Home > பொழுதுபோக்கு > குறும்படம் விமர்சனம்

குறும்படம் விமர்சனம்

குழந்தைகள் சில விசயங்களை திரும்பத் திரும்ப செய்வார்கள் அவர்களுக்கு அலுப்பே இருப்பதில்லை. குழந்தைகளை உற்று கவனித்திருந்தால் நீங்கள் இதனை அறிந்திருக்க வாய்ப்புண்டு . அதிகபட்சமாக 24 முறைவரை செய்யக்கூடும் என்று சொல்கிறார்கள். பிறகே சற்றே அலுப்புதட்டி மற்ற ஒரு செயலுக்கு நகர்வார்கள். சில நேரங்களில் மற்றவர்களின் கவனம் கவர்வதற்காக செய்வார்கள் சிலநேரம் அவர்களின் உண்மையான ஆர்வத்தின் காரணமாகவும் செய்வார்கள். அவைபோலவே அவர்கள் கேள்விக்கணைகளும் தொடுப்பது வழக்கம்.

\r\n


\r\n

இது என்ன?

\r\n

ஏன் இப்படி இருக்கிறது?

\r\n

ஏன் அப்படி இல்லை?

\r\n

இன்னும் இன்னும் நீங்கள் எதிர்பார்க்காத வகையில் அவை வருவதுண்டு.

\r\n

அவ்வாறான கேள்விகளை எதிர்ப்படும் நேரங்களில் ஒவ்வொருவரின் வெளிப்பாடும் வேறுபடுவதுண்டு. நாம் நம் குழந்தைகள் என்கிற அன்பு மிகுதியினால் அவர்களின் கேள்விகள் அவர்களை வளர்க்கின்றன என்று உணர்ந்து கொண்டு பதிலளிக்கவும் கூடும். சிலர் பொறுமையுடன் சிலமுறைகள் பதில் அளிப்பதும் நேரம் செல்லச் செல்ல பொறுமை இழப்பதும் அதன் பின் ’சற்று நேரம் அமைதியாக இருக்ககூடாதா’வென்று பொறுமை இழந்தோ அல்லது கோபத்தின் உச்சத்தில் சென்று இரைந்து கத்தியோ இருக்கலாம்.

\r\n

ஆனால் வயதான காலத்தில் பெற்றோர்கள் பேச்சுத் துணைக்கென ஏங்கி நிற்கிற போது மறுதலித்து ஒதுங்கி இருத்தல் என்பது போன்ற கடுமையான செயல் வேறெதுவுமில்லை. ஒருகாலத்தில் கண்ணின் மணி போல காத்து இருந்த பெற்றோரிடம் சற்றே அமர்ந்து பேசி இருக்கத்தான் எத்தனையோ தடங்கல்கள்.

\r\n

கிரேக்க இயக்குனர் Constantin Pilavios பெற்றோருக்கும் குழந்தைக்குமான ஒரு உணர்வுபூர்வமான காட்சியை குறும்படமாக்கி இருக்கிறார். குறும்படங்கள் என்று குறிப்பிடுகின்றோமே தவிர நீள நீள கதை வசனக்காட்சிகள் கூட நமக்குள் இவைபோன்றதொரு தாக்கமேற்படுத்த முடியாது. மெல்லிய தாலாட்டைப் போன்ற ஒலியுடன் தொடங்கி ஒரு வீட்டின் முன்பகுதியின் அழகை துளித்துளியாக துல்லியமாக காட்டுன்கின்றது கேமிரா. இசையின் குழைவில் ஆயிரம் அன்புக்கதை மீதமிருக்கிறது. சில நிமிடங்கள் கள்ளமற்ற குழந்தையாகவும் வீட்டிற்குள் சென்று திரும்பிய சில நிமிடங்கள் கம்பீரமான தந்தையாக உருமாறும் போது தந்தை கதாபாத்திரம் வியக்கவைக்கிறார். நாட்குறிப்பில் இருப்பதை மகன் வாசிக்கையில் அவர் பெருமூச்சிடும் பொழுது காலங்களின் தொலைவில் அவர் கொண்ட அன்பின் பாரம் நம்மையும் ஒரு சேர அழுத்துகிறது.

\r\n

ஈரம் மிச்சமிருக்கும் இதயங்கள் கண்டால் நிச்சயம் கண்கள் குளமாகலாம் .அன்பில் இதயம் கனக்கலாம். அர்த்தமுள்ள நல்லமாற்றம் ஒன்றை விதைக்கும் என்பதில் மட்டும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

\r\n

Directed by: Constantin Pilavios
Written by: Nikos & Constantin Pilavios
Director of photgraphy: Zoe Manta
Music by: Christos Triantafillou
Sound by: Teo Babouris
Mixed by: Kostas Varibobiotis
Produced by: MovieTeller films

\r\n-கயல் லக்ஷ்மி\r\n

\r\n\r\n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *