Home > பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

குறும்படம் விமர்சனம்

குழந்தைகள் சில விசயங்களை திரும்பத் திரும்ப செய்வார்கள் அவர்களுக்கு அலுப்பே இருப்பதில்லை. குழந்தைகளை உற்று கவனித்திருந்தால் நீங்கள் இதனை அறிந்திருக்க வாய்ப்புண்டு . அதிகபட்சமாக 24 முறைவரை செய்யக்கூடும் என்று சொல்கிறார்கள். பிறகே சற்றே அலுப்புதட்டி மற்ற ஒரு செயலுக்கு நகர்வார்கள். சில நேரங்களில் மற்றவர்களின் கவனம் கவர்வதற்காக செய்வார்கள் சிலநேரம் அவர்களின் உண்மையான ஆர்வத்தின் காரணமாகவும் செய்வார்கள். அவைபோலவே அவர்கள் கேள்விக்கணைகளும் தொடுப்பது வழக்கம். \r\n \r\n இது என்ன? \r\n ஏன் இப்படி இருக்கிறது? \r\n ஏன் அப்படி இல்லை? \r\n ...

Read More »

கவனம் கவரும் கவிஞர் – நா முத்துக்குமார்

கவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேரக்கூடிய வகையில் ஒன்றாக மாறிவிட்டிருக்கின்றன. தமிழர்களை திரைப்படப் பாடல்களிடமிருந்து பிரிப்பது என்பது சாத்தியமே இல்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் அவ்வப்போதற்கான பாடல்களுடன் ரசனையும் மயக்கமுமாக துணைக்கு அழைத்தப்படியாக இவ்வாழ்க்கைப் பயணத்தில் பயணிக்கிறோம். இளைஞர்கள் இசைக்கு முக்கியத்துவம் இசைக்கு மட்டுமே முக்கியத்துவம் என்று நினைக்கத் தொடங்கி இருக்கும் இக்காலத்திலும் வார்த்தைகளும் அதன் கவித்துவமும் கவனிக்கப்படக் கூடுமென சில கவிஞர்கள் பாடல் வரிகளுக்கிடையில் உழைப்பைக் கொடுக்கிறார்கள்.\r\n\r\n \r\n\r\nஅத்தகைய ஒரு இளம் கவிஞர்களில் ஒருவர் நா. முத்துக்குமார். ...

Read More »

நாடோடிகள் – விமர்சனம்

இயல்பான கதைகளை மீண்டும் திரைக்குக் கொண்டுவந்து கொண்டிருக்கும் வெகுசிலரில் தற்போது முன் நிற்பவர் சுப்ரமணியபுரம் சசிக்குமார். சுப்ரமணியபுரம் வெற்றிக்குப் பிறகு ”பசங்க” திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்ட சசிக்குமாருக்கு இப்படம் நடிப்புக்கான களத்திலும் தான் சளைத்தவர் இல்லை என்று நிரூபிக்க வாய்ப்பாகி இருக்கிறது. படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி கதை , திரைக்கதை , வசனம் , இயக்கம் என அனைத்தையும் மிக நன்றாகச் செய்திருக்கிறார். மிகக்கவனமாக கதாபாத்திரங்களை உருவாக்கி இருக்கிறார்.\r\n\r\n \r\n\r\nசின்னச்சின்ன கதபாத்திரங்களும் அவற்றின் குணநலனை வருகின்ற ஓரிரண்டு காட்சிகளிலேயே முழுமையாக தெரியப்படுத்தும் படியாக ‘நச்’ ...

Read More »

தமிழ்ச் சினிமாவின் எதிர்காலம்

திங்கள் முதல் வெள்ளி வரை ( சில பேருக்குச் சனிக்கிழமை கூட) மாடா உழைச்சு, வாரவிடுமுறை வந்தததும் அப்பாடான்னு முதுகு சாயும்போது சினிமா பார்த்தால் தேவலைன்னு தோணும்.\r\n\r\n \r\n\r\nஇது சராசரி மனிதனின் மன மற்றும் உடல் நிலையை பொறுத்தது. இப்படிப்பட்டவர்களை எந்தப் படம் சுவாரஸ்யமா 3 மணி நேரம் போகிறதே தெரியாம இருக்க செய்யுதோ அதுதான் அந்தத் திரைப்படம் உருவாக்க காரணமா இருந்தவர்களுக்கு முதல் வெற்றி, கலை ரீதியாக மட்டும் இல்லை, வர்த்தக ரீதியாகவும் கூட.\r\n\r\nசினிமாங்கறது ஒரு தொழிற்சாலை மாதிரி. எந்த ஒரு நபருமே ...

Read More »

தமிழ்த்திரையிசை – ஒரு பார்வை

ஆங்கிலேயர் வருகையினால் ஏற்பட்ட சில நன்மைகளில் ஒன்று திரைப்படக்கலை. அதற்கு முன்பு, புராண, இதிகாச நாடகங்கள், தெருக்கூத்துக்கள் போன்றவை நமது பொழுதுபோக்காக இருந்தன.\r\nபுராண இதிகாச நாடகங்கள் அனேகமாக கடவுளர்களைக் குறித்தவையாக இருந்தமையாலும், அப்பொழுது மக்களிடையே கர்னாடக இசை மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தமையாலும், கர்னாடக இசைப்பாடல்கள், நாடகங்களில் இடம் பெற்றன. தெருக்கூத்துகளில், மன்னர், வீரர்கள் மற்றும் சிறு தெய்வங்கள் குறித்த நாட்டுப்புறப்பாடல்கள் கோலோச்சின. எனவே, திரைப்படங்களிலும், அனேகமாக, கதாநாயகன், நாயகி பாடும் பாடல்கள் கர்னாடக இசையாகயும், நகைச்சுவைப் பாத்திரங்கள் பாடுபவை நாட்டுப்பாடல்களாகவும் விளங்கின.\r\n\r\n \r\n\r\nகலைகளுக்கும் பண்பாட்டிற்கும் ...

Read More »