Home > மருத்துவம் > மன அழுத்தத்தை எதிர்கொள்வது எப்படி?

மன அழுத்தத்தை எதிர்கொள்வது எப்படி?

மன அழுத்தம் பல உடல் நோய்களைப் போல் ஒரு நோயே. ஆகையால் உடல் நோய்க்கு எவ்வாறு மருத்துவம் தேவையோ அதேபோல் மன அழுத்தத்திற்கும் தேவை. நமக்கு ஏற்பட்டிருப்பது மன அழுத்தம் தானா என முதலில் தெரிந்து கொள்ளுவது அவசியம்.\r\n\r\nமன அழுத்தம் எனில் என்ன?\r\n\r\nமிகவும் ஊறு விளைவிக்கக் கூடிய சூழ்நிலை அல்லது மனிதர்களுக்கு ஈடு கொடுக்கவேண்டிய நிலையில் உள்ள நாம், நம்மால் இனியும் ஈடுகொடுக்க முடியாது என்ற நிலை வரும்போது வெளிப்படுத்தும் பல அறிகுறிகள் தான் மனஅழுத்தம் எனப்படுகின்றது. அதாவது நாம் நம்முடைய உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஓர் இறுக்கமான நிலைக்கு வந்து விடுகிறோம். இதைத்தான் மன அழுத்தம் என்கின்றனர் உளவியலர்.\r\n\r\n


\r\n\r\nமன அழுத்தத்தின் காரணிகள்\r\n\r\n1. சுற்றுச் சூழல்: \r\n\r\nஇன்றைய காலகட்டத்தில் நம்முடைய சுற்றுச்சூழல் நம்மிடம் நிறைய, மிக நிறைய எதிர்பார்க்கிறது. சூழலைச் சகித்துக் கொள்ள வேண்டும்… யாரிடமும் என்ன முறையிட்டும் பயனில்லை என்ற நிலை. நம்முடைய அரசும் சமூகமும் செயலற்று இருக்கும் நிலையே எங்கும் காணப்படுகிறது. எப்படியேனும் பொருளாதார ரீதியில், அந்தஸ்து ரீதியில், பதவி ரீதியில் பெரும் வெற்றிகளைக் குவித்துவிட வேண்டும் என்கிற கூட்டம் அதிகமாக சுற்றுச் சூழலையும் தனிமனித வாழ்வினையும் பெரிதும் பாதிக்கிறது. அரசாங்கங்கள் உண்மையாய் நடந்து கொள்வது என்பது காணக் கிடைக்காத ஒன்று ஆகிவிட்டது.\r\n\r\nசமீபத்தில் இந்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது – தகவல் அறியும் சட்டம். சிறிது நாட்கள் மக்களுக்குப் பலனும் அளித்தது. ஆனால் அரசாங்க அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் பலவித சங்கடங்கள். பார்த்தது அரசு! கொண்டு வந்தது ஒரு சட்டத் திருத்தம்: அரசின் இரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் சில தகவல்களைக் கோரக்கூடாது. இப்போது எதைக் கேட்டாலும் இந்த விதியைக் காட்டி தகவல் தர இயலாது என உடனடிப் பதில் வருகிறது. ஒரு படிவம் தயாரித்து வைத்துக் கொள்ளாததுதான் குறை. செயலற்ற அரசுகள், மோசமான வானிலை, விழி பிதுங்கும் சாலைகள், இரைச்சல், நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாகக் கொழிக்கும் எல்லா வகையான அசுத்தங்கள். இவற்றிக்கிடையே மனிதர்கள் இந்த அளவுக்கு மன நலத்தோடு இருப்பது அதிசியமே எனலாம்.\r\n\r\n2. வாழ்க்கைச் சிக்கல்கள்: \r\n\r\no பொருளாதாரச் சிக்கல்கள்,\r\no பாடசாலைக் கட்டணம் கட்டக் கடைசி நாள்,\r\no வேலையை முடிக்கக் கடைசி நாள்,\r\no நேர்முகம் நன்றாக நடக்கவேண்டுமே கடவுளே…\r\no இன்றைக்கு என்னுடைய தருகை நன்றாக நடக்கவேண்டுமே…\r\no என்னுடைய நண்பனோடு, மனவியோடு ஏற்பட்ட பிணக்கு எவ்வாறேனும் தீர வேண்டுமே…\r\no இன்று டீசல் வாங்குவதற்குக் காசு இல்லையே…\r\no ஒரு நாளில் எத்தனை எத்தனை வேலைகள் செய்வேன்…\r\no யாரிடம் சொல்லி அழுவேன்…\r\no வாழ்வின் சிக்கல்கள் அடிமுட்டளைக் கூட பெரும் வேதாந்தி ஆக்கி விடும்.\r\n\r\n3. உடம்பு: \r\n\r\no இளம் சிறார்க்கு உடம்பில் வேகமாக ஏற்படும் வளர்ச்சி,\r\no மகளீருக்கு மாதவிடாய் நிற்கும் வேளையில் ஏற்படும் அவதி,\r\no வித விதமான நோய்கள், காயங்கள், மூப்பு\r\no உடற்பயிற்சி இன்மை,\r\no சத்துக் குறைந்த உணவு,\r\no தேவையான அளவு உறக்கம் இன்மை,\r\no உடம்பு துன்பங்களின் கொள்கலன் என்றால் மிகையாகாது.\r\n\r\n4. எண்ணங்கள்: \r\n\r\no நம்முடைய மூளை நம்மைச் சுற்றி நடப்பனவற்றை எவ்வாறு புரிந்துகொள்ளுகிறது\r\no ஏனெனில் ஒரு காரணி தாக்கும்போது மூளை எடுக்கும் முடிவு அது அக்காரணியை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது.\r\no பயன்தரும் முடிவு மனஅழுத்தத்தை இல்லாமலேயே செய்தல் கூடும்\r\no அல்லது பெரும் அளவு குறைக்கவாவது செய்யும்.\r\n\r\nமன அழுத்தத்திற்கான அறிகுறிகள்: \r\n\r\nஉடல்:\r\n\r\n* மிக அதிகமான மனஅழுத்தம் தொடரும் நிலையில் ஜீரண உறுப்புகள் பாதிப்பு, நரம்பு மண்டலங்கள் பாதிப்பு\r\n* குடல் அழற்சி, என்ன வைத்தியம் செய்தாலும் சரியாகாத, தலைவலி, ஏன் மாரடைப்பு கூட ஏற்படலாம்.\r\n\r\nஉள்ளம்: \r\n\r\n* வாழ்வில் உற்சாகம் இன்மை,\r\n* முற்றிலும் எரிந்து முடிந்த கரித்துண்டு போல் உளசக்தி இல்லாமல் சோர்வடைதல்,\r\n* பணியில் உற்சாகம் இன்மை,\r\n* டிப்ரஸன் எனப்படும் மனவீழ்ச்சி.\r\n\r\nமன அழுத்தம் எல்லோருக்கும் ஏற்படுமா ? \r\n\r\nபொதுவாகக் கூறவேண்டுமெனில் எல்லோருக்கும் ஏற்படும் என்றே கூற வேண்டும். ஆனால் விதிவிலக்காக சிலபேர் இருக்கக் கூடும். சரித்திர நாயகர்களின் வரிசையும் நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கும் சிலரைப் பற்றிய நினைவும் நிழலாடுகிறதா?\r\n\r\nஎதிர் கொள்ளும் திறன் \r\n\r\nபாதகமான நிகழ்வுகளை எதிர்கொள்ளும் திறன் நம் எல்லோருக்கும் உண்டு. பெரும் அளவுக்கு பாதகமான நிகழ்வுகளுக்கு இடையேயும் மன அழுத்தத்தில் விழாமல் நம்மைக் காப்பது இத்திறன் தான். அதாவது மன அழுத்தத்திற்கான காரணங்கள் இருந்த போதிலும் நாம் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வதால் மனஅழுத்தம் ஏற்படுவது இல்லை.\r\n\r\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\r\nஇடும்பை படாதவர் என்றார் வள்ளுவர்.\r\n\r\nஆனால் அளவுக்கு அதிகமான பிரச்சினைகள், எதிர்ப்புத் திறனையும் மீறிய சூழல் ஒருவருக்கு ஏற்படும்போது அவர் மன அழுத்தத்தில் வீழ்ந்து விடுகிறார். அப்படிப்பட்ட சமயத்தில் அவருடைய உற்றார்,உறவினர், சமுதாயம் அல்லது அரசாங்கம் உதவினால் அவர் உள நலம் மீளப்பெற்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்.\r\n\r\nஎதிர்கொள்ளும் திறனும் நம்முடைய சிந்தனைப் போக்கும் \r\n\r\nபலர் எளிய பிரச்சனைகளிலேயே துவண்டு விடுகிறார்களே இது ஏன்? நம்மில் பலர் பிரச்சனைகள் எதிர்கொள்ளும் அளவுக்கு இருக்கும் போதே மன அழுத்தத்தில் வீழ்ந்து விடுகிறோமே இது ஏன்?\r\n\r\nபார்வைகள்\r\n\r\nபிரச்சனைகளை மனிதர்கள் எவ்வாறு பார்க்கின்றனர்? இந்தப் பார்வையில் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறார்கள். பிரச்சனையை வாய்ப்பாக மாற்றிக் கொள்கிறார்கள் சிலர். பிரச்சனையினால் அடித்துச் செல்லப்படுகிறார்கள் பலர். இது ஏன்? பிரச்சனையைப் பார்க்கும் பார்வையில் உள்ள வேறுபாடுதான் காரணம் என்கின்றனர் உளவியலர். இந்தப் பார்வை வேறுபாட்டினால், சிந்தனைப் போக்கால், மனிதர்கள் பொருத்தமான எதிர்கொள்ளும் வழி, பொருத்தமற்ற எதிர்கொள்ளும் வழி என வெவ்வேறு வழிகளில் பயணித்து விடுகின்றனர்.\r\n\r\n பார்வைகளில் சிந்தனைகளில் குறைபாடு ஏன் ஏற்படுகிறது? \r\n\r\nஆல்பர்ட் எல்லிஸ் என்ற உலகப்புகழ் பெற்ற உளவியல் அறிஞர் மூன்று முக்கியமான வகைக் குறைபாடுகள் நம்முடைய சிந்தனையிலும், நம்பிக்கையிலும் பார்வையிலும் உள்ளதால் நாம் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களை எதிர்கொள்ளும் வழிகளில் குறைபாடுகள் ஏற்படுகின்றன என்கிறார்.\r\n\r\nமூன்று முக்கியமான குறைபாடுகள எவை? \r\n\r\nஉதாரணமாக ஒருவருடைய மனைவியிடம் அவர் ஒரு குவளை நீர் தருமாறு ஹாலில் அமர்ந்து கொண்டு கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். காட்சிகள் மூன்று:\r\n\r\n* மனைவி நான் வேலையாய் இருக்கிறேன் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் எனக்கூற கணவன் மறுமொழி கூறாமல் ஆனால் ஏதோ முனகிக்கொண்டு சென்று தானே எடுத்துக்கொள்வது ஒரு காட்சி.\r\n* நீ எப்படி அவ்வாறு கூறலாயிற்று என்று சினம் கொள்வது ஒரு காட்சி,\r\n* இந்த வீட்டில் எனக்கு எந்த மரியாதையும் கிடையாது எல்லாம் என் தலைவிதி என்பது மூன்றாவது காட்சி.\r\n\r\nமுதல் காட்சியில் கணவன் தன்னுடைய உத்தரவிற்கு மனைவி உடன் படாதபோது தண்ணீரைத் தானே எடுத்துக்கொள்ளும் நிலையில் அவர் மனதில் ஓடும் சிந்தனை: நாம் எதிர் பார்த்தது நடக்கவில்லை. வருத்தத்திற்கு உரியதுதான் ஆனாலும் மாற்று வழியைப் பார்ப்போம். இப்படிப்பட்ட சிந்தனை பொருத்தமான எதிர்கொள்ளும் வழியாகும். இதன் அடிப்படையில் உள்ள சிந்தனை என்ன? மற்றவர்கள் நாம் விரும்பியவாறு நடந்து கொண்டால் நன்றாக இருக்கும். பல வேளைகளில் அவ்வாறு நடப்பதில்லை. இது உலக இயற்கை, ஆகையினால் ஏற்றுக்கொள்வோம்.\r\n\r\nஇரண்டாவது காட்சியில் கணவனுடைய மனதில் தன்னுடய மனைவி தான் சொன்னதை எவ்வாறு மறுதலிக்கப் போனாள்? ஒரு போதும் இவளுடைய செயலை ஏற்றுக் கொள்ள மாட்டேன். இவளுடைய செயல் மிகவும் கீழ்மைப்படுத்த வேண்டியது, கண்டிக்கத்தக்கது என்ற சிந்தனை தோன்றுவதால் சினம் கொள்கிறார். இங்கு அடிப்படை சிந்தனை: மற்றவர்கள் அதிலும் குறிப்பாக மனைவி நாம் விரும்பியவாறு நடந்தே தீர வேண்டும். அவ்வாறு நடந்து கொள்ளவில்லையெனில் அவர் நிந்திக்கப்பட வேண்டியவர். கிழ்மைப்படுத்தப்பட வேண்டியவர் (She deserved to be condemned).\r\n\r\nமூன்றாவது காட்சியில் கணவன் மனைவியை விடுத்து தன்னை நொந்து கொள்கிறார். இங்கு அடிப்படைச் சிந்தனை: தான் சரி இல்லை அதனால் தான் இவ்வாறு நடக்கிறது. ஆகையினால் தான் கிழ்மைப்படுத்தபட வேண்டியவர் (I deserve to be condemned).\r\n\r\nஇனி வேறு ஒரு உதாரணம். ஒருவர் வேலைக்கு நேர்முகம் தருகிறார். மிக நன்றாகச் செய்கிறார். நிச்சயமாகத் தனக்கு அவ்வேலை கிடைக்கும் என எண்ணி இருக்கும்போது இடிபோல ஒரு செய்தி. அவரை விட எல்லா விதத்திலும் குறைந்த தகுதியுடைய அவருடைய நண்பரொருவருக்கு அந்த வேலை கிடைத்து விட்டது. இதை ஒருபோதும் ஏற்கமாட்டேன், இந்த உலகத்தையே ஒழித்து விடவேண்டும் என்று கொதித்து எழுகிறார் அவர். இங்கு அடிப்படைச் சிந்தனை: உலகமும், சமூகமும் தான் எதிர்பார்ப்பதற்கு இணங்க நடந்து கொள்ளவேண்டும் இல்லையேல் உலகமும் சமூகமும் கீழ்மைப்படுத்தப்பட வேண்டும்.(world condemnation)\r\n\r\nமன அழுத்தம் இந்த மூன்று வகையான கீழ்மைப்படுத்தலின் (self condemnation, other condemnation, world condemnation) விழைவாக எற்படுகிறது என்கிறார் எல்லிஸ்.\r\n\r\nஏன் மனிதர்கள் தங்களுடைய சிந்தனையில் இவ்வாறு மாறுபடுகிறார்கள்?\r\n\r\nமூன்று உலக நடைமுறைக்கு (நிதர்சனம்) மாறான,பார்வைகள் ( மூட நம்பிக்கைகள்), தான் இதற்குக் காரணம்.\r\n\r\nஅவைகள்:\r\n\r\no பூதாகரப்படுத்துதல் (“awfulize”)\r\no முடிவான, மாறுதலுக்கு உற்படுத்தக் கூடாத நிலைப் பாடு(“absolutize”)\r\no இதை ஒரு போதும் தாங்க என்னால் இயலாது (I can not stand this)\r\n\r\n1.பூதாகரப்படுத்துதல் (“awfulize”): \r\n\r\nஇந்தப் பார்வையினால் நாம் நம்முடைய அனுபவங்களைத் தேவைக்கு அதிகமாகப் பெரிதுபடுத்தி விடுகிறோம். நன்றாக நேர்முகம் தந்த வேலை கிடைக்காது போவது மிகவும் கவலை தருவதுதான். அதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை. ஆனால் அதோடு உலகமே முடிந்து போவது போல அந்நிகழ்வினைப் பார்த்தால் எப்படி? நம்முடைய பார்வைதான் நம்முடைய நிஜம். உலகமே முடிந்து போனது போல் பார்த்தால் பிறகு மனஅழுத்தம் வரத்தானே செய்யும். பல சமயங்களில் நம்மில் பலருக்கு நாம் விரும்பியபடி வாழ்க்கை அமையாமல் போகலாம். நமக்குக் கிடைத்த வாழ்வினை மிகமிகத் துச்சமாகவும் கிடைக்காததை மிகமிக உயர்வானதாகவும் பூதாகாரப்படுத்திப் பார்க்கும் பார்வையுடன் சுய கீழ்மைப்படுத்துதலும் சேர்ந்து கொண்டால் மன அழுத்தத்துடன் மனவீழ்ச்சியும் சேர்ந்து வரும்.\r\n\r\n2. முடிவான, மாறுதலுக்கு உற்படுத்தக் கூடாத நிலைப் பாடு(“absolutize’): \r\n\r\nசற்று சிந்தித்துப் பார்த்தால் நம்மில் பலர் எதையும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதில் ஆணி அடித்தாற் போல் இருப்பதை உணரலாம். ‘should,” “must,” “ought,” “always,” and ‘never,” என்ற சொற்கள் இவர்கள் வாயிலிருந்து அடிக்கடி வருவன. தான் அல்லது மற்றவர்கள் அந்த நிலைப்பாட்டிலிருந்து எள்ளளவும் மாறக்கூடாது, மாறினால் அவர்கள் மோசமானவர்கள் என்கிற பார்வை((“absolutize”) யுடன் மற்றவரைக் கீழ்மைப்படுத்துதலும் சேர்ந்து கொண்டால் மன அழுத்தத்திற்குக் குறைவே இல்லை.\r\n\r\n3. இதை ஒரு போதும் தாங்க இயலாது(I can’t stand this): \r\n\r\nநாம் பல சமயங்களில் கடவுளைப் போல் நடந்து கொள்கிறோம். வாழ்க்கை ரோஜா மலர்ப் படுக்கை இல்லை என்பதைக் கிளிப்பிள்ளை போல சொல்லும் நாம் வாழ்க்கை அவ்வாறு இருந்தே ஆகவேண்டும் என்று அடம் பிடிக்கிறோம். கடவுள் ஒருவருக்குத்தான் தான் விரும்பிய படி வாழ்வது சாத்தியம். மனிதர்க்குச் சாத்தியமே இல்லை. என்னால் அவருடன் வேலை பார்க்க முடியாது. என்னால் அவருடன் வாழ முடியாது. என்னால் இந்த உணவைச் சாப்பிட முடியாது எத்தனை எத்தனை முடியாதுகள்!!!\r\n\r\nஉண்மையில் நாம் முடிவு செய்து விடுகிறோம் இதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று. பிறகு கூறுகிறோம் என்னால் இயலாது என. இந்தப் பார்வை மற்றும் உலகத்தைக் கீழ்மைப்படுத்தும் எண்ணங்கள் ஒன்று சேர்ந்தால் மன அழுத்தம் நிச்சயம்.\r\n\r\nபகுத்தறிவூட்டப்பட்ட உணர்ச்சிகள், செயல்கள் தெரப்பி (Rational Emotive Behavioural therapy):\r\n\r\nதெரப்பி: \r\n\r\nஎந்த ஒரு நிகழ்வு நிகழும் போதும் நாம் (1) நம்மை நாமே கீழ்மைப்படுத்திக் கொள்ளுதல், (2) பிறரைக் கீழ்மைப்படுத்துதல் (3) உலகத்தை அல்லது சமூகத்தைக் கிழ்மைப்படுத்துதல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றினையோ அல்லது அவற்றின் கலவையையோ பயன்படுத்தக் கூடும்.\r\n\r\nஇந்த அணுகுமுறை மூன்று வகையான உளப்பாங்கினால், (பூதாகரப் படுத்துதல், என்னுடைய நிலை மாற்றத்திற்கு உட்படுத்தக் கூடாதது, என்னால் இதைத் தங்கிக்கொள்ள இயலவே இயலாது ) மிகவும் பலப்படுத்தப் படுவதால் மனஅழுத்தம் ஏற்படுகிறது.\r\n\r\nABCDE Format \r\n\r\nA நாம் எதிர்கொள்ளும் ஒரு சூழ்நிலை உதாரணம்: மனைவி நீர் கொண்டுவந்து தர மறுத்தமை\r\n\r\nB இந்தச் சுழலைப் பற்றிய நமது எண்ணம். உதாரணம்: என் மனைவியின் செயல் செய்யத்தக்கது அன்று + பூதாகாரப்படுத்துதல்\r\n\r\nC மன அழுத்தம் அல்லது சினம், பிற உணர்வுகள்\r\n\r\nD இச்சிந்தனையும் பார்வையும் பகுத்தறிவின் பாற்பட்டதா? தர்க்க ரீதியாக, அல்லது நடைமுறையில் உலகத்தில் காணப்படுகிறதா? எல்லாப் பெண்களும் தவறாது கணவன் கேட்கும் போது நீர் கொண்டுவந்து தருகின்றனரா? நம்முடைய நம்பிக்கைக்கு என்ன ஆதாரம்? இப்படிக் கேள்விகளைக் கேட்டோமேயானால் ஒவ்வொரு கேள்விக்கும் இல்லை….இல்லை எனப் பதில் வருவதை உணரலாம்.\r\n\r\nE கேள்விகளை அவசர அவசரமாக புறந்தள்ளி விடாமல், தான் நினைப்பதுவும் தன்னுடைய பார்வையும் சரியானதுதான் என்று அடம் பிடிக்காது, உண்மைத்தேடல் செய்யும் பட்சத்தில் நமக்கு உபயோகமான சிந்தனை பிறக்கும். இதைத் தொடர்ந்து மனஅழுத்தம் விலகும்.\r\n\r\nஒன்றைக் கவனித்து இருப்பீர்கள். சூழல் காரணமாகத்தான் நமக்கு மன அழுத்தத்தின் ஆரம்பம் ஏற்படுகிறது என்றாலும் அவ்வழுத்தம் ஒரு நோய் என்கிற அளவுக்குப் பல்கிப் பெருகுவது நம்முடைய எண்ணங்களினாலும், பார்வைகளினாலும் தான் என்பதை. ஆகவே நாம் நம்முடைய சிந்தனைகளை, நம்பிக்கைகளை, மனப் பார்வைகளை பகுத்தறிவுக்கு உட்படுத்துவோம். அப்படிச் செய்யும்போது மிக அதிகமாக நம்மைப் பாதிக்கக்கூடிய அளவுக்குச் சென்று நம்முடைய எஜமானர்களாகிவிடும் உணர்ச்சிகளை நமக்கு அடங்கி, நலம் புரியும் நண்பர்களாக, பணியாளர்களாக மாற்றுதல் இயலும்.\r\n\r\n \r\n\r\n- அர. வெங்கடாசலம் MA Mphil PhD

Check Also

எடை குறைய எளிய வழிகள் – II

இதற்கு முந்தைய கட்டுரையில் நெகடிவ் கலோரி உணவுகளை அதிகம் உட்கொள்வதின் மூலம் எடை குறைய வழி உண்டு என்று பார்த்தோம். ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *