Home > மருத்துவம் > சிந்திக்கும் தொப்பிகள்

சிந்திக்கும் தொப்பிகள்

சிந்திக்கும் திறன் மனிதனுக்கு வாய்த்த செல்வங்களில் எல்லாம் தலையாயது. இந்தச் செல்வத்தின் அருமையை அறிந்த யாரும் தான் சிந்தனையின் எல்லையை அடைந்து விட்டதாக எண்ண மாட்டார்கள். பிறரை வாதத்தில் வெற்றி கொள்ள நினைப்பவர்கள் மட்டும் அவர்கள் வெற்றி பெறுகிற போது, தான் சிறப்பாகச் சிந்தித்து விட்டதாக கர்வம் கொள்வார்கள். இந்தமாதிரியான எண்ணம் ஒருவரிடம் இருக்குமேயானால் அவர் தன்னுடைய முழு சிந்தனைத் திறமையைப் பயன்படுத்தாது போகக்கூடும்.\r\n\r\n


\r\n\r\nஇரண்டாவதாக, சிந்தனையைப் பாதிக்கும் மற்றொரு காரணி, நாம் சிந்திக்கும் போது செய்துகொள்ளும் குழப்பம் – உணர்ச்சிகள், தகவல்கள், தர்க்கங்கள், நம்பிக்கை மற்றும் புதியன புனையும் வேட்கை என்கிற கருவிகளை ஒன்று சேர்த்து, ஒரேசமயத்தில் பயன்படுத்துகிறோம். ஒரு மர வேலை செய்யும் தச்சர் ஒரே சமயத்தில் பல கருவிகளைப் பயன்படுத்தினால் அல்லது ஒருவர் ஒரே சமயத்தில் பல குதிரைகளிற் சவாரி செய்ய முயன்றால் எவ்வாறு இருக்கும்? அதே சமயத்தில் பயன் தரும் முடிவுகளை எடுக்கும் சிந்தனைக்கு இந்தத்திறமைகள் யாவும் தேவையானவையே. அவற்றைப் பயன்படுத்தவும் வேண்டும் குழப்பம் இல்லாமல் பயன்படுத்தத் தெரியவும் வேண்டும். ஏனெனில் சரியாகச் செய்யப்படும் சிந்தனைதான் களங்கம் இல்லாத முன்னேற்றத்தை – அது தனிமனித வாழ்க்கையாயினும் சரி அலுவலகமாயினும் சரி தரவல்லது.\r\n\r\nஆக, இரண்டு தீர்வுகள் தேவைப்படுகின்றன. ஒன்று ஈகோ இல்லாமல் மற்றவர்களோடு பேசவேண்டும். இரண்டு சிந்தனைக் கருவிகளை தேவையான அளவுக்குப் பயன்படுத்தவும் வேண்டும். ஒருவர் மற்றவருடன் கலந்து ஆலோசிக்கும் போதோ அல்லது கணவன் மனைவியிடம் பேசும் போதோ தான் (ஈகோவின் தூண்டுதலினால்) ஜெயித்தே தீர வேண்டும் என நினைத்தால் தம்முடைய எல்லாக் கருவிகளையும் பயன்படுத்த மாட்டார். எந்தக் கருவி வாகாக வருகிறதோ, அந்தக் கருவியை – உதாரணமாக, மனைவிக்குக் குற்ற உணர்வை (புதியன புனைதல்) ஏற்படுத்தி அல்லது அலுவலகத்தில் சக அலுவலருக்குத் தேவைப்படுகிற ஒத்துழைப்பைத் தராமல் ஜெயிக்கப் பார்ப்பார்.\r\n\r\nஈகோவை சுயமரியாதையாக மாற்றத் தெரியவேண்டும். பிறகு எல்லாக் கருவிகளையும் எவ்வாறு ஒருங்கிணைத்துப் பயன்படுத்துவது என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும்.\r\n\r\nஆறு சிந்திக்கும் தொப்பிகள் என்ற தன்னுடைய உத்தியைப் பயன்படுத்தி எட்வேர்டு டி போனோ என்ற உளவியலர் எவ்வாறு தர்க்கவாதத்தை உணர்ச்சிகளில் இருந்து பிரிப்பது அல்லது தகவல்களை புதியன புனைதலில் இருந்து பிரிப்பது அல்லது ஒரே சமயத்தில் இவற்றைப் பயன் படுத்தினாலும் ஒன்றன் பின் ஒன்றாக எவ்வாறு குழப்பம் இல்லாது நமக்குப் பெரிதும் பயன் தரும் வகையில் பயன்படுத்துவது, இவ்வாறு செய்யும்போது பெருமிதம்(ஈகோ) எவ்வாறு சுயமரியாதையாக மாறுகிறது என்று காட்டி உள்ளார்.\r\n\r\nறு ண்த் தொப்பிள்:\r\n

01வெள்ளைத்தொப்பி: வெண்மை நிறம் ஒரு சார்பு இல்லாத நிலையையும் எதையும் உள்ளது உள்ளபடி தெரிந்து கொள்வதையும் குறிக்கும். அதாவது உண்மை நிலவரங்கள், மற்றும் புள்ளி விவரங்கள் மட்டுமே இந்தத் தொப்பியின் குறிக்கோள்.

\r\n

02சிவப்புத்தொப்பி: சினம், பெரும் சினம், பொறாமை,, உணர்ச்சிக் கொந்தளிப்பு மற்றும் உணர்ச்சிகளின் கோணத்தையும் அவை மனிதன் என்ன செய்ய வேண்டுகின்றன என்பதையும் குறிக்கும்

\r\n

03கருப்புத்தொப்பி: நிதானம், ஜாக்கிரதை உணர்வு மற்றும் ஒரு கருத்தில் உள்ள பலவீனத்தைச் சுட்டிக் காட்டும்.

\r\n

04மஞ்சள் தொப்பி: பிரகாசம், உற்சாகம், பரவசம், நம்பிக்கை மற்றும் ஃபாசிடிவ் சிந்தனையைக் காட்டும்.

\r\n

05பச்சைத்தொப்பி: பச்சை நிறம் ஆக்கத்தை, செல்வத்தை, எல்லையில்லாத் தன்மையை மற்றும் பெரும் பேறுகளைக் குறிக்கும்.

\r\n

06நீலத்தொப்பி: நீலம் குளிர்ச்சி மற்றும் பதட்டமின்மையைக் குறிக்கும். தன்னிலிருந்து வெளிப்பட்டு வெளியேயிருந்து தன்னைக் கூர்ந்து நோக்கி ஒழுங்குபடுத்த, கட்டுப்படுத்த உதவுகிற சிந்தனையைக் குறிக்கும்

\r\nதொப்பிகளை எவ்வாறு பயன்படுத்துவது?\r\n\r\nஇக்கேள்விக்குப் பதில் காண்பதற்கு முன்னர் தொப்பிகளைப் பயன்படுத்தத் தேவைப்படும் சிந்திக்கும் முறையைப் பற்றி சில வார்த்தைகள்.\r\n\r\nஇயைந்த சிந்தனை: (Parallel thought)\r\n\r\nஉங்கள் துணைவி உங்கள் தாயினைப் பற்றி உங்களிடம் புகார் கூறுவதாகக் கொள்வோம். அவர் பேசும்போது அவர் கூறும் தகவல்களை மறுத்து மறுத்து உங்கள் மனதிற்குள்ளே நீங்களும் பேசுவீர்களா? அல்லது அவர் கூறுயதைப் போன்ற உங்களுக்குத் தெரிந்த பிற தகவல்கள் உங்கள் நினைவுக்கு வருமா? நினைவுக்கு வந்தால் நீங்கள் இயைந்த சிந்தனை செய்கிறீர்கள் என்று பொருள். அவ்வாறு இல்லாது தகவல்களை மறுத்தாலோ அல்லது தகவல்களுக்கு விளக்கம் அளித்தாலோ நீங்கள் வாதம், எதிர்வாதம் அல்லது அவர் கூறுவதைப் பற்றி கேள்வி எழுப்புவது போன்ற சிந்தனையில் உள்ளீர்கள் என்று பொருள்.\r\n\r\nஇயைந்த சிந்தனை ஏன் வேண்டும்?\r\n

உண்மைக்குப் பல முகங்கள். எல்லோர் சொல்வதிலும் ஏதாவது ஓர் உண்மை அல்லது ஓர் உண்மைத் தகவலாவது இருக்கும். அந்த உண்மை அல்லது தகவல் சரியான களங்கம் இல்லாத முடிவு எடுப்பதற்குப் பயன்படக்கூடும். ஒருவர் பேசும்போது மற்றவரும் அதேபாதையில் பயணித்தால் முதலில் பேசுபவரின் ஈகோவுக்கு மிரட்டல்(threat) இல்லை. அவர் அந்த நிலையில் சரளமாக மடைதிறந்த வெள்ளம் போல் பேசுவார். உதாரணமாக பலபேர் ஓர் அலுவலகத்தில் மார்க்கட்டிங் ஸ்ட்ரேட்டஜி பற்றிப் பேசுவதாக வைத்துக் கொள்வோம். அந்தக் கூட்டத்தின் தலைவர் முதலில் பேசுபவர் கருத்தை ஒட்டித் தானும் தனக்கு தெரிந்த தன்னுடய அனுபவத்தைக் கூறினாரேயானால் பேசுபவர் மேலும் மேலும் உற்சாகமாகத் தகவல்களைத் தருவார். இவ்வாறே எல்லோரும் இயைந்த சிந்தனை செய்து அவரவர் அனுபவத்தைக் கூற அங்கே ஒரு கருத்துக் களஞ்சியமே உருவாகிவிடும்.

\r\nParallel thinking என்ற ஆங்கிலத் தொடரின் பொருளைப் புரியும் படி சொல்லி விட்டேன் என்று நம்பி அதற்கு தமிழ்ப் பெயர் இடலாம் என நினைக்கிறேன்.\r\n\r\nஓரு குறள் நினைவுக்கு வருகிறது.\r\n\r\nகருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை\r\nஉடைத்தாம் இவ்வுலகு.\r\n\r\nதன்னுடன் வேலை செய்பவர்கள் பிரச்சனையை அவர்கள் பார்வையிலேயே பார்த்து, அவர்களுக்கு வேண்டியதை, எடுத்துக் கொண்டு காரியம் கெடாமல் செய்யும் திறமை உள்ளவர்களுக்கு, யாருடன் கண்ணோடினார்களோ, அவர்களுடைய நேரத்தின் மீதும் உழைப்பின் மீதும் உரிமை உண்டாகும்.\r\n\r\nகண்ணோட்டச் சிந்தனை என்ற சொற்றொடர் பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றுகிறது.\r\n\r\nஒரு பிரச்சனையைப் பற்றி சிந்திக்கும் போது மற்றவர்களோடு கண்ணும் ஒடிக்கொண்டு எவ்வாறு களங்கமில்லாத முடிவினை எடுப்பது? இங்கேதான் வருகின்றன சிந்தனைத் தொப்பிகள்.\r\n\r\nவெள்ளைத் தொப்பிச் சிந்தனை:\r\n\r\nஓர் ஆய்வகத்தில் இரத்தப் பரிசோதனை செய்யும் ஒருவர் எவ்வாறு விருப்பு வெறுப்பு இன்றி புள்ளி விவரங்களைச் சேகரிப்பாரோ அதைப்போல செயற்படுதல் வெள்ளைத் தொப்பிச் சிந்தனை. சாதாரணமாக அலுவலகங்களிலோ அல்லது இல்லங்களிலோ இவ்வாறு செயல்படுவது இயலாது. வாழ்க்கை இயந்திர மயமாகிவிடும். உண்மை என்று நம்புவதை வைத்துச் செயற்படுகிறோம். பெரும் பாதிப்பு ஏற்படுவது இல்லை.\r\n\r\nஆனால் ஒரு பிரச்சனை என்று வரும்போது நம்முடைய உண்மைகளைச் சோதிக்கத் தயங்கக் கூடாது. நம்பப்படும் உண்மைகள், சரி பார்க்கப்பட்ட உண்மைகள் என்று இரண்டு உண்மைகள் உண்டு என்பதை நாம் உணர்ந்தோமானால் இது சாத்தியமே.நம்பப்படும் உண்மைகளை சரி பார்க்கப்பட்ட உண்மைகளாக மாற்றுவதுதான் வெள்ளைச் சிந்தனையாகும்.\r\n\r\nஉதாரணமாக ஆலோசனைக் கூட்டத்தில்: “இதுவரை எல்லோரும் உங்களுடைய கருத்துக்களைக் கூறினீர்கள். இப்போது நாம் பேசிய சிலவற்றின் உண்மைகளைக் கண்டறிவோம். திருவாளர் நடேசன் நம்முடைய போட்டி நிறுவனத்தின் ப்ராடக்ட் நம்மை விட அதிகமாக விற்பனையாவதற்குக் காரணம் அவர்கள் சிறிய பேக்கிங் வைத்து உள்ளனர். நம்முடைய பேக்கிங்கில் சிறிய பேக் இல்லை. எல்லோராலும் வாங்க முடியவில்லை என்கிறார். இப்போது எல்லோரும் வெள்ளைத் தொப்பி அணிந்து உங்கள் கருத்தைக் கூறுங்கள்.”\r\n\r\nவெள்ளைத் தொப்பிச் சிந்தனை என்பது அறுதியான உண்மையைக் கண்டறிவதன்று. அது இயலாத ஒன்று. எத்தனை நிலவரங்கள் இதைப் பற்றி இங்கு உள்ளவர்களுக்குத் தெரியும் என்பதுதான் பொருள். வெள்ளைத் தொப்பிச் சிந்தனையினால் எல்லா சமயங்களிலும் இது சரி என்பதிலிருந்து தொடங்கி ஒருபோதும் இல்லை என்பதுவரை இடையே பெரும்பாலும், சிலநேரங்களில் மட்டும் என்ற விடைகள் கிடைக்கலாம்.\r\n\r\nசிவப்புத் தொப்பி:\r\n\r\nபொதுவாக நிர்வாகத்தில் அல்லது இல்லத்தில் உணைச்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். பிசினஸ் டிஸ்கஷனில் உணர்ச்சிகளுக்கு இடமே இல்லை எனவும் நினைக்கிறார்கள். உண்மையில் உணர்ச்சிகள் தர்க்கம் (logic) என்ற போர்வையில் வெளிப்படுகிறது.\r\n\r\nசிவப்புத் தொப்பி அடிவயிற்றிலிருந்து ஏதோ உணர்ச்சி (gut feeling) அல்லது உள்ளுணர்வு (intuition) போன்ற உணர்வுகளையும் பொறாமை, ஏமாற்றம் போன்ற பிற உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதற்குச் சங்கடமில்லாத வழியாகும். எல்லொரும் சிவப்புத் தொப்பி அணிந்து பேசப்பழகி விட்டால் முடிவுகளில் உணர்ச்சிகளுக்கு ஓர் அங்கிகரிக்கப்பட்ட ஸ்தானம் கிடைத்துவிடும். உணர்ச்சிகள் ஒருவரைக் கொண்டு செலுத்தும் சக்தியாகும். உணர்ச்சிகள் நம்முடைய கனவுகளையும் நெறிகளையும் சக்திப்படுத்துபவை. ஆகவே அவற்றைப் பரஸ்பரம் அங்கீகரித்தலும் பரிகாரம் தேடுதலும் அவசியம். மருந்து இடுதலும் அவசியம்.\r\n\r\nஎன்னுடைய பயனாளர் ஒருவர் தன்னுடைய குழந்தை மிகவும் அழுது அடம் பிடிக்கிறான் என்ன செய்வது எனக்கேட்டார். அவருடய குழந்தைக்கு ஆறு தொப்பி வைத்தியம் செய்தோம். நான் அக்குழந்தைக்குப் பயிற்சி அளித்தேன். நீண்ட நேரம் அழுது ஆர்பாட்டம் செய்யும்போது நீ சிவப்பு தொப்பியிலேயே எவ்வளவு நேரம் இருக்கப்போகிறாய் எனக்கேட்டால் உடனே அவன் அழுகையை நிறுத்தி விடுவான்.\r\n\r\nகருப்புத் தொப்பி\r\n\r\nதொப்பிகளில் அதிகப் பயன்தருவதும் முக்கியமானதும் கருப்புத் தொப்பி எனலாம். ’விழிப்புணர்ச்சி’, ’எச்சரிக்கை’, ’ஜாக்கிரதை’ – இவை கருப்புத் தொப்பியின் அடையாளங்கள். சிந்தனை செப்பமாகச் செல்ல வேண்டுமெனில் கருப்புத் தொப்பி மனநிலை அவசியம். மற்றத் தொப்பிகளுக்கு இல்லாத ஒரு விஷேசம் கருப்புத் தொப்பிக்கு உண்டு. கருப்புத் தொப்பிக்கு நம் நரம்பு மண்டலத்திலேயே ஒரு உதவித்தளம் இருக்கிறது எனலாம். பரிணாம வளர்ச்சிக் காலத்தில் எதிரிகளிடமிருந்து இரவு பகல் என்று இல்லாமல் எந்த நேரமும் தன்னைக் காத்திட வேண்டி இருந்த மனிதனுக்குத் தேவையான ஜாக்கிரதை உணர்வுக்கு வேண்டிய ’கமேண்ட் சிஸ்டம்’ நரம்பு மண்டலத்தில் அமையப்பெற்றது. இந்த சிஸ்டம் இன்றளவும் எல்லா உயிரினங்களிலும் செயற்படுகிறது. உதாரணமாக சாலையில் பின்புறமிருந்து வரும் வண்டியைக்கூட கண நேரத்தில் உணர்ந்து நாம் விலகி ஓடுகிறோம் அல்லவா?\r\n\r\nஆகவே மனிதனுக்குக் கருப்புச் சிந்தனை இயல்பாக வரக்கூடிய ஒன்று. சிறிது பயிற்சி மட்டும் தேவை.\r\n\r\nபல வகைகளில் இச்சிந்தனை பயன்பட்டாலும் அலுவலகத்திலும் இல்லத்திலும் இதற்கு ஒரு முக்கிய இடம் உண்டு. முடிவுகளைச் செயற்படுத்தும் போது எழுப்பட வேண்டிய கேள்விகள் பல. உதாரணமாக\r\n

    \r\n

  • o இந்த நடவடிக்கையை எடுத்தால் என்ன விளைவு ஏற்படும்?
  • \r\n

  • o அவ்விளைவு ஏற்கத்தக்கது தானா?
  • \r\n

  • o அதற்குத் தேவையான பொருள் மற்றும் பிற ஆதாரங்கள் உள்ளனவா?
  • \r\n

\r\nஇக் கேள்விகளுக்குப் பதில்காண வேண்டுமெனில் கருப்புச்சிந்தனை மட்டுமே தேவை. சிவப்புச் சிந்தனை கூடவே கூடாது என்பது எளிதில் விளங்கும்.\r\n\r\nமஞ்சள் தொப்பி:\r\n\r\nமஞ்சள் தொப்பியோடு இணைத்துக் கொள்ள வேண்டிய மனப்பக்குவம் சாதக நம்பிக்கை(optimistic). இந்தவகைச் சிந்தனையினால் மஞ்சள் தொப்பி அணிபவர் தங்கு தடையில்லாமல் எல்லாவித சாத்தியக் கூறுகளையும் சிந்தனை செய்வார். வணிக உலகத்தின் தொலை நோக்க ஆதாயங்கள் (projection), விஞ்ஞானிகளின் எதிர்காலகணிப்புச் (futuristic) சிந்தனை ஆகியன இவ்வகையைச் சார்ந்தவைதாம்.\r\n\r\nஇச் சிந்தனையுடன் மதிப்பீடு (valuing) செய்யும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக ஸ்டெம் செல் ஆய்வு செய்யலாமா கூடாதா என்ற கேள்விக்கு- செய்யலாம் என்போரும், மத அடிப்படையில் செய்யக்கூடாது என்போரும், இயற்கைக்கு மாறாக செயற்படக்கூடாது என்போரும் உள்ள நிலையில் அவ்வாய்வின் பயனை மதிப்பீடு செய்யும் திறன் மிகுந்தோருடைய சேவை எவ்வளவு தேவைப்படுகிறது என்பது சொல்லாமலேயே விளங்கும்.\r\n\r\nகருப்புத் தொப்பி பாதகங்களைக் கூர்ந்து நோக்கும் பார்வை எனில் மஞ்சள் தொப்பி சாதகங்களைக் கூர்ந்து நோக்கும் பார்வை எனலாம்.\r\n\r\nபச்சைத் தொப்பி:\r\n\r\n”அவர் ஆள் எப்படி?”\r\n\r\nஎன்ற கேள்விக்கு\r\n\r\n”உற்சாகத்தின் ஊற்றுக்கண்”\r\n”மிக மிக ஆக்கத்திறன் மிக்கவர்”\r\n\r\nஎன்ற பதில் வருமேயானால் அவர் பச்சைத் தொப்பி ஆர்வலர் எனலாம்\r\n\r\nஇப்போது எல்லோரும் பச்சைத் தொப்பி அணிந்து கொள்ளுங்கள் என்று குழுத் தலைவர் கூறினால் அவர் தம்முடைய குழுவை உற்சாகமாகவும், சக்தியுடனும் சிந்திக்க வேண்டுகிறார் என்று பொருள். இரண்டு அம்சங்களை இங்குக் கவனிக்க வேண்டும். ஒன்று அலுவலகங்களில் விவாதங்கள் நடக்கும்போது பச்சைத் தொப்பிக்கு எனத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். அதேபோல் குறித்த நேரத்தில் சிந்தனையின் முடிவை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கவும் வேண்டும். இல்லை என்றால் விவாதம் முடிவில்லாத விவாத மேடை ஆகி விடும்.\r\n\r\nபச்சைத் தொப்பிக்கு மற்றும் ஒரு பயன்பாடும் உண்டு. பச்சைத் தொப்பியின் கீழ் சாத்தியப் படக்கூடியவையும் (possibilities) அனுமதிக்கப் படுகின்றன. சாத்தியப்படக் கூடியவைகளில் இருந்து ஆய்வுக் கொள்கைகள் பிறக்கின்றன. கொள்கைகளிலிருந்து ஆய்வுகளும் ஆய்வுகளிலிருந்து விடைகளும் விடைகளிருந்து திட்டங்களும் பிறக்கின்றன. ஆகையினால் இந்தவகைச் சிந்தனையில்லாமல் முன்னேற்றம் இல்லை.\r\n\r\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சீனர்களின் தொழில் நுட்பம் மேற்கத்திய நாடுகளை விட மிகவும் முன்னேறி இருந்தது. பிறகு அது நின்று போனது. இதற்குக் கூறப்படும் காரணம்: சீனர்கள் ஆய்வுக் கொள்கைகளை உருவாக்கவில்லை என்பதே.\r\n\r\nநீலத் தொப்பி:\r\n\r\nநீலத் தொப்பி மற்றத் தொப்பிகளின் ஒருங்கிணைப்பாளர். மற்றத் தொப்பிகளின் சிந்தனையைப் பற்றிச் சிந்திக்கும் சிந்தனையாளர். ஓர் இசைநிகழ்ச்சியை நடத்துபவர், யார் எந்த இசைக்கருவியை எப்போது இயக்க வேண்டும் என்று திட்டமிட்டுச் செயற்படுத்துவதைப் போல் நீலத் தொப்பி செயற்படுகிறது.\r\n\r\nஓர் ஆலோசனைக் கூட்டத்தின் தொடக்கத்தில் நீலத்தொப்பி கூட்டத்தின் விசயங்களைத் தீர்மானிக்கிறது; பின்புலத்தைக்(arisingsituation) கூறுகிறது; கூட்டத்தை நடத்தும்போது உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்ட தொப்பியைத் தவிர வேறு தொப்பியைப் பயன்படுத்தினால் அனுமதி மறுக்கிறது; கூட்ட முடிவில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிக்கையாகத் தயார் செய்கிறது.\r\n\r\nநீலத் தொப்பி பெரும்பாலும் தலைவர் அணிய வேண்டிய ஒன்று என்பதைக் கவனித்து இருப்பீர்கள். ஆனால் சில வேளைகளில் பிற உறுப்பினர்களும் அணியலாம். உதாரணமாக எந்த ஒரு கட்டத்திலும் உறுப்பினர் ஒருவர் கூட்ட நடைமுறை சம்பந்தமாகத் தேவைப்படும் மாறுதல்களைக் கூறும்போது நீலத் தொப்பியை அணியலாம்.\r\n\r\nமுடிவுரை:\r\n\r\nஆறு தொப்பிகள் உத்தி மிகமிக எளிமையான ஒன்று. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் ஒன்றுமில்லாததைப் பெரிதுபடுத்திப் பேசுவது போலவும் தோன்றும். அலுவலகங்களில், வீடுகளில் நம்மை அறியாமலேயே நாம் இவ்வாறு தான் நடந்து கொள்கிறோம் என்றெல்லாம் நினைக்கத் தோன்றும்.\r\n\r\nசிலபேர் விசயத்தில் இந்த அனுமானம் ஒரளவு சரியாக இருக்கக்கூடும். அவர்கள் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்ற பழமொழியை அறிந்தவர்கள் மட்டுமல்ல, அதைச் செயற்படுத்துபவர்களுமாவர். தீர விசாரிப்பதற்கு மனிதர்கள் தங்களுடைய பெருமிதம்–மனம்–உடல் (ego-mind-instinct) என்ற அச்சிலிருந்து விடுபடவேண்டும். அவ்வாறு விடுபடுவது என்பது சரியான பயிற்சி இருந்தாலொழிய இயலாது. தொப்பிகளை அணியும்போது அந்தந்தத் தொப்பிக்குத் தக்கவாறு நாம் பாத்திரமேற்று (role play) சிந்திப்பதால் அவ்வச்சிலிருந்து நம்மையும் அறியாமல் விடுபட்டுச் சிந்திக்க முடியும்.\r\n\r\nஅர.வெங்கடாசலம்

Check Also

எடை குறைய எளிய வழிகள் – II

இதற்கு முந்தைய கட்டுரையில் நெகடிவ் கலோரி உணவுகளை அதிகம் உட்கொள்வதின் மூலம் எடை குறைய வழி உண்டு என்று பார்த்தோம். ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *