Home > பொழுதுபோக்கு > கவனம் கவரும் கவிஞர் – நா முத்துக்குமார்

கவனம் கவரும் கவிஞர் – நா முத்துக்குமார்

கவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேரக்கூடிய வகையில் ஒன்றாக மாறிவிட்டிருக்கின்றன. தமிழர்களை திரைப்படப் பாடல்களிடமிருந்து பிரிப்பது என்பது சாத்தியமே இல்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் அவ்வப்போதற்கான பாடல்களுடன் ரசனையும் மயக்கமுமாக துணைக்கு அழைத்தப்படியாக இவ்வாழ்க்கைப் பயணத்தில் பயணிக்கிறோம். இளைஞர்கள் இசைக்கு முக்கியத்துவம் இசைக்கு மட்டுமே முக்கியத்துவம் என்று நினைக்கத் தொடங்கி இருக்கும் இக்காலத்திலும் வார்த்தைகளும் அதன் கவித்துவமும் கவனிக்கப்படக் கூடுமென சில கவிஞர்கள் பாடல் வரிகளுக்கிடையில் உழைப்பைக் கொடுக்கிறார்கள்.\r\n\r\n


\r\n\r\nஅத்தகைய ஒரு இளம் கவிஞர்களில் ஒருவர் நா. முத்துக்குமார். நா. காமராசர் போன்ற கவிஞரின் வாயினால் திரைப்படப் பாடல்களில் கவித்துவமாக எழுதிக்கொண்டிருப்பவர் என்று பாராட்டும் பெற்றவர். முதலில் ஒரு இயக்குனராக வரவேண்டும் என்கிற ஆசையில் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் நான்கு வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து கொண்டிருந்தபின் பாடல்களின் பக்கம் அவர் திரும்பி இருக்கிறார். அவரின் எழுத்துக்களை வாசித்த நண்பர்களின் மூலமாகவே அவருடைய திறமை வெளி கொணரப்பட்டிருக்கிறது. நண்பரான இயக்குனர் சீமானின் வீர நடை என்கிற திரைப்படத்தில் முதன் முதலில் பாடல் வரிகளை எழுதத்தொடங்கினார். தொடர்ந்து திரையிசையில் தன் முத்திரையைப் பதித்து வருகிற இவர் வருடத்தில் அதிக பாடல்கள் எழுதிய சாதனைகளைப் படைக்கின்ற நேரத்தில் மனதில் நிற்கும் வரிகளுக்கும் சொந்தக்காரராக இருக்கிறார். கிரீடம் என்கிற படத்திற்கு வசன கர்த்தாவாகவும் பணியாற்றி இருக்கிறார்.\r\n\r\nதமிழாசிரியரான தந்தையின் லட்சக்கணக்கான சேமிப்பான புத்தகங்களுக்கு இடையேயான சிறுவயது , அவரை ஆறுவயதிலேயே கவிதை எழுதத் தூண்டி இருக்கிறது. . கவிஞனாகவே பிறந்து கவிஞராகவே வளர்ந்திருப்பாரோ! அதனைத் தொடர்ந்து நாவல் மற்றும் பல கவிதை தொகுப்புக்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். திரைப்படப் பாடல்களைக் கொண்டே முனைவர் பட்டமும் பெற்றிருப்பதும் திரைத்துறையில் அவரின் வெற்றியை நிச்சயப்படுத்துகிறது.தமிழ்மாநில விருதை 2005 ம் ஆண்டு சிறந்த பாடலாசிரியருக்கெனப் பெற்றிருக்கிறார். வெயிலோடு விளையாடி என வெய்யிற்கிராமத்து புழுதிச்சட்டைச் சிறுவர்களின் வாழ்க்கையின் ஓரோரு நிகழ்வையும் படமெடுத்தார் போல காட்டியதற்காக ’வெயில்’ படப்பாடலுக்காக ஃப்லிம்பேர் சிறந்த பாடலாசிரியர் விருதை 2006 ம் ஆண்டு அளித்து பாராட்டி உள்ளது. .\r\n\r\nஅவரின் கவிதைப்புத்தகங்களும் குறுங்கவிதைகளும் பலராலும் விரும்பி படிக்கப்படுபவை. வித்தியாச சித்திரங்கள்.அழகிய கற்பனைகள்.\r\n\r\n”பிம்பங்களற்ற தனிமையில்\r\nஒன்றிலொன்று முகம் பார்த்தன\r\nசலூன் கண்ணாடிகள்”\r\n\r\n”கண்டுபிடித்ததில் இருந்தே\r\nதப்பாட்டம் ஆடுகிறார்கள்\r\nஅணு ஆயுத பந்தில்”\r\n\r\nஅவரின் காதல் கவிதைகளும் காதல் பாடல்களும் இன்றைய பல இளைஞர்களின் காதலுக்கு உதவியாக இருப்பதும் கூட அவரின் எளிய வரிகளின் வெற்றியில் ஒன்றே.\r\n\r\n”ஒரு பாதி கதவு நீ\r\nமறு பாதி கதவு நான்\r\nபார்த்துக்கொண்டே\r\nபிரிந்திருக்கிறோம்\r\nசேர்த்து வைக்ககாத்திருக்கிறோம்!”\r\n\r\nவாழ்வில் நிகழும் சிறு சிறு நிகழ்வில் இருக்கும் துளி மகிழ்ச்சிகளை கவிதை வரிகளில் அடைத்துத் தருகிறார். அடே! என நம்மை அவைகள் நம்மை ஆச்சரியத்தில் அமிழ்த்துகின்றன.\r\n\r\n”உனக்கும் எனக்கும் பிடித்த பாடல்\r\nதேநீர்க் கடையில் பாடிக் கொண்டிருக்கிறது\r\nகடைசி பேருந்தையும்\r\nவிட்டு விட்டு கேட்டுக் கொண்டிருக்கிறது\r\nகாதல்!”\r\n\r\nகாதலென்றால் கவிஞர்களுக்கு கொண்டாட்டம் தானே.. எத்தனையெத்தனையோ விதமாக காதலை உலக கவிஞரெல்லாம் எழுதிக்குவித்தாலும் அது அமுதசுரபியை ஒத்து பொங்கிப் ப்ரவாகமெடுத்துக் கொண்டுதானே இருக்கிறது. காதலினால் ஒருவனிடம் தோன்றும் மாற்றத்தை சொற் சிக்கனமாய் காட்டி நிற்கும் இப்பாடலைப் பாருங்கள்.\r\n\r\n“ஒரு மாற்றம்\r\nஇது இதயத்தில் இனிக்கிற தடுமாற்றம்\r\nநடை மாற்றும்\r\nஉடைமாற்றும்\r\nஇந்த நெருப்பிற்குள் எத்தனை நீரோட்டம்“ \r\n”வழித்துணை வருகையிலே\r\nபயணங்கள் மறப்பதில்லை.” \r\nஆம் இத்தகைய காதல் பாடல்களின் வழித்துணை உண்டென்றால் …\r\nஎல்லாவிதமான இளைய இசையமைப்பாளர்களுடனும் ஒத்துப்போவதற்கு இளைஞர்கள் என்கிற ஒன்றே போதுமெனச் சொல்லும் நா.முத்துக்குமார் ஏ.ஆர் ரகுமானிலிருந்து இளைஞர் ஜிவி ப்ரகாஷ் வரை அனைவர் இசையிலும் எழுதி இருக்கிறார்.காதல் ,புதுப்பேட்டை , வாமணன், தம்பி போன்ற இன்னும் இன்னும் எத்தனையோ படங்களில் கவிதையான பாடல்களை அளித்தவர்.\r\n\r\n7 ஜி ரெயின்போ காலனியில் இதயத்தை உருக்கும் வார்த்தைகளால் கோர்த்த வரிகளை உங்களுக்கு நினைவிருக்கலாம். ..\r\n\r\n”நினைத்து நினைத்து பார்த்தால்\r\nநெருங்கி அருகில் வருவேன்\r\nஉன்னால் தானே நானே வாழ்கிறேன்\r\nஉன்னில் இன்று என்னை பார்க்கிறேன்\r\nஎடுத்துப்படித்து முடிக்கும் முன்னே\r\nஎரியும் கடிதம் உனக்கு தந்தேன்\r\nஉன்னால் தானே நானே வாழ்கிறேன்\r\nஉன்னில் இன்று என்னை பார்க்கிறேன்” \r\nமுன்பிருந்த நடிகர்கள் தங்கள் பாடல்கள் மூலமாக பல அறிவுரைகளை விதைத்து வைக்க கவிஞர்களைக் கேட்டுக்கொண்டார்கள். தற்போது அத்தகைய வரிகளெதையும் நீங்கள் காண்பது குறைவே. . ’ஏலே நேரம் வந்துடுச்சு வாலே’என்கிற சக்கரக்கட்டி பாடலில் இளைஞர்களுக்கு சற்றே அறிவுரையை ஆங்கிலம் கலந்த பத்திகளுக்கிடையில் இனிப்பில் மறைத்துத் தரும் கசப்பு மருந்தென புகட்டுகிறார்.\r\n\r\n”மழை மேகம் எங்கே அதைத் தேடி\r\nநாம் விரட்டிச் சென்று பிடித்திடுவோம்\r\nமரம் கோடி வைத்து மழை வந்தால்\r\nவருக வருக என்று வரவேற்போம்\r\nகாற்றின் முகத்தில் கரியைப் பூச வேண்டாம்\r\nகாரை விட்டு சைக்கிள் வாங்கிப் பறப்போம்” \r\nஇராமேஸ்வரம் திரைப்படத்தில் , கவலைகளை , கனவுகளை , வெளிப்படுத்தும் போது உருக்கமுடன் நெஞ்சு தொட்டுச் செல்கின்றன அவர் பாடல்கள்.\r\n\r\n”நேற்றிருந்தோம் எங்கள் வீட்டினிலே\r\nநிலவெறியும் எங்கள் காட்டினிலே\r\nயார் தந்த சாபம் இது?\r\nயார் செய்த பாவம் இது?\r\nகண்ணீர்த் துளியும் வலியும்\r\nசேர்ந்த கூடாய்க் கிடக்கின்றோம்.\r\nஉயிரை அங்கே வைத்தோம்\r\nஅதனால் உயிரைச் சுமக்கின்றோம்\r\nஎத்தனை உறவுகள் தொலைத்தோம்\r\nஎதற்கு நாங்கள் பிழைத்தோம்!\r\nநடந்தது எல்லாம் கனவைப்போல\r\nகரைந்து போகாதா?\r\nநாளைக்காவது எங்கள் குழந்தைகள்\r\nநலமாய் வாழாதா?\r\nஅத்தனை வலிகளும் பொறுப்போம்\r\nஅதுவரை உயிருடன் இருப்போம்”\r\n\r\nஒரு கவிஞனின் கவிதை என்பது உணர்வுகளை வார்த்தெடுப்பது மட்டுமல்லாமல் சமூகத்தின் நிலையையும் அதனைச்சார்ந்த நிகழ்வுகளின் பதிவாகவும் அதனை மேம்படுத்த சில காரணிகளை முன்னெடுத்து வைப்பதாகவும் அமைய வேண்டும். சமூக பொறுப்பு உள்ளவர்களாக உள்ள கவிஞர்களே காலத்தால் பேசப்படுபவர்களாக இருந்திருக்கிறார்கள் , இருப்பார்கள். போட்டி நிறைந்த துறையில் தன்னிலைப்பாட்டை முன்நிறுத்தி பல விதமான கட்டாயங்களுக்கு அடிபணிந்து போகவேண்டி இருப்பதற்கிடையில் தமிழின் சிறப்பையும் சமூக நிலைகளையும் வெளிகாட்டும் பல பாடல்களை கவிஞர் நா. முத்துக்குமார் தன்னுடைய இளைய நட்புகளின் நிழலில் இருந்தபடியாகத் தருவார் என்ற நம்பிக்கைத் தோன்றுகிறது.\r\n\r\n-கயல் லக்ஷ்மி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *