Home > இலக்கியம்

இலக்கியம்

கிட்டு ஒரு பன்முக ஆளுமை

வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது ஒரு புனிதப் பயணம்! ஈழத்து மண்ணில் பல ஆண்டுகளாகப் பாய்ந்தோடும் தமிழ் மக்களின் குருதி வெள்ளத்தை இல்லாமற் செய்ய பிரித்தானிய அமைப்பொன்றின் சமாதானத் திட்டத்தைச் சுமந்து நகர்ந்து கொண்டிருந்தது! அது!\r\n\r\n \r\n\r\nவங்கக் கடலும் வெண்புறா பறக்கும் நாட்களுக்காக ஆதரவளித்து அக்கப்பலை தொட்டு அரவணைந்தது! இந்திய உளவுப்பிரிவின் நச்சுக் கண்கள் அதன் மேல் பாய்கின்றன. பாரதக் கடற்படை அகத் கப்பலைச் சுற்றி வளைக்கிறது. ஆயுத பலத்தால் அதை பாரதக் கப்பல் தன் ...

Read More »

போராட்ட கலைஞன் லெப். கேணல் சங்கர்

தாயகத்தின் கலையுலகில் குறிப்பாக வன்னியில் நன்கு அறியப்பட்டவர் லெப்.கேணல் சங்கர். மிகக் கம்பீரமான குரல் வளம் கொண்ட சங்கர் பதினைந்து ஆண்டுகளுக்கு கூடிய காலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு தன்னை முழுமையாக இணைத்துப் பயணித்தவர்.\r\n\r\n\r\n\r\nதாயகத்தின் கலையுலகில் குறிப்பாக வன்னியில் நன்கு அறியப்பட்டவர் லெப்.கேணல் சங்கர். மிகக் கம்பீரமான குரல் வளம் கொண்ட சங்கர் பதினைந்து ஆண்டுகளுக்கு கூடிய காலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு தன்னை முழுமையாக இணைத்துப் பயணித்தவர்.\r\n\r\nகலைத்துறை சார்ந்த செயற்பாடுகளில் கூடுதல் பங்குவகித்த சங்கர் ஆரம்பத்தில் முல்லைத்தீவு மாவட்ட கலைபண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளராக நன்கு ...

Read More »

சுவடுகள் – I. எவனுக்காய் அழுவது?

சம்பவம் நடந்த காலப்பகுதியைப் பற்றிய சுருக்கமான விவரிப்பு:\r\n\r\nஇது 1998 ஆம் ஆண்டின் தொடக்கப்பகுதி. வன்னியில் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை அமர்க்களமாக நடந்துகொண்டிருந்தது. தொடக்கத்திலேயே எதிரி நெடுங்கேணியைக் கைப்பற்றியிருந்தான். பின் கண்டிவீதி வழியாக நகர்ந்து புளியங்குளத்தைத் தாண்ட முடியாமல் திணறியதால் கண்டிவீதிக்குக் கிழக்குப்புறமாக காடுகளால் முன்னகர்ந்து மாங்குளம் – ஒட்டுசுட்டான் சாலையில் கரிப்பட்டமுறிப்பைக் கைப்பற்றியிருந்தான்.\r\n\r\n \r\n\r\nஅதன்பின் சண்டையின்றியே புளியங்குளம், பிறகு கனகராயன் குளம் என்பவற்றைக் கைப்பற்றியநிலையில், மாங்குளத்துக்காகச் சண்டைபிடித்துக் கொண்டிருந்தான். கண்டிவீதி வழியான நகர்வுகள் சரிவராத நிலையில் அவன் மாங்குளத்தைக் கைப்பற்ற கரிப்பட்டமுறிப்பிலிருந்து தொடர்ச்சியான நடவடிக்கைகளை ...

Read More »

திராவிட மொழிகள் – சில ஒப்புமைகள்

உலகத்தில் உள்ள் பல மொழிக்குடும்பங்களில் திராவிட மொழிக்குடும்பமும் ஒன்று. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு,தோத(Thoda), கொத(Khotha), படக(Badaga),கோலமி(Kolami), பார்ஜி(Bargi), நைகி(Naiki), கோந்தி(Gondi), குவி(Kuvi), கோண்டா(Konda) , மால்டா(Malda), கட்பா(Gadba) போன்றவை இக்குடும்பத்தைச் சேர்ந்தவை.

Read More »

நமக்கானதோர் மாலைப்பொழுது

\r\nநானெழுதும் ஒவ்வொரு வாக்கியத்துக்குமெதிரான பிரதி வாக்கியமொன்றை\r\nவனைந்துகொண்டிருக்கிறதொரு பறவை\r\nசொல்லொன்று பூமியில் வந்து தெறிப்பதற்கும்\r\nபனம்பழம் கொப்பறுந்து விழுவதற்குமான நிகழ்தகவினை\r\nஎந்தப் பின்னமும் உறுதிசெய்வதாயில்லை\r\n\r\n \r\n\r\nபருந்துநிழலும் படரா பாலைவெளிதாண்டி\r\nமணல்ரேகை கிழித்து உனக்கும் எனக்கும் மட்டுமேயான\r\nசிறிய, மிகச் சிறியதேயெனினும்\r\nபொழுதொன்றைக் கண்டடைய\r\nஎத்தனைமுறை கூர்ந்து பார்த்தாலும்\r\nஉனதந்தப் பாவனை நிராகரித்துவிடுகிறது\r\n’இந்தப் புன்னகை உனக்கானதல்ல..’\r\n\r\nகுளிக்கும்போது கோர்த்துக் கோர்த்துச் சேகரித்த வார்த்தைகள்\r\nகதவுதாண்டும் முன் உலர்ந்துவிடுகின்றன\r\nஈரத்தைப் போல விட்டுவரவேண்டியிருக்கிறது வார்த்தைகளையும்\r\nகுளியலறைக்குள்ளேயே

Read More »

கூட்டம்

வண்ணக்குழம்புகள் பூசிய முகங்கள் \r\n ஒன்றேபோல உடைகள் \r\n புடைத்த நரம்புகள் \r\n கனத்த குரல்கள் \r\n குறிக்கோள் தாங்கிய கண்மணிகள் \r\n வீசி உதறி குதித்து \r\n ஓரோர் பக்கமாய் நிமிர்ந்து நின்றனர். \r\n   \r\n பறவையைப்போல் \r\n சிறகுவிரித்துப் பறந்தான் ஒருவன் \r\n மஞ்சள் வண்ணம் ஒளிரும் முகம் \r\n சிரிக்கக் கண்டார்கள். \r\n \r\n   \r\n நிமிட இடைவெளியில் \r\n புகுந்தான் ஒருவன் \r\n திரண்ட தோளுக்குறியவனாய் \r\n கருமையும் செம்மையுமாய் \r\n வண்ணக்கலவை மிரட்ட \r\n ...

Read More »

திருக்குறளில் மனித வள முகாமைத்துவம்

சென்ற கட்டுரையில் முகாமைத்துவம் குறித்து, குறள் காட்டிய கருத்துக்களைக் கண்டோம். இந்தக் கட்டுரை, முகாமைத்துவத்துவத்தின் ஒரு கூறான மனித வள முகாமைத்துவம் ( Human Resource Management) குறளில் எவ்வாறு எடுத்துக் காட்டப்படுகிறது என்பதைக் காணப் போகிறோம்.\r\n\r\n \r\n\r\nஒரு நிறுவனத்திற்கு மிக முக்கியமான தேவை மனிதவளம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். இன்றைய கூட்டுறவு (corporate) உலகம், மனித வளத்தை சரியான முறையில் பயன்படுத்துவதே வெற்றிக்கு வழி என்பதை உணர்ந்து, அத்துறைக்கு அதிக பட்ச முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். வள்ளுவர் கூறும் பல கருத்துக்கள் ...

Read More »

திருக்குறளில் முகாமைத்துவம்

முகாமைத்துவம் (Management), என்ற படிப்பு இன்றைய தலைமுறையினரிடம் பிரபலமானது. MBA பட்டம் பெற்றவர்களைச் சமூகம் மிகுந்த மரியாதையுடன் நோக்குகிறது. இது ஏதோ, 20ம் நூற்றாண்டில், மேனாட்டரிஞர்கள் கண்டறிந்த கல்வி முறை என்று நாம் நினைக்கிறோம். உண்மை அதுவன்று. திருக்குறளிலும், இன்னும் பல சங்க இலக்கியங்களிலும், கம்ப ராமாயணத்திலும் ஏராளமான முகாமைத்துவம் குறித்த தத்துவங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இக்கட்டுரையில், இன்றைய முகாமைத்துவம் குறித்த கருத்துகள் திருவள்ளுவரால் எவ்வாறு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுள்ளன என்று கண்டு இன்புறுவோம்.\r\n\r\n \r\n\r\nமுகாமைத்துவத்துவத்தின் கூறுகள் யாவை?\r\n\r\nபொதுவாக ஐந்து பணிகளை முகாமைத்துவத்துவத்தின் ...

Read More »

தமிழிலக்கியம்

இன்று உலகத்தில் வாழும் மொழிகளில் மிகவும் பழமையானது தமிழ் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒரு மொழி செம்மொழி என்ற தகுதி பெற பழமை, கட்டமைப்புடைய இலக்கணம் என்ற அஸ்திவாரம், பண்பட்ட இலக்கியங்கள் என்ற மாளிகை ஆகிய அனைத்தும் தேவை.\r\n\r\n \r\n\r\nஇவை எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் மொழி, நம் தமிழ் மொழி.\r\n\r\nதமிழ் இலக்கியத்தின் காலத்தை வரையறுக்க இயலாது என்றாலும், ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.\r\n\r\nதமிழ் இலக்கியத்தை, சங்ககால இலக்கியங்கள், சங்கம் மருவிய கால இலக்கியங்கள் மற்றும் தற்கால (பிற்கால) இலக்கியங்கள் ...

Read More »

புதையல்

தமிழர்களிடம் ஒரு புதையல் இருக்கிறது, அது விலை மதிப்பில்லாத ரத்தினங்கள் நிறைந்தது. ஆனால் அதன் மதிப்பறியாமல் நாம் அடுத்தவரிடம் கையேந்துகிறோம் என்றால் அது எத்தகைய அசட்டுத்தனம்? ஆனால் உண்மையில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.\r\n\r\nநம்மிடம் உள்ள அத்தகைய புதையல் என்னவென்று யூகிக்க முடிகிறதா உங்களால்?\r\n\r\n \r\n\r\nஅது ஒரு நூல். நாம் எல்லோரும் அறிந்த, ஆனால் பயன்படுத்த மறந்த, மிகச்சிறந்த – நூல்.\r\n\r\nநீங்கள் துறவியா, இல்லறத்தவரா? உங்கள் தொழில் அரசியலா, மருத்துவமா இல்லை விவசாயமா? நீங்கள் மாணவரா, கல்வியாளரா, தூதுவரா, ஒற்றரா, அமைச்சரா? உங்கள் பேச்சுத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டுமா ...

Read More »