Home > பொருண்மியம் > செயற்பாட்டு முகாமைத்துவம் – ii

செயற்பாட்டு முகாமைத்துவம் – ii

திட்டமிடல் –  செயற்படுத்தல் – கவனித்தல் – முன்னெடுத்தல் சுழற்சி\r\n\r\nமுதலிலே திட்டமிடல்-செயற்படுத்தல்-கவனித்தல்-முன்னெடுத்தல்(தி-செ-க-மு) சுழற்சி பற்றி:\r\n

    \r\n

  • இந்தச் சுழற்சிகள் நுண்ணியவையாக இருக்க முடியாது.
  • \r\n

  • ஒரு சுழற்சிக்கான முயற்சி இன்னும் பல சுழற்சிகளுக்குக் காலாக இருக்கும்.
  • \r\n

  • விரைவான பெற்பேறுகளை அடையலாம்.
  • \r\n

  • முழுமையாகவும் முறையாகவும் எதனையும் திட்டமிடவும் செயற்படுத்தவும் உதவும்.
  • \r\n

  • செய்யும் பணியிலிருந்து கற்றுக் கொள்ள உதவும்.
  • \r\n

  • எவரும் எக் களத்திலும் பயன்படுத்தலாம்.
  • \r\n

\r\n\r\n


\r\n\r\nகுறிப்பாக என்ன இலக்கு என்பதைத் தீர்மானித்து விட்டால், அதனை அடைவதற்கான வழிமுறைகளாகப் (மூன்றாம் கேள்வியைப் பயன்படுத்தி) பெற்றுள்ள யோசனைகளைச் சுழற்சியினை வைத்தே சோதித்துப் பார்க்கலாம்.\r\n\r\nசிறிய அளவில தொடங்குவதும், தொடர்ச்சியான சின்னச் சுழற்சிகளைப் பயன்படுத்தித் தரவுத்தளத்தைக் கட்டியெழுப்புவதுமே இந்த தி-செ-க-மு சுழற்சி முறைக்கான வழி. இப்படி, சிறிய அளவில் நிறையச் சுழற்சிகள் செய்வதால்:\r\n

    \r\n

  • யோசனைகளைச் செயற்படுத்தியதால் வந்த மாற்றம் எந்தளவுக்கு முன்னேற்றமேற்படுத்தியிருக்கிறது  என அறியலாம்.
  • \r\n

  • யோசனைகளைச் செயற்படுத்துவது இலகுவாகும்.
  • \r\n

  • விரைவில் பெறுபேறுகள் கிடைக்கும்.
  • \r\n

  • எதாவது ஒரு செயல் பிழையாக நடக்கக் கூடிய வாய்ப்பைக் குறைக்கும் & அப்படி நடந்தாலும் அதனால் பாரிய விளைவு ஏற்படாது.
  • \r\n

  • எதிர்பார்த்த விளைவு வரவில்லையெனில் பழைய செயற்பாடுகளுக்கு மீண்டு கொள்ளலாம்.
  • \r\n

  • மாற்றம் கொண்டுவர என செயற்படுத்திய யோசனை(கள்) பற்றி இந்தச் சின்னச் சின்னச் சுழற்சிகளின் மூலம் முன்னேற்றம் பயக்கும் என்ற நம்பிக்கை வருமளவு தரவு/தகவல் சேர்ந்த பின் வழமையான செயற்பாடுகளின் ஓரங்கமாக அவ் யோசனைகளை முன்னெடுக்கலாம்.
  • \r\n

\r\nநீங்கள் எடுத்துக்கொண்ட திட்டத்தின் எல்லைகளுக்குட்பட்ட சிறிய தி-செ-க-மு சுழற்சியைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். எடுத்துக் காட்டாக, முன்னைய பதிவிற் சொன்ன வேலைப் பளுவைக் குறைக்கும் திட்டத்தை எடுத்துக் கொண்டால்(உங்களுக்கு வேலை அதிகம் என்று வைத்துக் கொள்வோம், குறைப்பதுதான் இலக்கு. இலக்கை அடைவதற்குச் செய்யக்கூடிய மாற்றங்கள்: வேலை நேரத்தில் வலை மேயாதிருப்பது, மேலாளரிடம் சொல்லிப் பளுவைக் குறைப்பது, ஒவ்வொரு நாளும் இன்னும் ஒரு மணி நேரம் கூடுதலாய் வேலை செய்வது, வேறு வேலைக்கு மாறுவது. இதில், வேலைப்பளுவைக் குறைப்பதற்காய் எந்த மாற்றத்தைச் செய்ய நீங்கள் ஆயத்தம்?) , சிறிய சுழற்சி என்பது ஒரு நாளைக்கு ஒரு யோசனையைப் பின்பற்றுவது என்பதாகும். தொடர்ந்து 3 யோசனைகளைச் செயற்படுத்தி அவற்றின் பெறுபேறுகளை ஆராய்ந்து பார்க்கலாம். சுழற்சியின் நான்கு கட்டங்களிலும் சரியாக செயல்களை முன்னெடுப்பதற்கு உதவியாக சில குறிப்புகள் இருக்கின்றன.\r\n\r\nமுதலாவதாக, திட்டமிடல் பகுதி. இந்தப்பகுதியில்தான் யோசனைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, எவ்வெவற்றைச் செயற்படுத்துவது என்கிற முடிவுக்கு வர வேண்டும் இதிலே கவனத்திற் கொள்ள வேண்டிய குறிப்புகள்(பச்சை நிறத்திற் குறித்திருப்பவை மேற் சொன்ன வேலைப்பளு குறித்த உதாரணத்திற்கு அமைவாக உள்ளன):\r\n

    \r\n

  • குறிக்கோள் (வலை மேய்வதை மதிய உணவு நேரத்திற்கு என மட்டுப்படுத்துவது)
  • \r\n

  • முன்கூட்டிய கணிப்புகள் (இதனால் அரை மணி நேரம் மீதப்படும்)
  • \r\n

  • சுழற்சியைக் கொண்டு நடத்தும் திட்டம்(யாரால், எதை, எப்படி, எங்கே, எப்போது) (நண்பரால், தொழிநுட்பத் துறையினரால்)
  • \r\n

  • தரவு சேகரிப்பிற்கான திட்டம் (யார் நேரத்தைக் கண்காணிப்பது – நண்பரா?நீங்களா)
  • \r\n

\r\nஅடுத்தது செயற்படுத்தல் பகுதி. இந்தப் பகுதியில், யோசனையைச் செயற்படுத்தும் போது நடப்பவற்றை அவதானித்து தரவுகள் சேகரிக்க வேண்டும். இந்தப்பகுதியில் முக்கியமாய் அமைவன:\r\n

    \r\n

  • யோசனையைச் செயற்படுத்தல் (மதிய உணவு நேரத்தில் மட்டும் வலை மேய்தல்)
  • \r\n

  • அவதானிப்புகளை ஆவணப்படுத்தல் (வேறு நேரங்களில் இணையத் தளம் பார்க்கிறீர்களா? ஏன்?, மதியம் மட்டும் பார்க்கிற நாட்கள்)
  • \r\n

  • தரவுகளைக் குறித்துக் கொள்ளல், சேகரித்தல் (எப்போது மதியம் மட்டும் வலை மேய்கிறீர்கள், எப்போது வேறு நேரத்திலும் வலை பார்த்தீர்கள், என்னென்ன தளங்கள்?)
  • \r\n

\r\nசுழற்சியின் ‘கவனித்தல்’ பகுதி யோசனையை (திட்டமிட்டதைச்) செயற்படுத்தியதால் ஏற்பட்ட விளைவுகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் வாய்ப்பளிக்கிறது.  செயற்படுத்தியதன் மூலமாக என்ன கற்றுக் கொண்டோம்  எனவும் இன்னும் முன்னேற்றமேற்படுத்த எங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கு முக்கியமாய் அமைவது:\r\n

    \r\n

  • சேகரித்த தரவுகளை ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்த்தல் (எத்தனை நாள் திட்டப் படி நடந்தது, அப்படி நடக்காத நாட்கள் 3 என வைத்துக் கொண்டால், அந்த மூன்று நாட்களும் சென்ற தளங்கள் என்ன? ஏன்?)
  • \r\n

  • திட்டமிடல் பகுதியில் செய்யப்பட்ட முன்கூட்டிய கணிப்புகளுடன் தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்தல்(எவ்வளவு நேரம் சேமிக்கப்பட்டது)
  • \r\n

  • என்ன கற்றுக் கொண்டோம் என்பதன் சாராம்சம்
  • \r\n

\r\nஇதன் பின்னர் ‘முன்னெடுத்தல்’ பகுதிக்குச் செல்லலாம். இந்தப் பகுதியிலேயே, இதுவரை செயற்படுத்திய யோசனையை இன்னுமொருமுறை முயற்சித்து மீண்டும் தரவுகளைப் பெறுவதா அல்லது இதுவரை கற்றதை வைத்துக் கொண்டு சிற்சில மாற்றங்கள் செய்வதா அல்லது இலக்கை அடைவதற்கு மேலதிக சுழற்சிகள் குறித்த தரவு தேவையா எனத் தீர்மானிப்போம்.  இங்கே கவனத்திற் கொள்ள வேண்டியவை:\r\n

    \r\n

  • என்ன மாற்றம் தேவையாயிருக்கிறது?
  • \r\n

  • அடுத்த சுழற்சி என்ன?
  • \r\n

\r\nநடைமு்றைப்படுத்தும் போது கவனிக்க வேண்டியன:\r\n

    \r\n

  • முன்னேற்றம் என்பது பல சமயங்களில் கூட்டு முயற்சியால் அமைவது. திட்டக் குழுவில் பொருத்தமானவர்களை இணைத்துக் கொள்ளுங்கள்
  • \r\n

\r\n

    \r\n

  • அடிப்படைப் பிரச்சனை என்னவென்பதை ஆராய்ந்து பார்க்காமல் தீர்வுகளை நோக்கிச் செயற்படும் குணம் மனிதருக்கு இருக்கிறது. முதலாம் பகுதியில் சொன்ன 3 அடிப்படைக் கேள்விகளைப் பயன்படுத்துவதன் மூலம் எதற்குத் தீர்வு காணவேண்டியிருக்கிறது என்பது புலனாகும்.
  • \r\n

\r\n

    \r\n

  • சுழற்சியினைத் திட்டமிடும் போதே யார் எதனை எங்கே எப்படிச் செய்யப்போகிறார்கள் என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ளுங்கள். திட்டம் எவ்வளவு சிறந்ததாயிருக்கிறது என்பதிலேயே பெறுபேறுகளும் தங்கியிருக்கின்றன.
  • \r\n

\r\n

    \r\n

  • மாற்றத்தைக் கொண்டு வரும் முயற்சியின் போது என்னென்ன நடக்கக் கூடுமெனக் கலந்துரையாடுங்கள். ஒவ்வொருவரினதும் ஊகங்கள்/கணிப்புகள் என்னென்ன? சுழற்சியினைச் செயற்படுத்தி முடிந்த பின்னர் இந்த ஊகங்கள் கணிப்புகளை உண்மையிலேயே என்ன நடந்ததென்பதோடு ஒப்பிட்டுப் பாருங்கள். ஒவ்வொன்றும் செயற்படும் விதம் குறித்து சுவையான விவரங்களை நீங்கள் அறிந்து கொள்ளக் கூடும்.
  • \r\n

\r\n

    \r\n

  • ஒவ்வொரு சுழற்சியையும் ஆவணப்படுத்துங்கள்: திட்டம், பெறுபேறுகள், என்ன கற்றுக் கொண்டீர்கள், அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்பன. உங்கள் முயற்சியின் பெறுபேறுகளைப் பார்ப்பது ஊக்கம் தரும். அது மட்டுமல்லாமல், உங்கள் செயற்பாடுகள் பற்றிய தகவல்கள் தரவுகள் என்பவற்றைச் சேகரிக்கவும், பெற்ற பயனையும் கற்றுக் கொண்டவைகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் ஆவணப்படுத்தல் உதவுகிறது.
  • \r\n

\r\n

    \r\n

  • ஏற்படுத்தும் மாற்றம் குறித்த தரவுகள் தகவல்களைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். அம்மாற்றங்களை, சேகரித்த தரவுகளைப் பயன்படுத்தி ஓர் ஒழுங்குமுறையாக அன்றாடப் பணிகளூடாக முன்னெடுப்பதில்  உதவுவதற்காக இந்தச் சுழற்சி முறைகளைக் கையாளுங்கள். இந்தச் சுழற்சி முறை என்பது ஒற்றை முயற்சியோடு நின்று விடுவதில்லை. ஒன்று இன்னொன்றிற்கு இட்டுச் செல்லும். இப்படியான தொடர் சுழற்சிகளின் ஊடாகவே இறுதிக் குறிக்கோளை அடையமுடியும்.
  • \r\n

\r\n- கி. பாலகார்த்திகா

Check Also

செயற்பாட்டு முகாமைத்துவம் – i

மூன்றே கேள்விகளும் சில சுழற்சிகளும்\r\n\r\nவழமையாக, வேலையில் ஓர் அணியினுடையதோ தனிப்பட்ட ஒருவரதோ செயல்றிறன் எதிர்பார்த்த அளவில இல்லாமக் குறைஞ்சு போயிருந்தா, ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *