Home > மருத்துவம்

மருத்துவம்

சிந்திக்கும் தொப்பிகள்

சிந்திக்கும் திறன் மனிதனுக்கு வாய்த்த செல்வங்களில் எல்லாம் தலையாயது. இந்தச் செல்வத்தின் அருமையை அறிந்த யாரும் தான் சிந்தனையின் எல்லையை அடைந்து விட்டதாக எண்ண மாட்டார்கள். பிறரை வாதத்தில் வெற்றி கொள்ள நினைப்பவர்கள் மட்டும் அவர்கள் வெற்றி பெறுகிற போது, தான் சிறப்பாகச் சிந்தித்து விட்டதாக கர்வம் கொள்வார்கள். இந்தமாதிரியான எண்ணம் ஒருவரிடம் இருக்குமேயானால் அவர் தன்னுடைய முழு சிந்தனைத் திறமையைப் பயன்படுத்தாது போகக்கூடும்.\r\n\r\n \r\n\r\nஇரண்டாவதாக, சிந்தனையைப் பாதிக்கும் மற்றொரு காரணி, நாம் சிந்திக்கும் போது செய்துகொள்ளும் குழப்பம் – உணர்ச்சிகள், தகவல்கள், தர்க்கங்கள், ...

Read More »

தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே

நிம்மதியான வாழ்வின் அறிகுறி இரவில் அமைதியாகத் தூங்க முடிவதுதான் என்றால் அது மிகையாகாது. பணம் மெத்தையை வாங்கலாம், ஆனால் உறக்கத்தை வாங்க முடியாது என்பது ஆன்றோர் வாக்கு. உடல் நலத்தின் ஆணிவேர், இரவில் ஆழ்ந்த உறக்கம்தான். ஆனால், இன்று மாறிவரும் சூழலில், சரியான உறக்கமின்மையால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\r\n\r\n \r\n\r\n \r\n\r\nதூக்கம் ஏன் தேவை?\r\n\r\nமனிதனின் தூக்கத்தில் பல நிலைகள் உள்ளன. முதல் நிலை, உறக்கத்திற்கும், விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலை. இதற்கடுத்த நிலை ‘டெல்டா’ எனப்படும் ஆழ்ந்த உறக்க நிலை. இந்நிலையிலேயே, கனவுகள் தோன்றுகின்றன. ...

Read More »

மன அழுத்தத்தை எதிர்கொள்வது எப்படி?

மன அழுத்தம் பல உடல் நோய்களைப் போல் ஒரு நோயே. ஆகையால் உடல் நோய்க்கு எவ்வாறு மருத்துவம் தேவையோ அதேபோல் மன அழுத்தத்திற்கும் தேவை. நமக்கு ஏற்பட்டிருப்பது மன அழுத்தம் தானா என முதலில் தெரிந்து கொள்ளுவது அவசியம்.\r\n\r\nமன அழுத்தம் எனில் என்ன?\r\n\r\nமிகவும் ஊறு விளைவிக்கக் கூடிய சூழ்நிலை அல்லது மனிதர்களுக்கு ஈடு கொடுக்கவேண்டிய நிலையில் உள்ள நாம், நம்மால் இனியும் ஈடுகொடுக்க முடியாது என்ற நிலை வரும்போது வெளிப்படுத்தும் பல அறிகுறிகள் தான் மனஅழுத்தம் எனப்படுகின்றது. அதாவது நாம் நம்முடைய உடல் ரீதியாகவும், ...

Read More »

எடை குறைய எளிய வழிகள் – II

இதற்கு முந்தைய கட்டுரையில் நெகடிவ் கலோரி உணவுகளை அதிகம் உட்கொள்வதின் மூலம் எடை குறைய வழி உண்டு என்று பார்த்தோம். இன்னும் சில எளிய வழிகளை இப்பொழுது பார்க்கப் போகிறோம்.\r\n\r\n \r\n\r\nதண்ணீர் வைத்தியம்:\r\n\r\nதண்ணீர் அதிகம் குடிப்பதன் மூலமும் எடையினைக் குறைக்க இயலும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கீழ்க்கண்ட முறையில் நீர் அருந்துவதின் மூலம் எப்படி எடையை இழக்கலாம் என நோக்குவோம்.\r\n\r\nதண்ணீர் அதிகம் அருந்துவதன் மூலம் எடை குறைய கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றுங்கள்.\r\n\r\n1. காலை எழுந்து பல் துலக்கியவுடன் பொறுக்கும் சூட்டில் ( டீ/காபி எந்தச் ...

Read More »

எடை குறைய எளிய வழிகள் – I

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலானவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சங்கடம், உடல் பருமன். அதிலும், பெண்கள் மத்தியில் அதிகமாக நடக்கும் விவாதம், எப்படி இளைப்பது என்பதுதான்.\r\n\r\n \r\n\r\nஉடல் பருமனால் ஏற்படும் தொந்தரவுகள் பல. முதலாவதாக, நாம் விரும்பிய வண்ணம் உடையணிய இயலாது. எந்த உடையும் பொருத்தமாகத் தோன்றாது. அடுத்து உடல் பருமனால், உடலில் பற்பல பிரச்னைகள் தோன்றலாம். குறிப்பாக, உயர் இரத்த அழுத்தமும், இதயக்கோளாறுகளும் வரும் வாய்ப்பு அதிகம். பொதுவாக, உடல் பருமனாக உள்ளவர்களுக்கு, மன அழுத்தம் ஏற்படும். கால்களால், உடலின் அதிக பருமனைத் தாங்க முடிவதில்லை ...

Read More »