Home > அரசியல் > தீர்வு பேச முயன்ற தயானை தீர்த்துக்கட்டிய மகிந்த

தீர்வு பேச முயன்ற தயானை தீர்த்துக்கட்டிய மகிந்த

சிறிலங்கா அரசின் இனவாத கொள்கைகளையும் இனஅழிப்பு போருக்கு நியாயப்பாடுகளையும் உலகெங்கும் பரப்புரைசெய்து வந்த  ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் பிரதிநிதி தயான் ஜயதிலக மகிந்த சிந்தனையில் அடித்துச்செல்லப்பட்ட அடுத்த  மனிதராக அவரது பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டுள்ளார்.

\r\n

மகிந்த தலைமையிலான அரசு மேற்கொண்டுவந்த சகல நடவடிக்கைகளையும் ஏதோ ஒரு விதத்தில் நியாயப்படுத்தி உலக  அரங்கில் அதற்கு ஆதரவு தேடிக்கொள்ளும் முயற்சியில் தயான் ஜெயதிலக சிங்களதேசத்தின் பிரசார பீரங்கியாக  செயற்பட்டுவந்தார் என்றால் மிகையில்லை.

\r\n


\r\n
\r\n

மகிந்தவின் கொள்கைகளுக்கு சரியாக பொருந்திய இந்த மனிதருக்கு ஏன் இவ்வாறு ஒரு நிலை தற்போது ஏற்பட்டது என்பதை  ஆராயும் முன்னர், இவர் தொடர்பாக ஊடகவியலாளர் சிவராம் ஒரு முறை தனது பத்தியில் குறிப்பிட்ட விவரம் பின்வருமாறு  தெரிவிக்கிறது.

யார் இந்த தயான்?

“1970களின் பிற்பகுதியிலிருந்து தமிழருடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டு மென்ற கோரிக்கைகளை  ஜே.வி.பி. வலியுறுத்தி வந்தது. இந்த அடிப்படையில் மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் எத்தனையோ தமிழ் இளைஞர்கள்  அதில் இணைந்து செயலாற்றினார்கள்.

\r\n

 

\r\n

“1973ஆம் ஆண்டளவில் ஜே.வி.பி. அல்லாத சில படித்த சிங்கள இடதுசாரி இளைஞர்கள் இணைந்து ‘ஸ்டாலினிஸ கல்வி  வட்டம்” என்றொரு அமைப்பை உருவாக்கினார்கள். இவ்வமைப்பு தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையை  முன்னிலைப்படுத்தி எழுதியும் பேசியும் வந்தது. தமிழ் போராட்டக் குழுக்களோடும் இந்த அமைப்பு அந்த நேரத்தில் சில  தொடர்புகளையும் ஏற்படுத்தியிருந்தது.

“ஸ்டாலினிஸ கல்வி வட்டத்தில் தமிழரின் சுயநிர்ணய உரிமை பற்றியும் எமது ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தைப் பற்றியும்  அப்போது முன்னின்று பேசி வந்தவர்தான் தயான் ஜயதிலக்க. அதுமட்டுமன்றி 1982 இலே அவரும் அவரது சகாக்களும்  ‘விகல்ப கண்டாயம” என்ற ஆயுதப் போராட்ட அமைப்பை நிறுவினர்.

“இடதுசாரிக் கோட்பாட்டின் அடிப்படையில் ஈழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த சில இயக்கங்களோடு  இணைந்து தமிழரின் சுய நிர்ணய உரிமைக்காக அவர்கள் செயற்பட்டனர்.

“அப்போதெல்லாம், மூன்றாம் உலக நாடுகளில் நடைபெற்றுவந்த விடுதலைப் போராட்டங்களைப் பற்றியும் ஏகாதிபத்தியத்தின்  உலகளாவிய அடக்குமுறைகளைப் பற்றியும் தயான் ஜயதிலக முன்வைத்த கூர்மையான விளக்கங்களும் ஆய்வுகளும்  ஏற்படுத்திய தாக்கத்தை யாரும் குறைத்து மதிப்பிடமுடியாது.

“விகல்ப கண்டாயம அமைப்பு அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு 1986ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்டது.  தயான் ஜயதிலக்க தலைமறைவாகினார். அவரை சிறிலங்கா காவல்துறையினரும் படையினரும் சல்லடைபோட்டுத் தேடின  1987இல் அவர் பிடிபட இருந்த வேளையில் என்னுடன் தொடர்புகொண்டார்.

\r\n

“கொழும்பில் தயான் ஜயதிலக்க இருந்த மறைவிடத்திலிருந்து அவரை பாதுகாப்பான வேறு இடத்திற்கு கொண்டுசெல்ல  அப்போது அவருக்குத் தெரிந்த பல சிங்கள நண்பர்கள் கூட எனக்கு உதவ மறுத்தனர். இறுதியில் நடுநிசியில் அவரை  இரகசியமாக அழைத்துச் சென்று மறைந்த நடிகரும் ஜனாதிபதி சந்திரிகாவின் கணவருமான விஜயகுமாரதுங்கவிடம் பேசி  அவருடைய உதவியுடன் கொழும்பிற்கு வெளியில் ஒரு மறைவிடத்தில் தங்கவைத்தோம்.

\r\n(இது விடயத்தில் தனது மனைவி  உட்பட யாரிடமும் ஆலோசனை கேட்காது எனக்கு உடனடியாகவே உதவிய விஜய குமாரதுங்க ஒரு வித்தியாசமான மனிதர்)  தயான் ஜயதிலக்க பின்னர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றார். பின்னர் பொதுமன்னிப்புப் பெற்று திரும்ப வந்து மாகாணசபையில்  அமைச்சரானார்.” – இவ்வாறு சிவராம் அவர்கள் இவரது பணிகளை குறிப்பிட்டு –

“இந்தளவிற்கு தமிழர் விடுதலை இயக்கங்களோடு நெருங்கிப் பழகிய தயான் ஜயதிலக இன்று என்ன செய்கிறார்? தமிழருடைய  போராட்டம் எப்படியெல்லாம் முறியடிக்கப்பட வேண்டும் என இடையறாது எழுதி வருகிறார். ஒரு காலத்தில் கடும் அமெரிக்க  ஏகாபத்திய எதிர்ப்பாளராக இருந்த அவர் இன்று தமிழரின் படைபலத்தை இல்லாதொழிப்பதற்கு அமெரிக்காவுடன் சிறிலங்கா  கூட்டுச்சேர வேண்டுமென வலியுறுத்தி கிழமைக்குக் கிழமை எழுதி வருகிறார்.

“ஒரு காலத்தில் தமிழர்கள் சிங்களவர் என்ற பேதத்திற்கப்பால் ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு எதிராகவும் வர்க்க  விடுதலைக்காகவும் எழுதியும் பேசியும் வந்த எனது இனிய நண்பன் தயான் ஜயதிலக்க இன்று ‘நாம்” அதாவது  சிங்களவர்களாகிய நாம் தமிழ் மக்களின் படைபலத்தை முறியடிக்க அமெரிக்காவின் உதவியை சிங்கள தேசம் கட்டாயம் நாட  வேண்டும் என ‘ஐலன்ட்” செய்தித் தாளில் எழுதுகிறார். இவருக்கு என்ன நடந்தது? – என்று ஐந்து வருடங்களுக்கு முன்னர்  கேள்வி எழுப்பியிருந்தார் சிவராம் .

அதாவது முன்பொரு காலத்தில் தமிழர் விடுதலைப்போராட்டத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் இருந்த தயான் திலக,  தலைமறைவாகி பின்னர் வந்து மாகாணசபை அமைச்சராகிய பின்னர் சிங்களத்தின் இனவாத சேற்றில் விழுந்தார். தனது  கொள்கைகளை தலைகீழாக மாற்றினார்.

சிங்கள தேசத்தின் பிரசாரப்பீரங்கி

அண்மைக்காலம்வரை அவரது பத்திகளை வாசித்தவர்களுக்கு அவரது இனவாத கருத்துக்கள் எவ்வளவு வீரியமானவை என்று  புரிந்திருக்கும்.

– விடுதலைப்புலிகளின் நோக்கம் தமிழீழத்தை பெற்றுக்கொள்வது மட்டுமல்ல. அதன் அடுத்தபடியான சிறிலங்கா  முழுவதையும் கைப்பற்றுவது. அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் இதற்குரிய புலிகளின் ஆவணங்கள்  மீட்கப்பட்டுள்ளன. பாலஸ்தீனர்கள் யூதர்களிடம் தமது மண்ணை முற்றாக இழந்துவிடக்கூடாது. சிங்கள தேசம்  விழித்துக்கொள்ளவேண்டும்.

– மே 19 என்பது சிறிலங்காவை பொறுத்தவரை வெறுமனே போர் நடந்துமுடிந்த தினம் அல்ல. பய்ஙகரவாத்திடமிருந்து  சிறிலங்காவை மீட்ட புனித தினம். இதனை இனிவரும் சந்ததியும் நினைவு கூரும் வண்ணம், ஒவ்வொரு வருடமும் மே 19  ஆம் திகதியை வெற்றிநாளாக அரசு அறிவிக்கவேண்டும்.

– பிரபல பொப் இசை பாடகி மியாவுக்கு சரிசமனாக சிங்கள இளைஞர் யுவதிகளும் திறமைகளை வெளிக்கொணர்ந்து,  சிங்களதேசத்தின் கருத்துக்களை வெளிஉலகுக்கு சொல்லும் பிரசார கருவிகளாக மாறவேண்டும்.

– புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் என்ற மாபெரும் சக்தியை சிதைக்க மெதுவாக மெதுவாக பல கட்ட நடவடிக்கைகளை  மேற்கொள்ளவேண்டும். அதற்கு புலம்பெயர்ந்துவாழும் சிங்கள மக்கள் தொடர்ந்து பணியாற்றவேண்டும்.

போன்ற பல கருத்துக்களை தனது பத்திகளுக்கு ஊடாக தெரிவித்துவந்தமை மட்டுமல்லாமல், கடைசியாக நடைபெற்ற ஐக்கிய  நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில், சிறிலங்கா அரசின் போர் நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை செய்ய  குழு ஒன்று அமைக்க வேண்டுமா என்பது தொடர்பான விவாதம் நடைபெற்றபோது –

சிறிலங்கா அரசின் பிரதிநிதியாக சென்று அங்கு தனது வாதத்திறமையை காண்பித்து, சிங்கள தேசத்தின் போர்  நடவடிக்கைகளை நியாயப்படுத்தி – அது புரிந்த மனிதப்பேரவலத்தை நியாயப்படுத்தி – சிறிலங்காவுக்கு சார்பாக முடிவு அங்கு  எட்டப்படுவதற்கு பெரும்பணி செய்தவர்.

பதவி பறிபோனது ஏன்?

இப்படிப்பட்ட தயான் அவரது பதவியிலிருந்து ஏன் தூக்கப்பட்டார் என்பது அனைவருக்குமே புரியாத புதிராக உள்ளபோதும்,  தமிழர்களுடனான அதிகாரபகிர்வு தொடர்பான விடயங்கள் பற்றி  மீண்டும் இவரில் ஏற்பட்ட மனமாற்றமே இவரது பதவிக்கு  இயமனாக அமைந்துவிட்டது என்று தெரியவருகிறது.

அதாவது தயான் திலக்க அண்மைக்காலமாக தனது பத்திகளில் ஓயாமல் இடித்துரைத்துவந்த விடயம் 13 ஆவது அரசமைப்பு  சீர்திருத்தத்தை சிறிலங்கா கட்டாயம் அமுல்படுத்தவேண்டும் என்பதாகும். அதற்கு பல்வேறு நியாயங்களையும் முன்வைத்தார்.

13 ஆவது அரசமைப்பு சீர்திருத்தம் தனிநாட்டுக்கான அரசியல் தீர்வாக அமையாது. அது அவ்வாறு அமையும் என்று  தெரிந்திருந்தால் வீடுதலைப்புலிகள் எதிர்த்திருக்கமாட்டார்கள். அதற்கு எதிராக இந்தியாவுடன் போரிட்டிருக்கமாட்டார்கள்.  ஆகவே, 13 ஆவது அரசமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாக ஓரு தீர்வினைக்கொடுத்து தமிழர்களின் வாயை  அடைத்துவிடவேண்டும். அவ்வாறு சிறிலங்கா செய்துகொண்டால், தமிழர்களின் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் மட்டும்  நாம் பேசிக்கொள்ளலாம். இல்லாவிட்டால், உலக நாடுகள் ஒவ்வொன்றும் சிறிலங்காவுக்கு ஆலோசனை, அழுத்தம் என்று  ஏதோ ஒரு வகையில் இந்த தமிழர் பிரச்சினையை வைத்து நச்சரித்துக்கொண்டிருக்கப்போகின்றன.

என்று 13 ஆவது அரசமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக தனது வியாக்கியானங்களை அள்ளி வீசினார் தயான் திலக.
எந்த ஒரு தீர்வையும் தமிழருக்கு வழங்குவதில்லை என்ற முடிவோடு இருந்துகொண்டு சர்வதேசத்தின் காதில் பூச்சுற்றி  அவற்றிடம் நிதி கறப்பதற்கு மட்டும் தீர்வு பொதி ஆராய்ச்சி செய்யும் நாடகங்களை அரங்கேற்றிவரும் மகிந்தவுக்கு –

தயானின் இந்த மித மிஞ்சிய ஆலோசனையும் அதனை முழு மூச்சாக பிரசாப்படுத்திய விதமும் சீற்றத்தை ஏற்படுத்தியது.

இது ஒரு புறமிருக்க –

சர்வதேச அரங்கில் தமிழின எதிர்ப்பு கருத்துக்களை விதைத்து விடுதலைப்புலிகளை பல நாடுகளில் தடை செய்வதற்கு  பெரும்பங்கு புரிந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் போன்று தயான் மிகச்சிறந்ததொரு தமிழின  எதிர்ப்பாளராகவும் அதேவேளை பிரசார விடயத்தில் கைதேர்ந்தவராகவும் காணப்பட்டமை அவர் வெளிவிவகார அமைச்சராக  பணிபுரிவதற்குரிய தகுதியை காண்பிக்கிறது என்று மகிந்தவின் காதுபட சில ஆலோசனைகள் அரசின் உள்வட்டாரங்களினால்  முன்மொழியப்பட்டிருக்கின்றன.

இதனால், உசாரடைந்த சிறிலங்காவின் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம அண்மைக்காலமாகவே  தயான் ஜெயதிலகவுக்கு எதிரான விடயங்களை மகிந்தவிடம் ஒப்புவித்து, தனது நாற்காலியை காப்பாற்றும் வேலைகளில்  தீவிரமாக ஈடுபட்டார்.

\r\n

தயானுக்கு எதிராக எல்லா முறைப்பாடுகளும் ஒருங்கு சேர, மகிந்த சிந்தனையின் இன்னொரு அஸ்திரம் தயானை நோக்கி  பாய்ந்தது. விளைவு, சிங்கள மக்களே பிரமிக்கும் வகையில் கண்ணிமைக்கும் நேரத்தில் தயானின் கதிரை பறிபோனது.

\r\nவிடுதலைப்புலிகளை காரணம் காட்டியே இனவாதம் பேசிய தயானை போன்றவர்கள் சிறிலங்கா அடைந்துள்ள வெற்றியை  தொடர்ந்து தமிழர்களுக்கு ஓரளவாவது உரிமையை கொடுக்கவேண்டும் என நினைத்தாலும் அது சாத்தியமாக போவதில்லை  என்பதை மீள வலியுறுத்தும் விதமாக இந்த விடயத்தை பார்க்கலாம். தாம் நினைத்த அரசியல் இராணுவ நிகழ்ச்சி  நிரல்களுக்குள் யார் குறுக்கிட்டாலும் வேட்டு நிச்சயம் என்ற மகிந்தவின் குடும்பவின் ஆட்சி யாகத்தில் இறுதியாக  ஆகுதியாகியிருப்பவர் தயான். இதேவழியில் செயற்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமவீரவுக்கு இதேகதி  ஏற்பட்டது என்பதும் அனைவரும் அறிந்தவிடயமே.

தமிழ் மக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டளவான உரிமைகளையாவது கொடுக்கவேண்டும் என சொல்பவர்களை கூட மகிந்த  தன்னருகில் வைத்திருக்கமாட்டார் என்பதே தயான் ஜெயதிலகவுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை சொல்லும் செய்தியாகும்.\r\n\r\n

\r\n\r\n- தெய்வீகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *