Home > இலக்கியம் > திராவிட மொழிகள் – சில ஒப்புமைகள்

திராவிட மொழிகள் – சில ஒப்புமைகள்

உலகத்தில் உள்ள் பல மொழிக்குடும்பங்களில் திராவிட மொழிக்குடும்பமும் ஒன்று. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு,தோத(Thoda), கொத(Khotha), படக(Badaga),கோலமி(Kolami), பார்ஜி(Bargi), நைகி(Naiki), கோந்தி(Gondi), குவி(Kuvi), கோண்டா(Konda) , மால்டா(Malda), கட்பா(Gadba) போன்றவை இக்குடும்பத்தைச் சேர்ந்தவை.\r\n\r\nஇவற்றில், முக்கியமானவை, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகியவை. திராவிட மொழிகளில் மிகத் தொன்மையானதும், தனித்தன்மையுடையதும் ஆகும். முன்னைக்காலத்தில் தமிழகம் வடவேங்கடம் முதல் தென்குமரி வரை பரவியிருந்தது. இன்றும் தமிழகம் மட்டுமில்லது, இலங்கையின் சில பகுதிகள்,சிங்கப்பூர், மொரிஷியஸ் ஆகிய பகுதிகளில் பேசப்பட்டு வருகிறது. தமிழுக்கும் பிற திராவிட மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமைக்கு இரு வேறு காரணங்கள் ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகின்றன.\r\n\r\nவடநாட்டில் விளங்கிய மொழி வடமொழி என்பது போல தென்னகத்தில் பேசப்பட்டது தென்மொழி என்றும் அதுவே திராவிட மொழி என்று அழைக்கப்பட்டது என்றும், அதன் கிளைகளே தமிழ் தெலுங்கு கன்னடம் முதலியன, எனவேதான் பல ஒத்த சொற்களை இம்மொழிகளில் காண முடிகிறது என்பதும் ஒரு சாராரின் கருத்து.\r\n\r\nவடநாட்டினர் வணிகம் முதலிய காரணங்களுக்காகத் தெற்கு நோக்கி வந்தனர். தென்னாட்டின் பல பகுதிகளில் வழங்கப்பட்டு வந்த தமிழ் பல விதமாகத் திரிபு பெற்று கொச்சைத்தமிழாகப் பேசப்பட்டது. இவை வடவர் கலப்பினால் மென்மேலும் திரிந்து அதிக அளவில் வடமொழிச் சொற்களைக் கொண்டு புதிய மொழிகளாக உருப்பெற்றன. இம்மொழிகளுக்கு சில வடமொழி அறிஞர்கள் எழுத்துமொழி அமைத்தளித்தனர். இத்தகைய மொழிகள் தமிழின் வழி மொழிகளாகும் என்பது பிறிதொரு சாரார் கருத்து.\r\n\r\nஎதுவாயினும், இம்மொழிகளுக்கிடையே நிலவும் ஒற்றுமைகள் பலப்பல. அவற்றுள் சிலவற்றை இங்கு காணலாம்.\r\n\r\nதமிழும் கன்னடமும்:\r\n\r\nதமிழில் உள்ள பல வார்த்தைகள், சற்றே கொச்சையாகக் கன்னடத்தில் இன்றும் பயன்படுகின்றன. சொல்லப்போனால், ஹள கன்னடா எனப்படும் பழைய கன்னடம் தமிழுடன் மிக அதிக அளவில் ஒத்துள்ளது. ஹொச கன்னடா எனப்படும் புதிய கன்னடத்திலும் பெரும்பாலான தமிழ்ச் சொற்கள் சில மாற்றங்களுடன் பயன்படுத்தப்படுகின்றன.\r\n\r\nதமிழ்ச்சொற்கள் அப்படியே எடுத்தாளப்படுதல்:\r\n\r\nமனே (மனை), கொடு, காயி (காய்), கேளு (கேள்), நீனு (நீ), நானு (நான்), நம்ம (நம்), மகளு(மகள்), மக்களு (மக்கள்), மகா (மகன்), ஊரு (ஊர்), எல்லு (எல்லை), உடம்படுக்க ( உடன்படிக்கை). எண்ணே ( எண்ணெய்) நீரு (நீர்) என்பன இதற்கான சான்றுகள்.\r\n\r\n’ப’கரம் ‘ஹ’ வாகத் திரிதல்:\r\n\r\nதமிழில் ‘ப’வில் தொடங்கும் வார்த்தைகள் கன்னடத்தில் ‘ஹ’ வாக மாற்றம் பெற்றுப் பயன்படுத்தப்படுவதை கீழ்க்கண்ட எடுத்துக்காட்டுகளின் மூலம் விளக்கலாம்.\r\nபெண் (ஹெண்ணு), பால் (ஹாலு), பேன் (ஹேனு), பாடு (ஹாடு), பூ (ஹூவு), போராட்டம் (ஹோராட்டா), புளி (ஹுளி), பாழாயிற்று (ஹாளாயித்து), போ (ஹோகு)\r\n\r\n’வ’ என்பது ‘ப’ (BA)வாக மாறுதல்\r\n\r\nவா(பா), வந்து (பந்து), வாழை (பாழ), வாடகை (பாடக), வெண்ணெய் (பெண்ணே) முதலியவற்றில், தமிழில் ‘வ’கரத்தில் தொடங்கும் சொற்கள், ‘ப’கரமாகத் திரிந்து கன்னடத்தில் உபயோகப்படுத்தப்படுவதைக் காணலாம்.\r\n\r\nஇவை தவிர, தூய தமிழில் பயன்படுத்தப்படும் சில சொற்கள், சிற்சில மாற்றங்களுடனோ, மாற்றங்கள் இன்றியோ கன்னட மொழியில் வழங்கப் பெறுகின்றன. உதாரணமாக, திட்டினாள் என்பதைத் தூயதமிழில் வைதாள் எனலாம். இது, முதலெழுத்தான ‘வ’ கரம் ‘ப’கரமாகத் திரிந்து ‘பைத்தாளே’ என்று அம்மொழியில் பயன்படுத்தப்படுகிறது. தேரை அலங்கரிக்கும் பொம்மைகள் ‘தொம்பை’ எனப்படும். கன்னடத்தில் பொம்மையைத் தொம்பை என்றே கூறுகின்றனர். அடிகை என்பது சமையலையும், அடுக்களை என்பது சமையலறையையும் குறிக்கும் தமிழ்ச்சொற்கள். கன்னடத்திலும் இவை முறையே ‘அடிக’, ‘அடிகமனே’ எனப்படுகின்றன. மருந்து என்ற வார்த்தை தேய்ந்து ‘மத்து’ எனப்படுகின்றது. உருண்டை வடிவிலான தலையணை ‘திண்டு’ என்று தமிழில் கூறப்படுவதே, லேசாகத் திரிந்து ‘திம்பு’ என்ற சொல்லாக மாறியுள்ளது என்று எண்ணத்தோன்றுகிறது. ‘ஒள்ளிய’ என்ற தமிழ்ச்சொல் ‘சிறந்த’ என்ற பொருள் தரும். கன்னடத்தில் ‘ஒள்ளவரு’ என்றால் நல்லவர் என்று அர்த்தம் தருவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. ‘பார்’ என்பதற்கீடான கன்னடச் சொல் ‘நோடு’ , தமிழின் ‘நோக்கு’ என்ற சொல்லின் திரிந்த வடிவாகவும், ‘அக்கி’ ‘அரிசி’யின் திரிபாகவும் தோன்றுவதைக் காணலாம்.\r\n\r\nமேற்கண்ட எடுத்துக்காட்டுகள் தமிழுக்கும் கன்னடத்திற்கும் அசைக்கமுடியாத தொடர்பு உண்டு என்பதைத் தெளிவு படுத்துகின்றன.\r\n\r\nதமிழும் தெலுங்கும்:\r\n\r\nகன்னடம் போலவே தெலுங்கு மொழியும் தமிழுடன் நெருங்கிய தொடர்புடையது. அன்னம் (சோறு), போ, சாரு (ரசத்திற்கான தூயதமிழ்ச்சொல்லான சாறு), பாலு (பால்), நீலு (நீர்), அவ்வா (பாட்டி -முதியபெண்களைக் குறிக்கும் அவ்வை என்ற பழந்தமிழ்ச் சொல்), வங்காய (வழுதுணங்காய் என்ற, கத்திரிக்காயைக்குறிக்கும் பழைய சொல்லின் திரிபு), உள்ளி (வெங்காயம் -இன்னும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ளி என்றே வழங்கப் படுகிறது). மேலும் பருப்பு, பப்பு என்றும் மருந்து ‘மந்து’ என்றும் வெந்நீர் ‘வேநீலு’ என்றுமே குறிக்கப்படுகின்றன.\r\n\r\nதமிழ் மற்றும் மலையாளம் :\r\n\r\nதமிழுக்கும் மலையாளத்திற்கும் உள்ள ஒற்றுமையை ஒவ்வொன்றாய் விளக்கவேண்டியதே இல்லை. ஏனெனில், பழந்தமிழ் மன்னர்களாகிய சேரர் ஆண்டது கேரளமே ஆகும். அது மட்டுமல்ல, மலையாள எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்களும் ஏறத்தாழ ஒத்த வடிவின. தமிழுக்கே உரித்தான ‘ழ’ வும், மலையாள மொழியில் காணக்கிடைக்கிறது. தமிழ்மொழி மட்டுமே வழங்கி வந்த சேர தேசத்தில், பிற்காலத்தில் ஏற்பட்ட வடமொழிச் செல்வாக்கின் காரணமாக உருவான கலப்பு மொழியே மலையாளம். இம்மொழியை ‘தமிழ்த்தாய்க்கும் சம்ஸ்கிருதத்தந்தைக்கும் பிறந்த மகள்’ என்பர்.\r\n\r\nஎண்களில் காணக்கிடைக்கும் ஒற்றுமைகள்.\r\n\r\nசிலர், வடமொழியில் இருந்தே திராவிட மொழிகள் தோன்றின என்றும், வேறு சிலரோ, தெலுங்கும், கன்னடமும், வடமொழியின் கிளை மொழிகள் என்றும் கூறுவர். இது உண்மையில்லை என்பதற்கு, இம்மொழிகளில் உள்ள எண்களுக்கு இடையே காணும் ஒற்றுமையே சான்றாகும்.கீழ்க்கண்ட பட்டியல் இதை விளக்கும்.\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

\r\n

எண்கள் தமிழ் கன்னடம் தெலுங்கு
1 ஒன்று ஒந்து ஒக்கடி
2 இரண்டு எரடு எரடு
3 மூன்று மூறு மூடு
4 நான்கு (நாலு) நாகு நாலகு
5 ஐந்து ஐது ஐது
6 ஆறு ஆறு ஆறு
7 ஏழு ஏழு ஏடு
8 எட்டு என்டு எனிமிதி
9 ஒன்பது ஒம்பத்து தொம்மிதி*
10 பத்து ஹத்து பதி
100 நூறு நூறு நூறு
1/2 அரை அர அர்த
1/4 கால் கால் கால்

\r\n(* தமிழில் ஒன்பது என்பது பழங்காலத்தில் ‘தொன்பது’ எனப்பட்டது என்பது தேவநேயப்பாவாணர் கருத்து)\r\nஇவையும் சில மேற்கோள்களே.\r\n\r\nமேற்கண்ட இவை யாவும் சில உதாரணங்களேயன்றி, இவை மட்டுமே ஒற்றுமைகள் இல்லை. பற்பல ஆராய்ச்சியாளர்களின் இடைவிடாத ஆராய்ச்சி மூலம் இன்னும் பல தொடர்புகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. முழுமையான ஆராய்ச்சிகளைத் தொடர்வதன்வழியாக மேலும் ஒப்புமைகள் நிறுவப்படக்கூடும்.\r\n*****\r\n\r\nகி.பாலகார்த்திகா.

Check Also

கிட்டு ஒரு பன்முக ஆளுமை

வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது ஒரு புனிதப் பயணம்! ஈழத்து மண்ணில் ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *