Home > மருத்துவம் > தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே

தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே

நிம்மதியான வாழ்வின் அறிகுறி இரவில் அமைதியாகத் தூங்க முடிவதுதான் என்றால் அது மிகையாகாது. பணம் மெத்தையை வாங்கலாம், ஆனால் உறக்கத்தை வாங்க முடியாது என்பது ஆன்றோர் வாக்கு. உடல் நலத்தின் ஆணிவேர், இரவில் ஆழ்ந்த உறக்கம்தான். ஆனால், இன்று மாறிவரும் சூழலில், சரியான உறக்கமின்மையால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\r\n\r\n


\r\n\r\n \r\n\r\nதூக்கம் ஏன் தேவை?\r\n\r\nமனிதனின் தூக்கத்தில் பல நிலைகள் உள்ளன. முதல் நிலை, உறக்கத்திற்கும், விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலை. இதற்கடுத்த நிலை ‘டெல்டா’ எனப்படும் ஆழ்ந்த உறக்க நிலை. இந்நிலையிலேயே, கனவுகள் தோன்றுகின்றன. இந்நிலையின்போது செல்கள் பராமரிப்பு மற்றும் புத்தாக்கம் நடைபெறுகிறது. இதைத்தொடர்வது, REM – Rapid Eye Movement என்னும் நிலை. இதன்பொழுது, மூளை கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டு புத்துணர்வு அடைகிறது. எனவேதான், தொடர்ந்து சரியாகத் தூங்காத பொழுது, நம்மால் உற்சாகத்துடன் வேலை செய்யவோ, கூர்ந்து யோசிக்கவோ இயலுவதில்லை. அது மட்டுமல்ல, தேவையான தூக்கமின்மையால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து விடுகிறது. உடலும் மனமும் சோர்வடைகின்றன. மன அழுத்தம், இறுக்கம், பதட்டம் முதலியவை உருவாகின்றன. கவனமின்மை அதிகரிப்பதால் விபத்துகள் நேரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.\r\n\r\nசராசரியாக ஒரு மனிதனுக்கு, ஒரு நாளைக்கு 7 முதல் 10 மணி நேரம் வரை தூக்கம் தேவைப்படிகிறது. சிறு குழந்தைகளின் வளர்ச்சி தூங்கும்பொழுதுதான் நடைபெறுகிறது என்பது சில மருத்துவ மேதைகளின் கருத்து. கைக்குழந்தைகள் ஒரு நாளைக்குப் பதினெட்டு முதல் இருபது மணி நேரம் தூங்குகின்றன. வளர வளர, தூங்கும் நேரம் குறையத் தொடங்குகிறது. முதியவர்களிடையே தூக்கமின்மை மிகப் பரவலாகக் காணப்படுகிறது. இது, செரிமானத்தைப் பாதிப்பதால், பசியின்மை, உணவின்மீது வெறுப்பு முதலிய பக்கவிளைவுகளும் தோன்றுகின்றன.\r\n\r\nசரி. தூக்கம் வரமாட்டேனென்கிறதே… என்ன செய்யச் சொல்கிறாய் என்று கேட்பது புரிகிறது. தூக்கம் வர என்ன செய்வது என்று தெரிந்துகொள்வது அப்புறம் இருக்கட்டும். முதலில் தூக்கத்தைக் கெடுக்கும் காரணிகள் என்னென்ன என்று தெரிந்துகொண்டு விடுவோம்.\r\n\r\nசிலபேர் இரவு படுக்கப் போகுமுன் வயிறு முட்டச் சாப்பிட்டு விடுவர். அதுவும் கிழங்கு வகைகள், பொரித்த, வறுத்த உணவுவகைகள், அசைவ உணவுகளாக இருந்தால் கேட்கவே வேண்டாம். அன்றைய உறக்கம் அதோகதிதான். கண்ட நேரத்தில் காபி, தேநீர் போன்றவையோ, உறக்கத்தைத் தள்ளிவைத்துவிடும். மதுவகைகளை அருந்துவது, உறக்கத்தூண்டினாலும், அது, இயற்கையான தூக்கம் போல் மூளை புத்துணர்வு அடைய உதவுவதில்லை.\r\n\r\nஇரவு நீண்ட நேரம் சண்டைப்படங்கள், திகில் படங்கள் (பேய், பிசாசு, காட்டேரி குறித்த படங்கள்) முதலியவற்றையோ, அதிக ஒளி மாற்றங்களை உடைய காட்சிகளையோ ( பாப், டிஸ்கோ நடனங்கள்) பார்ப்பது, உரத்த ஒலியில் உள்ள இரைச்சலான இசையைக் கேட்பது ( ராக் இசை) ஆகியவையும் உறக்கத்தின் எதிரிகளாக வாய்ப்புள்ளது.\r\n\r\nமிகவும் மென்மையான அல்லது கடினமான படுக்கை, அதிகக் குளிர் அல்லது வெப்பமான சூழல், காற்றோட்டமின்மை முதலியவை மற்றும் சில புறக்காரணிகள்.\r\n\r\nநோய்கள், வலி முதலியவற்றால் அவதிப்படுபவர்களும், மூளையைக் கசக்கி வேலை செய்ய வேண்டி இருப்பவர்களும், வீட்டிலோ அலுவலகத்திலோ ஏற்படும் தொல்லைகளால் மனதில் வேதனையையும் கவலையையும் சுமப்பவர்களும், தூக்கம் வராமல் திண்டாடுபவர்களில் முதலிடம் பிடிக்கக் கூடியவர்கள். ஆனால், நல்ல உறக்கம் தேவைப்படுபவர்களும் இவர்களேதான்.\r\n\r\nஇவை தவிர, பயணம், வேலை அல்லது தேர்வு இவை காரணமாக, சிலரது தூக்கம் கெட்டு விடுகிறது. இப்பொழுது, இரவில் மிக நீண்ட நேரம் விழித்திருந்து தொலைக்காட்சி பார்ப்பவர்களும், இணைத்தளத்தில் மேய்பவர்களும் அதிகரித்துவிட்டனர். மின்சாரவிளக்குகள் வருவதற்கு முன்பெல்லாம் இரவு பொதுவாக எந்த வேலையும் செய்ய முடியாது என்பதால் மக்கள் நேரத்தில் தூங்கி விடியலில் எழும் பழக்கத்தைக் கைக்கொண்டிருந்தனர். இப்பொழுதோ இரவைப் பகலாக்கும் அளவு வெளிச்சத்தைத் தரக்கூடிய விளக்குகள் எங்கெங்கும் மின்னுகின்றன. அதனால், இரவிலும் நெடுநேரம் கண்விழிப்பவர்களும், இரவுப்பணி புரிபவர்களும் அதிகரித்து விட்டனர். அதனால் புதிய புதிய உடற்கோளாறுகளும் அதிகரித்து வருகின்றன.\r\n\r\nநல்ல அமைதியான தூக்கம் பெற என்ன செய்வது? கீழ்க்கண்ட உத்திகளைப் பின்பற்றிப் பார்க்கலாம்.\r\n\r\nபடுக்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பே இரவு உணவை உட்கொள்வது நலம். தவிர்க்க இயலாத காரணங்களால் இரவு உணவைத் தாமதமாக சாப்பிட நேர்ந்தால், பொதுவாக பழங்கள், எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகள் முதலியவற்றையே எடுத்துக்கொள்ளுங்கள். சற்றுக் குறைவாகச் சாப்பிடுவது நல்லது. ஆனால், வெறும் வயிற்றுடன் படுக்காதீர்கள். பசியுடன் இருப்பதும் தூக்கத்திற்குக் கேடுதான்.\r\n\r\nஇரவு உணவின்போது எண்ணெய், நெய்யில் செய்த பண்டங்கள், மாமிச வகைகள், பால், வெண்ணெய் அதிகம் பயன்படுத்திச் செய்த உணவு வகைகள், அதிக இனிப்பு அல்லது காரமான, மசாலா அதிகமுள்ள உணவு வகைகள், கிழங்கு வகைகள் இவற்றைத் தவிர்த்து விடவும். தவிர்க்க முடியாத விருந்து அல்லது விழாக்களின் போது, குறைந்த அளவு சாப்பிடலாம். சாப்பிட்டு முடித்தபின், சூடான வெந்நீர் அருந்துவது செரிமானத்திற்கு உதவுவதோடு, நெஞ்செரிச்சல், புளி ஏப்பம் முதலியவற்றைக் கட்டுப்படுத்தும்.\r\n\r\nமென்மையான அதே சமயம் திடமான படுக்கை (நுரை மெத்தையை விட இலவம்பஞ்சாலான மெத்தையே நல்லது), காற்றோட்டமான அறை, தளர்வான இரவு (பருத்தி) உடைகள் முதலியவை இரவு நன்முறையில் உறங்க உதவக்கூடியவை. பகலில் நீண்ட நேரம் உறங்குவது, இரவு தூங்குவதைக் கெடுப்பது மட்டுமில்லாமல் நம்மை மந்தமாக்கிவிடவும் கூடும்.\r\n\r\nஇரவு உறங்கச் செல்லுமுன், மிதமான சூட்டில் பால் அருந்துவது, நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். அதனாலேயே, பொதுவாக நம் நாட்டில், இரவு சிறியவர், பெரியவர் எல்லோரும் பால் அருந்தும் வழக்கம் இன்றும் உள்ளது.\r\n\r\nஉடலில் எதாவது கோளாறுகள் இருக்குமானால், உடனடியாக மருத்துவரை அணுகி, மருத்துவம் செய்துகொள்வது, வலிகளுடன் தேவையில்லாமல் போராடி நாள் கடத்தி, பிரச்னைகளை அதிகப் படுத்திக்கொள்வதை விடச் சிறந்தது.மருத்துவரின் ஆலோசனை இன்றி, தூக்கத்திற்கான மருந்துகள் சாப்பிடுவதோ, ஆல்கஹால் அருந்துவதோ தீமையையே ஏற்படுத்தும்.\r\n\r\nமிதமான உடற்பயிற்சிகள், மனதை வருடும் மெல்லிய இசை (வயலின் அல்லது குழலிசை மிகச் சிறந்தது), நல்ல புத்தகங்கள் (ஆன்மிகம், தன்னம்பிக்கையூட்டும், வெற்றி குறித்த வரலாறுகள் , பயணக்கட்டுரைகள்,வேடிக்கைக்கதைகள் முதலியன. கொலை கொள்ளை வன்முறை நிறைந்த, பயமுறுத்தக்கூடிய மர்ம நாவல்கள் போன்றவற்றையும், உணர்ச்சியைத் தூண்டும் புத்தகங்களையும் இரவில் தொடக்கூட வேண்டாம்), குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக, வேடிக்கையாகப் பேசுவது அல்லது குழந்தைகளுடன் விளையாடுவது (மனைவி/கணவர்/பிள்ளைகளுடன் சண்டை போடுவது எதிரிடையான விளைவைக் கொடுக்கும்) முதலியவை தூக்கத்தை வரவழைக்கும் சில வழிகள். அலுவலகத்தில் உள்ள பிரச்னைகளை வீட்டிற்குக் கொண்டுவந்து அலசுவது தவிர்க்கப் படவேண்டியது. அதே போல், மிக முக்கியமான குடும்பச் சிக்கல்களைத் தூங்கப் போகும் நேரத்தில் விவாதிப்பது, உங்கள் தூக்கத்தை மட்டுமல்ல, மற்ற குடும்ப உறுப்பினர்களின் தூக்கத்தையும் சேர்த்துக் கெடுத்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\r\n\r\nகுறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குச் செல்வதும், விடிகாலையில் விழிப்பதும் அனைவரும் பின்பற்றவேண்டிய நல்ல பழக்கம் ஆகும்.இரவு படுக்குமுன் தியானம் செய்வது, மூச்சுப் பயிற்சி முதலானவை, தூக்கத்திற்கு மட்டுமல்ல, மன நலத்திற்கும் உடல் நலத்திற்கும் அருமருந்து.\r\n\r\nபோதும்… எனக்குக் கொட்டாவி வருகிறது. நான் தூங்கப் போகிறேன். Good Night.\r\n\r\n———————————————————————————————————————\r\nகி.பாலகார்த்திகா\r\n\r\n 

Check Also

எடை குறைய எளிய வழிகள் – II

இதற்கு முந்தைய கட்டுரையில் நெகடிவ் கலோரி உணவுகளை அதிகம் உட்கொள்வதின் மூலம் எடை குறைய வழி உண்டு என்று பார்த்தோம். ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *