜனாதிபதித் தேர்தல்களில் தோல்வியடைந்த எதிர்க்கட்சித் தலைவர் மூன்றாவது தேர்தலில் களத்தில் குதிப்பதற்கான தைரியத்தைக் கொண்டிருக்கவில்லை. தொடர்ச்சியாகப் பல தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்துவந்திருக்கும் ஐ.தே.க.விற்குள் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்துக்கு எதிரான கிளர்ச்சி முன்னென்றும் இல்லாத வகையில் கடுமையாக முனைப்படைந்திருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.\r\n\r\nஇத்தகையதொரு பின்புலத்திலேயே தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் அத்தநாயக்க தெரிவித்த கருத்துகளை நோக்க வேண்டியிருக்கிறது. விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்துக்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கியிருக்கும் ஐ.தே.க. முக்கியஸ்தர்கள் வெளிப்படையாகவே சிங்கள பௌத்த மக்களின் ஆதரவை மீண்டும் பெறுவதற்காக கட்சி சிறுபான்மை இனத்தவர்களுக்கு அனுசரணையானதாகத் தோன்றுகின்ற போக்கைக் கைவிட வேண்டுமென்று வெளிப்படையாகவே வலியுறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.\r\n\r\nமறுவார்த்தைகளில் கூறுவதானால், சிறுபான்மை இனமக்களின் எந்தவொரு குறைந்தபட்ச அரசியல் அபிலாசைக்கும் கூட அனுதாபம் காட்டும் போக்கை ஐ.தே.க. கைவிட்டு கடும்போக்கு சிங்களத் தேசியவாதச் சக்திகளை மீண்டும் அரவணைத்தால் மாத்திரமே அரசியல் வனாந்தரத்தில் இருந்து மீட்சியைப் பெறமுடியும் என்பதே அவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது.\r\n\r\nகட்சிக்குள் வலுப்பெற்று வரும் இத்தகைய கருத்தோட்டத்துக்கு இணங்கிப்போகவேண்டிய நிர்ப்பந்தம் ஐ.தே.க.வின் தலைமைத்துவத்திற்கு ஏற்பட்டிருப்பதே அத்தநாயக்கவின் கருத்துகள் வெளிக்காட்டுகின்றன. ஒட்டு மொத்தத்தில் தென்னிலங்கையின் சகல பிரதான அரசியல் சக்திகளும் நாட்டில் தற்போது இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்று பிரகடனம் செய்திருப்பதைக் காணக்கூடியதாகவிருக்கிறது.\r\n\r\nவிடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டதற்குப் பிறகு சிங்கள அரசியல் சக்திகள் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து ஒருபோதுமே பேசமுன்வரப்போவதில்லை என்பதை தமிழ் மக்கள் ஏற்கனவே தெளிவாக உணர்ந்திருந்தார்கள். அதுவிடயத்தில் அவர்களிடம் எந்த மாயையும் இருக்கவில்லை.\r\n\r\nஅரசியல் தீர்வைக் காண்பதற்கு விடுதலைப் புலிகள் தான் முட்டுக்கட்டையாக இருந்தார்கள் என்று கூறிவந்த அரசாங்கமும் தென்னிலங்கை அரசியல் சக்திகளும் இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துவிட்டால் அதற்குப் பிறகு அரசியல் தீர்வுக்கான தேவையொன்று தங்களுக்கு இருக்கப் போவதில்லை என்ற நம்பிக்கையிலேயே செயற்பட்டு வந்தன என்பதிலும் சந்தேகமில்லை.\r\n\r\nஅரசியல் தீர்வொன்றை நோக்கிய செயன்முறைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்துக்கு குறைந்தபட்ச நெருக்குதலையேனும் கொடுக்க முடியாதவையாக இன்று எஞ்சியிருக்கக் கூடிய தமிழ் அரசியல் கட்சிகள் விளங்குகின்ற படுமோசமான பரிதாப நிலை. நான்காவது ஈழப்போர் என்று வர்ணிக்கப்படுகின்ற உள்நாட்டுப் போரின் ஒருகட்டத்தில் சுதந்திர தினத்தன்று கொழும்பு காலிமுகத்திடலில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி ராஜபக்ஷ “ஆனந்த சங்கரிக்கும் தேவானந்தாவுக்குமாவது நேர்மையானவர்களாக நாம் நடந்துகொள்ளவேண்டும்” என்று கூறியிருந்தார்.\r\n\r\nஅவ்வாறு ஜனாதிபதி கூறியபோது விடுதலைப் புலிகள் முற்றுமுழுதாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கவில்லை. தற்போது அவர்கள் இருவருக்குமாவது குறைந்தபட்சம் நேர்மையானவர்களாக நடந்துகொள்ள வேண்டிய தேவை தங்களுக்கு இருப்பதாக ஜனாதிபதி நினைக்கிறார் என்பதை வெளிக்காட்டக்கூடிய அறிகுறி எதையும் காணக்கூடியதாக இல்லை என்பதே எமது அபிப்பிராயம். மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் சங்கரியும் தேவானந்தாவும் கூட இதை ஏற்றுக்கொள்வார்கள் என்பது எமது நம்பிக்கை!

Check Also

SarathFonseka_family

சரத் பொன் சேகா மட்டுமல்ல 156 அதிகாரிகளும் 5088 இராணுவத்தினரும் தண்டிக்கப்பட்டனர் – சிறிலங்கா அமைச்சர்

சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலகட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் 156 இராணுவ அதிகாரிகளுக்கும், 5088 இராணுவ வீரர்களுக்கும் இராணுவ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Buy/Sell Digital Currency - Coinbase
×

We use cookies to better provide our services. By using our services, you agree to our use of cookies.

Buy and Sell digital currency

Coinbase is the world’s most popular way to buy and sell bitcoin, ethereum, and litecoin.

Coinbase featured in Wall Street Journal Coinbase featured in New York Times Coinbase featured in Time
$50B+
in digital currency
exchanged
32
countries supported
10M+
customers
served
Coinbase mobile apps
Mobile Apps

Our popular wallet works on your Android or iPhone in addition to your web browser.

Read more ›
Coinbase security
Secure Storage

We store the vast majority of the digital assets in secure offline storage.

Read more ›
Coinbase insurance
Insurance Protection

Digital currency stored on our servers is covered by our insurance policy.

Read more ›
Recurring buys
Recurring buys

Invest in digital currency slowly over time by scheduling buys weekly or monthly.

Read more ›
Other Coinbase products
Utility Token  btc  IoT patented technology  Bitcoins  Bitcoin  blockchain  blockchain wallet  litecoin ltc  omisego omg  aragon ant  augur rep  bat  civic cvc  dash  decred drc  district0x dnt  eos  etherclassic etc  funfair  gnosis gno  golem gnt  salt  DIGITAL CURRENCY  nucleus vision  iost  arcblock  online platform for buying selling transferring