Home > இலக்கியம் > நமக்கானதோர் மாலைப்பொழுது

நமக்கானதோர் மாலைப்பொழுது

\r\nLoversSun_editedநானெழுதும் ஒவ்வொரு வாக்கியத்துக்குமெதிரான பிரதி வாக்கியமொன்றை\r\nவனைந்துகொண்டிருக்கிறதொரு பறவை\r\nசொல்லொன்று பூமியில் வந்து தெறிப்பதற்கும்\r\nபனம்பழம் கொப்பறுந்து விழுவதற்குமான நிகழ்தகவினை\r\nஎந்தப் பின்னமும் உறுதிசெய்வதாயில்லை\r\n\r\n


\r\n\r\nபருந்துநிழலும் படரா பாலைவெளிதாண்டி\r\nமணல்ரேகை கிழித்து உனக்கும் எனக்கும் மட்டுமேயான\r\nசிறிய, மிகச் சிறியதேயெனினும்\r\nபொழுதொன்றைக் கண்டடைய\r\nஎத்தனைமுறை கூர்ந்து பார்த்தாலும்\r\nஉனதந்தப் பாவனை நிராகரித்துவிடுகிறது\r\n’இந்தப் புன்னகை உனக்கானதல்ல..’\r\n\r\nகுளிக்கும்போது கோர்த்துக் கோர்த்துச் சேகரித்த வார்த்தைகள்\r\nகதவுதாண்டும் முன் உலர்ந்துவிடுகின்றன\r\nஈரத்தைப் போல விட்டுவரவேண்டியிருக்கிறது வார்த்தைகளையும்\r\nகுளியலறைக்குள்ளேயே

Check Also

கிட்டு ஒரு பன்முக ஆளுமை

வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது ஒரு புனிதப் பயணம்! ஈழத்து மண்ணில் ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *