Home > அரசியல் > தேசியத்தைப் பறைசாற்றப்போகும் தாயகத்தி்ன் தேர்தல்

தேசியத்தைப் பறைசாற்றப்போகும் தாயகத்தி்ன் தேர்தல்

ரிமை இழந்தோம்.உடமையை இழந்தோம்.உணர்வை இழக்கலாமா…\r\nஉணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா...\r\n\r\nபெரும்பாலான ஈழத்தமிழர்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் இப்பாடல் வரிகள்தாம் இப்போது வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்  தேர்தல்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.\r\n\r\n


\r\n\r\nஈழவிடுதலைக்கான ஆயுத போராட்டம் தோல்வியடைந்த நிலையில், மாற்றுதிட்டங்களை முன்வைத்து மக்களை வழிநடத்திச்  செல்லவேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் தற்போது தமிழ்த்தேசியச் சக்திகள் நிற்கின்றன.\r\n\r\nஆயுதப்போராட்டம் மூலமே இனப்படுகொலை ஒன்றைத் தடுக்கமுடியும் என்ற சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டு, அந்த வழியைத்  தேர்ந்தெடுத்த தமிழர்களின் சேனை அந்தப் பாதையில் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில்-\r\n\r\nஇன்று அதே ஆயுதப்போராட்டத்தைக் காரணமாக வைத்து மீண்டும் தமது மக்களை ஒரு மனிதப்பேரவலத்துக்குள்  தள்ளிவிடக்கூடாது என்ற ஒரே நோக்குடன் தமது ஆயுதங்களை மெளனிக்கச்செய்துள்ளது.\r\n\r\nசிறிலங்கா என்ற நாட்டின் இராணுவ வலுவோடு மட்டும்தான் விடுதலைப் போராளிகள் மோதவேண்டிய நிலை இருந்திருந்தால்  தற்போது தமிழீழ தேசம் உருவாகியிருக்கும். ஆனால், நடந்துமுடிந்த போர் எவ்வாறான ஒரு சமச்சீரற்ற ஒழுங்கில்  இடம்பெற்றது என்று யாவருக்கும் தெரியும். உலக வல்லாதிக்கப் போட்டிகளுக்குள் தமிழீழ விடுதலைப்போராட்டமும் இழுத்துச்  செல்லப்பட்டபோது உலக நாடுகள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் சிறிலங்கா அரசின் இராணுவ இயந்திரத்திற்கு  முண்டுகொடுத்தன.\r\n\r\nஇதனால் ஏற்பட்ட இராணுச் சமச்சீரற்ற நிலை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கட்டியெழுப்பட்ட விடுதலை இயக்கத்தின்  இராணுவக் கட்டமைப்புக்களை அழித்துச் சென்றிருக்கிறது. உலக இயங்கியலானது தர்மம் என்ற அச்சில் சுழலவில்லை  என்பதற்கான இன்னொரு சான்றாக ஈழவிடுதலைப்போரின் தற்போதைய இறுக்கமான காலகட்டம் நிருபித்திருக்கிறது.\r\n\r\nசுதந்திரத்திற்காக அவாவும் ஒரு தேசிய இனத்தின் அபிலாசைகளை இராணுவ வல்லாதிக்கம் மூலம் உடைத்துவிடலாம் என  இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் சிறிலங்கா அரச இராணுவ இயந்திரத்திற்கு ஈழத்தமிழ் மக்கள் என்ன செய்யமுடியும்?\r\n\r\nசுதந்திர தமிழீழத் தனியரசை அமைக்கப் புறப்பட்ட தமிழீழ மக்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் நகரசபை  தேர்தல்கள் மூலம் எவற்றைச் சாதிக்கமுடியும்?\r\n\r\nதமிழர் தாயகத்தில் ஒரு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்படி கேள்விகள் இயல்பானவை. இவற்றை ஆழமாகக்  கருத்திற்கொண்டு செயலாற்றவேண்டியது இன்றைய அவலம் நிறைந்த சூழ்நிலையிலும் தமிழ்மக்களின் கட்டாயக்  கடமையாகியுள்ளது.\r\n\r\nசிறிலங்கா அரசுக்கும் உலகநாடுகளுக்கும் இந்தத் தேர்தலின் ஊடாக தமிழ் மக்கள் தமது உரிமைகளை – தமது அபிலாஷைகளை  – தமது கோரிக்கைகளை – தமது வலிகளை – அதனைத் தந்தவர்களின் சுயரூபத்தினை – தமது லட்சியத்தினை – தமது  கொள்கைகளை மீண்டும் ஒலிக்கசெய்யவேண்டும். அதுவே வரப்போகும் இந்தத் தேர்தலின் ஊடாக தமிழ்மக்களால் செய்யகூடிய  பலமான பணியாக அமையும்.\r\n\r\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எனப்படும் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் தமிழர்களின் முழுமையான அடிப்படைக் கோட்பாடுகளை  முன்வைத்து இன்றுவரை செயற்பட்டு வருகிறது. சில தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் அல்லது  நடவடிக்கைகள் சிலவேளைகளில் சிலருக்கு அவர்கள் மீதான சந்தேகத்தை உண்டுபண்ணலாம்.\r\n\r\nஆனால், அவர்கள் அனைவரும் தமிழர்களின் அடிப்படைக் கோட்பாடுகளான தமிழர் தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற  கொள்கையில் இன்றுவரை உறுதியோடு இருக்கிறார்கள் என்பதையும் அதற்காக அவர்களும் பல தியாகங்களைச்  செய்திருக்கிறார்கள் என்பதையும் மறக்கக்கூடாது.\r\n\r\nஅதேவேளையில், சிறிலங்கா அரச – இராணுவ இயந்திரத்திற்குள் இருந்துதான் அவர்கள் தமிழ்மக்களுக்கான அரசியல்  பயணத்தை முன்னெடுக்கவேண்டிய இக்கட்டான இடருக்குள் இருக்கிறார்கள் என்பதையும் அதற்குள் அவர்கள்  எதிர்கொள்ளக்கூடிய நெருக்கடிகளையும் புரிந்துகொள்ளவேண்டும்.\r\n\r\nஆகவே, தமிழ்த்தேசியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து தாயகத்தில்  ஒரு பலமான தளத்தை உருவாக்கவேண்டிய தேவை உணரப்படவேண்டும். அதேவேளை அந்தத் தரப்பினரின்  நடைமுறைச் சிக்கல்களையும் உணர்ந்து அவர்கள் தேசியத்தின்பால் பணிபுரிய பலம் அளிக்கவேண்டும்.\r\n\r\nஎனவே, நடைபெறப்போகும் தேர்தலில் யாழ்ப்பாண மற்றும் வவுனியா பகுதியில் வாழும் மக்கள் வழங்கப்போகும் தீர்ப்புத்தான்  தமிழர்கள் இதுவரைகாலமும் நடத்திய போராட்டத்தின் நியாயதன்மையையும் போருக்குப்பின் உணர்த்திய வரலாற்றுத்  தீர்ப்பாகவும் இருக்கப்போகிறது.\r\n\r\nஆக்கிரமிக்கப்பட்ட மண்ணிலிருந்து ஒலிக்கப்போகும் அடக்கப்பட்ட இந்த மக்களின் குரல் இம்முறை தேர்தலின் மூலம் உலகின்  மனச்சாட்சியைத் தட்டிக்கேட்க வேண்டும்.\r\n\r\n

\r\n\r\n- தெய்வீகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *