Home > அரசியல்

அரசியல்

தீர்வு பேச முயன்ற தயானை தீர்த்துக்கட்டிய மகிந்த

சிறிலங்கா அரசின் இனவாத கொள்கைகளையும் இனஅழிப்பு போருக்கு நியாயப்பாடுகளையும் உலகெங்கும் பரப்புரைசெய்து வந்த  ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் பிரதிநிதி தயான் ஜயதிலக மகிந்த சிந்தனையில் அடித்துச்செல்லப்பட்ட அடுத்த  மனிதராக அவரது பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டுள்ளார். \r\n மகிந்த தலைமையிலான அரசு மேற்கொண்டுவந்த சகல நடவடிக்கைகளையும் ஏதோ ஒரு விதத்தில் நியாயப்படுத்தி உலக  அரங்கில் அதற்கு ஆதரவு தேடிக்கொள்ளும் முயற்சியில் தயான் ஜெயதிலக சிங்களதேசத்தின் பிரசார பீரங்கியாக  செயற்பட்டுவந்தார் என்றால் மிகையில்லை. \r\n \r\n\r\n மகிந்தவின் கொள்கைகளுக்கு சரியாக பொருந்திய இந்த மனிதருக்கு ஏன் இவ்வாறு ...

Read More »

தேசியத்தைப் பறைசாற்றப்போகும் தாயகத்தி்ன் தேர்தல்

ரிமை இழந்தோம்.உடமையை இழந்தோம்.உணர்வை இழக்கலாமா…\r\nஉணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா...\r\n\r\nபெரும்பாலான ஈழத்தமிழர்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் இப்பாடல் வரிகள்தாம் இப்போது வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்  தேர்தல்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.\r\n\r\n \r\n\r\nஈழவிடுதலைக்கான ஆயுத போராட்டம் தோல்வியடைந்த நிலையில், மாற்றுதிட்டங்களை முன்வைத்து மக்களை வழிநடத்திச்  செல்லவேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் தற்போது தமிழ்த்தேசியச் சக்திகள் நிற்கின்றன.\r\n\r\nஆயுதப்போராட்டம் மூலமே இனப்படுகொலை ஒன்றைத் தடுக்கமுடியும் என்ற சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டு, அந்த வழியைத்  தேர்ந்தெடுத்த தமிழர்களின் சேனை அந்தப் பாதையில் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில்-\r\n\r\nஇன்று அதே ...

Read More »

யாழ்ப்பாணம்,வவுனியா தேர்தல்கள்: ஒரு பார்வை

தமிழர் தாயகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கான மாநகரசபை தேர்தல்களை எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி நடத்தப்போவதாக சிறிலங்கா தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. \r\n ஆளும் மகிந்த அரசு தனது ஏகோபித்த அரசியல் பலம் நாடெங்கும் பரந்துள்ளதை அறிவிப்பதற்கு துருப்புச்சீட்டாக இந்த தேர்தலை பயன்படுத்தவேண்டும் என்ற நோக்குடன் இந்த தேர்தலையும் பய்ன்படுத்தவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. \r\n \r\n இதற்காக, அரசியல் கூட்டணிகள் – தேர்தல் வாக்குறுதிகள் என எத்தனையோ விடயங்களை மக்கள் மத்தியில் விதைத்துவிட்டு அறுவடைக்காக காத்திருக்கும் மகிந்த அரசுக்கு முண்டுகொடுப்பதற்கென, ...

Read More »

“மகிந்த சிந்தனை”யில் மாயமான பொன்சேகா

போர் முடிவடைந்துவிட்டதாக சிறிலங்கா அரசினால் அறிவிப்பு விடுக்கப்பட்டு இரண்டு மாதங்களில், நாட்டின் இராணுவ இயந்திரத்தில் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள அதிரடி மாற்றங்கள் படையினர் உட்பட பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\r\n\r\nஇந்த மாற்றங்களில் மிகமுக்கியமானதாகக் கருதப்படும் முன்னாள் இராணுவதளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் பதவிப்பறிப்பு அரசுத்தலைவர் மகிந்தவின் பல்வேறு சிந்தனைகளை பட்டவர்த்தனமாக்கியுள்ளது.\r\n\r\n \r\n\r\nவிடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் சரத் பொன்சேகாவின் பங்களிப்பு எத்தகையது என்பது அனைவரும் அறிந்த விடயம். நடந்து முடிந்த போரில், வல்லரசுகளின் நிகழ்ச்சிநிரலைக் களத்திலே செயற்படுத்தும் பணியையே சரத்பொன்சேகா மேற்கொண்டிருந்தார்.\r\n\r\nஅதிலும் வெளிநாட்டுப் போரியல் ...

Read More »

உதயன்: உறுதியின் உறைவிடம்

யாழ். குடாநாட்டிலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழுக்கு ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாத்தமைக்கான உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.\r\n\r\nஇந்த விருது எந்த வகையிலும் உதயனுக்கு அங்கீகாரம் என்று கூறிவிட முடியாது. ஏனெனில், உதயன் நாளிதழின் சேவை என்பது அதற்கும் அப்பால் பல்லாயிரம் மடங்கு பெரியது. அதன் பணி பல்லாயிரம் மடங்கு துணிச்சல்மிக்கது. அதன் வளர்ச்சியும் பல்லாயிரம் மடங்கு விஸ்வரூபம் உடையது.\r\n\r\n \r\n\r\nஇத்துணை பெரிய வளர்ச்சியை அடைந்துள்ள உதயனின் கடந்த காலத்தைச் சற்றுத் திரும்பிப் பார்த்தால் அது நிச்சயம் – அது அன்றுமுதல் தமிழ்த்தேசியத்துக்காக ஓயாது குரல் கொடுத்த ...

Read More »

இனி ஈழத்தின் ‘இதயம்’: புலம்பெயர்வாழ் இளையோரின் பலம்

சுமார் 25 ஆயிரம் மாவீரர்களின் அர்ப்பணிப்புடன் 30 ஆண்டு காலம் நடைபெற்ற தமிழீழ விடுதலைப்போராட்டத்தை உலகமயமாக்கி தமிழர்களின் அடையாளம் என்ன என்பதை உலகின் மூலை முடுக்கெங்கும் எடுத்துக்கூறி –\r\n\r\nதமிழர்களின் வீரத்தினதும் தியாகத்தினதும் உச்சத்தை இன்னும் பல்லாண்டு காலம் இந்த உலகம் உச்சரிக்கும்வகையிலான ஓர் ஒப்பற்ற சூழ்நிலையை உருவாக்கி –\r\n\r\n \r\n\r\nதமிழினத்தின் அடுத்த கட்டப்போராட்டத்தை அடுத்த சந்ததியினரிடம் ஒப்படைத்துள்ளார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.\r\n\r\nபுலம்பெயர்ந்து வாழும் இளம் தலைமுறை அந்தப்பொறுப்பினைப் பெற்றுக்கொண்டு அதனை மிகவும் பக்குவமாக – உணர்வுபூர்வமாக – தமக்கு தமது இனத்தின் தலைவன் இதுவரை காலமும் ...

Read More »