Home > பொருண்மியம்

பொருண்மியம்

பங்குச் சந்தையின் வகைகள்

சென்ற கட்டுரையில், பலவகை நிறுவனங்களைக் குறித்து அறிந்து கொண்டோம். இப்பொழுது, நாம் பங்குச் சந்தையின் வகைகள் மற்றும் Demat Account, Trading Accountகள் குறித்துக் காணலாம்.\r\n\r\nபங்குச் சந்தையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவையாவன\r\n \r\n முதன்மைப் பங்குச் சந்தை (Primary Market) \r\n இரண்டாம் நிலை பங்குச் சந்தை (Secondary Market)\r\n\r\n \r\n\r\nமுதன்மைப் பங்குச் சந்தை\r\nஒரு நிறுவனம் நேரடியாகப் பங்குகளை வெளியிடுவதற்கு முதன்மைப் பங்குச் சந்தை என்று பெயர். பொதுப்பங்கு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் முதலியவை, நிதி திரட்டும்பொருட்டு, பங்குகளை வெளியிடுகின்றன. அந்நிறுவனத்தின் பங்குகளை ...

Read More »

பங்குச்சந்தை – II

சென்ற கட்டுரையில் முதலீடுகளின் சில வகைகளைப் பற்றியும், பங்கு என்றால் என்ன என்றும் பார்த்தோம். பங்குச்சந்தையைப் பற்றி மேற்கொண்டு தொடருமுன், பங்குச்சந்தை எப்போது தோன்றியது என்ற விவரத்தை அறிந்துகொள்ளலாம். \r\n14ஆம் நூற்றாண்டில், வெனிஸ் நகர ஆட்சியர்கள், தாம் பிற நாடுகளில் வாங்கிய கடன்களைத்திருப்பித் தர வசதியில்லாததால், மக்களிடையே கடன் பத்திரங்களை வினியோகித்தனர். அப்பத்திரங்கள் வியாபாரிகளாலும், நில உரிமையாளர்களாலும் வாங்கி, விற்கப்பட்டன. \r\n \r\nபின் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும், இத்தகைய பத்திரங்களை அரசின் பற்றாக்குறைகளின் போது வெளியிடத்தொடங்கின. பின், 1693ம் ஆண்டு தொடங்கி, லண்டனில் ...

Read More »

பங்குச்சந்தை – I

பங்குச்சந்தை என்றால் என்ன?\r\n\r\nபொருட்களை வாங்கவும் விற்கவும் பலரும் கூடுமிடம் சந்தை எனப்படுவது போல, பங்குகளை வாங்கவும் விற்கவுமான இடமே பங்குச் சந்தை எனப்படும். ஆனால், காய்கறிக்கோ, மற்ற பொருட்களுக்கோ தேவைப்படுவது போல, பங்குச்சந்தைக்கு ஒரு குறிப்பிட்ட இருப்பிடம்(Physical presence) தேவையில்லை. கணிணி மூலமாகவும், முகவர்கள்(Brokers) மூலமாகவும் பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். இன்றைய தேதியில் உலகப் பொருளாதாரம் பங்குச்சந்தையைப் பெரும்பாலும் சார்ந்துள்ளது என்றால் அது மிகையன்று. எனவே பங்குச் சந்தையைப் பற்றி நாம் அறிந்துகொள்வது இன்றியமையாதாகிறது.\r\n\r\n \r\n\r\nபங்குச்சந்தையைப் பற்றி அறிந்துகொள்ளுமுன் வேறு சிலவற்றைப் பற்றியும் ...

Read More »

செயற்பாட்டு முகாமைத்துவம் – ii

திட்டமிடல் –  செயற்படுத்தல் – கவனித்தல் – முன்னெடுத்தல் சுழற்சி\r\n\r\nமுதலிலே திட்டமிடல்-செயற்படுத்தல்-கவனித்தல்-முன்னெடுத்தல்(தி-செ-க-மு) சுழற்சி பற்றி:\r\n \r\n இந்தச் சுழற்சிகள் நுண்ணியவையாக இருக்க முடியாது. \r\n ஒரு சுழற்சிக்கான முயற்சி இன்னும் பல சுழற்சிகளுக்குக் காலாக இருக்கும். \r\n விரைவான பெற்பேறுகளை அடையலாம். \r\n முழுமையாகவும் முறையாகவும் எதனையும் திட்டமிடவும் செயற்படுத்தவும் உதவும். \r\n செய்யும் பணியிலிருந்து கற்றுக் கொள்ள உதவும். \r\n எவரும் எக் களத்திலும் பயன்படுத்தலாம். \r\n \r\n\r\n \r\n\r\nகுறிப்பாக என்ன இலக்கு என்பதைத் தீர்மானித்து விட்டால், அதனை அடைவதற்கான வழிமுறைகளாகப் (மூன்றாம் ...

Read More »

செயற்பாட்டு முகாமைத்துவம் – i

மூன்றே கேள்விகளும் சில சுழற்சிகளும்\r\n\r\nவழமையாக, வேலையில் ஓர் அணியினுடையதோ தனிப்பட்ட ஒருவரதோ செயல்றிறன் எதிர்பார்த்த அளவில இல்லாமக் குறைஞ்சு போயிருந்தா, அதைத் தேத்தி எடுக்கிறதுக்கு ஒரு செயற்றிட்டம்(project) போட்டு நாலு பேரை வைச்சுப் பழையநிலைக்குச் செயற்றிறனைக் கொண்டு வரக் கூடியதாயிருக்கும். அப்பிடியான திட்டங்களுக்காக அலுவலகத்திலே எப்ப பார்த்தாலும் திட்டஅணிக் கூட்டம் நடக்கும்.\r\n\r\n \r\n\r\nஅப்பிடியான கூட்டங்களுக்குப் போய் பொறுக்கிக் கொண்டு வந்த சில பயனுள்ள விதயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் எண்டு பாக்கிறேன்.\r\n\r\nஒரு சின்னக் குறிப்பு: இதில சொல்லப்போறவை உங்களைச் செப்பனிடவோ வேலை செய்யிற விதத்தை மேம்படுத்தவோ ...

Read More »

உங்கள் நேரத்தை நிர்வகியுங்கள்

மேசை முழுக்க கோப்புகள் குவிந்திருக்கின்றனவா? நேரம் போதவில்லை என்று தலையைப் பிய்த்துக்கொள்கிறீர்களா? இல்லத்தரசி முதல் பிரதம மந்திரி வரை அனைவருக்கும் ஒரே 24 மணி நேரம்தான். ஆனாலும், சிலர் எத்தனையோ சாதனை புரிகின்றனர்.\r\n\r\n \r\n\r\nசிலரோ சின்ன விஷயத்திற்கே நேரமில்லை என்று மூக்கால் அழுகின்றனர்.\r\n\r\nஏன்? நேரத்தை சரிவர நிர்வகிக்காததே இதற்குக் காரணம்.\r\n\r\nஇந்த அவசர யுகத்தில் நேர நிர்வாகம் (Time Management) என்பது மிகவும் இன்றியமையாதது.\r\n\r\nஅதைப்பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?\r\n\r\nநேர நிர்வாகம் குறித்த சில தவறான கருத்துகள் (Myth) நம்மிடம் நிலவுகின்றன.\r\n\r\n1. நேரத்தை சேமிக்க முடியாது.\r\n2. நேர நிர்வாகம் ...

Read More »